ரூ.7,499/-க்கு டூயல் செல்பீ கேம்; பேஸ் அன்லாக் என அசத்தும் டூயோபிக்ஸ் எப்1.!

|

இந்திய மொபைல் தயாரிப்பாளரான ஸியோஸ் நிறுவனம் இன்று அதன் டூயல் செல்பீ ஸ்மார்ட்போன் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. டூயோபிக்ஸ் எப்1 (Duopix F1) என்று அழைக்கப்படும் இக்கருவி ஏற்கனவே நாடு முழுவதுமுள்ள முன்னணி சில்லறை விற்பனை கடைகளில் விற்பனைக்கு சென்றுள்ளது.

டூயோபிக்ஸ் எப்1: ரூ.7,499/-க்கு டூயல் செல்பீ கேம்; பேஸ் அன்லாக்.!

ஸியோஸ் டூயோபிக்ஸ் எப்1 ஸ்மார்ட்போனின் அம்சங்களை பொறுத்தமட்டில், 1280 x 720 என்கிற பிக்சல் தீர்மானம் கொண்ட 5 இன்ச் டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. மேலும் முழு லேமினேட் 2.5டி வளைந்த கண்ணாடியும் கொண்டிருக்கும்.

ரேம் 2ஜிபி

ரேம் 2ஜிபி

2ஜிபி அளவிலான ரேம் உடனான 1.3ஜிகாஹெர்ட்ஸ் க்வாட் கோர் செயலி மூலம் இயக்கப்படுகிறது. கைபேசியின் உள் சேமிப்பகமானது 16ஜிபி ஆகும். மேலும் இது மைக்ரோ எஸ்டி கார்டைப் பயன்படுத்தி விரிவாக்கும் ஆதரவும் கொண்டுள்ளது.

8 மெகாபிக்சல் + 2 மெகாபிக்சல்

8 மெகாபிக்சல் + 2 மெகாபிக்சல்

இமேஜிங் துறைகளில், ஆட்டோஃபோகஸ் மற்றும் எல்இடி ப்ளாஷ் கொண்ட 8 மெகாபிக்சல் பின்புற கேமரா உள்ளது. முன்பக்கம், 8 மெகாபிக்சல் + 2 மெகாபிக்சல் என்கிற டூயல் செல்பீ கேமரா கொண்டுள்ளது.

ஆண்ட்ராய்டு 7.0 நௌவ்கட்

ஆண்ட்ராய்டு 7.0 நௌவ்கட்

இது பொக்கே விளைவை ஆதரிக்கிறது மற்றும் எல்இடி ப்ளாஷ் ஒன்றும் கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 7.0 நௌவ்கட் கொண்டு இயங்கும் மற்றும் ஒரு 2400எம்ஏஎச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.

பேஸ் அன்லாக்

பேஸ் அன்லாக்

மிகவும் ஆச்சரியமளிக்கும் வண்ணம் இக்கருவி பேஸ் அன்லாக் அம்சத்தினை கொண்டுள்ளது. இந்த விலை புள்ளியில் இதுவொரு வரவேற்கத்தக்க அம்சமாகும். இணைப்பு ஆதரவுகளை பொறுத்தமட்டில், வைஃபை, ப்ளூடூத், யுஎஸ்பி டீதெரிங், ஜிபிஎஸ் மற்றும் ஹாட்ஸ்பாட் ஆகியவைகளை கொண்டுள்ளது.

இரண்டு வண்ண மாதிரி

இரண்டு வண்ண மாதிரி

முதன் இரண்டு - கருப்பு மற்றும் ஸ்மார்ட் வெள்ளை - வண்ண மாதிரிகளில் கிடைக்கும் ஸியோஸ் டூயோபிக்ஸ் எப்1ஸ்மார்ட்போன் அனைத்து ரூ.7,499/- என்ற புள்ளியை விலைக் குறியீடாக கொண்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Ziox Mobiles launches Duopix F1 with dual selfie cameras for Rs 7,499. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X