ரூ.1,933/-க்கு வைஃபை வசதி; டூயல் சிம் கொண்ட ஸியோக்ஸ் எஸ்333.!

|

ஸியோக்ஸ் மொபைல்ஸ் நிறுவனம் இன்று அதன் சமீபத்திய வைஃபை அம்சம் செயல்படுத்தப்பட்ட மொபைலான 'எஸ்333 வை-ஃபை' சாதனத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த சாதனத்தில் வைஃபை அணுகலை எளிமையாக பெறும் வண்ணம், அதற்காகவே அர்ப்பணிக்கப்பட்ட பொத்தான் ஒன்றும் உள்ளது.

அடுத்த தலைமுறை மொபைல் அனுபவத்தை வழங்கும் இந்த சாதனம், மேலும் என்னென்ன அம்சங்கள் கொண்டுள்ளது, இக்கருவியின் விலை என்ன என்பது சார்ந்த விவரங்களை காண்போம். ஸ்மார்ட் யூஸர் அனுபவத்தை வழங்கும் 3டி யூஐ இடைமுகத்துடன் கூடிய, 2.4 அங்குல இன்ச் டிஸ்பிளே கொண்ட இக்கருவி ஒரு டூயல் சிம் அம்சம் கொண்ட மெல்லிய உடல் வடிவமைப்பை கொண்டுள்ளது.

பிரீமியம் ஸ்மார்ட் அம்சம்

பிரீமியம் ஸ்மார்ட் அம்சம்

இது டிஜிட்டல் கேமராவில் இருப்பது போல சில ஸ்மார்ட் அம்சங்கள் கொண்டு கட்டமைக்கப்பட்டுள்ளது. அதாவது, பேட்டரி சேவிங் மோட் கொண்ட 1750எம்ஏஎச் பேட்டரித்திறன், எல்ஈடி டார்ச் லைட் மற்றும் உள்கட்டமைக்கப்பட்ட சமூக ஊடக திறன்கள் என பல பிரீமியம் ஸ்மார்ட் அம்சங்களை இக்கருவி தன்னுள் நிரப்பியுள்ளது.

ஒரு மைல்கல்

ஒரு மைல்கல்

முன்பு குறிப்பிட்டபடி, இந்த சாதனத்தில் பிரத்யேக வைஃபை கீ ஒன்று உள்ளது. மேலும் இந்த புதிய சாதனத்தை அறிமுகப்படுத்திய, நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான தீபக் கபு "எஸ்333 சாதனத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள வைஃபை அம்சம் ஆனது பீச்சர் மொபைல் உற்பத்தியில் ஒரு மைல்கல் அம்சமாகும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

பட்ஜெட் விலை

பட்ஜெட் விலை

மேலும் "எங்கள் பீச்சர் போன்களின் அதே தத்துவத்தை பிரதிபலிக்கும் மறுபக்கம் சிறந்த செயல்பாடுகளை வழங்கும் அம்சங்களை உள்ளடக்கிய பட்ஜெட் விலை சாதனமாகவும் இக்கருவி திகழும்" என்றும் தீபக் கபு கூறியுள்ளார். சியோக்ஸ் எஸ்333 வைஃபை மொபைல் ஆனது வேகமான இண்டர்நெட் ப்ரவுஸிங்தனிற்கு உதவும் எட்ஜ் / ஜிபிஆர்எஸ் ஆதரவு உடன் வருகிறது. சேமிப்பு வாரியாக பார்க்கும் போது, இந்த தொலைபேசி 32ஜிபி அளவிலாக விரிவாக்க நினைவகம் கொண்டுள்ளது.

விற்பனைக்கு கிடைக்கிறது

விற்பனைக்கு கிடைக்கிறது

கூடுதலாக, இது பல மொழிகளையும், ஒரு வயர்லெஸ் எஃப்எம் ரேடியோ பதிவுகளையும் ஆதரிக்கிறது. இது தவிர, இந்த சாதனத்தில் ப்ரைவஸி லாக், ஆட்டோ கால் ரெக்கார்ட் மற்றும் எஸ்ஓஎஸ் (SOS) செயல்பாடு பொத்தான் ஒன்றும் கொண்டுள்ளது. இந்த பட்ஜெட்-நட்பு தொலைபேசி, பிளாக்+ஷாம்பெயின், பிளாக்+ரெட் ஆகிய வண்ணக் கலவைகளில் வருகிறது. ரூ.1993/- என்ற விலை நிர்ணயம் பெற்றுள்ளது மற்றும் இந்தியா முழுவதிலுமுள்ள முன்னணி சில்லறை கடைகளில், ஏற்கனவே விற்பனைக்கு கிடைக்கிறது.

Best Mobiles in India

English summary
Ziox Mobiles launches S333 Wi-Fi feature phone at Rs.1993. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X