டூயல் ரியர் கேமராவுடன் அசத்தும் ஸியோஸ் டூயோபிக்ஸ் ஆர்1.!
ஸியோஸ் டூயோபிக்ஸ் ஆர்1 ஸ்மார்ட்போனில் 1.25ஜிகாஹெர்ட்ஸ் க்வாட்கோர் செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின்பு 1ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி உள்ளடக்க மெமரியைக் கொண்டுள்ளது.
இந்திய மொபைல் தயாரிப்பாளரான ஸியோஸ் நிறுவனம் இன்று அதன் டூயல் ரியர் கேமரா ஸ்மார்ட்போன் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது, ஸியோஸ் டூயோபிக்ஸ் ஆர்1 ஸ்மார்ட்போன் மலிவு விலையில் விற்பனைக்கு வந்துள்ளதால் பல்வேறு
வரவேற்பை பெற்றுள்ளது.
இந்தியா முழுவதும் முன்னணி சில்லறை கடைகளில் இந்த ஸியோஸ் டூயோபிக்ஸ் ஆர்1 ஸ்மார்ட்போன் கிடைக்கும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

டூயல் கேமரா:
இந்த ஸியோஸ் டூயோபிக்ஸ் ஆர்1 ஸ்மார்ட்போனில் விஜிஏ மற்றும 8மெகாபிக்சல் டூயல் ரியர் கேமரா வசதி இடம்பெற்றுள்ளது,
அதன்பின்பு 5மெகாபிக்சல் செல்பீ கேமரா வசதி கொண்டுள்ளது இந்த ஸியோஸ் டூயோபிக்ஸ் ஆர்1 ஸ்மார்ட்போன் மாடல்.

5-இன்ச் டிஸ்பிளே:
இக்கருவி 5-இன்ச் எச்டி ஐபிஎஸ் டிஸ்பிளே வடிவமைப்பை கொண்டுள்ளது, அதன்பின்பு (280 x 720) என்ற பிக்சல் தீர்மானம் இவற்றுள் இடம்பெற்றுள்ளது. மேலும் பல சிறப்பம்சங்களை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

க்வாட்கோர்:
ஸியோஸ் டூயோபிக்ஸ் ஆர்1 ஸ்மார்ட்போனில் 1.25ஜிகாஹெர்ட்ஸ் க்வாட்கோர் செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின்பு 1ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி உள்ளடக்க மெமரியைக் கொண்டுள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு 7.0 நௌவ்கட் இயங்குதளம்
இவற்றில் இடம்பெற்றுள்ளது.

எஃப்எம் ரேடியோ:
ப்ளூடூத், ஜிபிஎஸ், என்எப்சி, வைஃபை, எஃப்எம் ரேடியோ, 4ஜி எல்டிஇ, ஒடிஜி, மைக்ரோ யுஎஸ்பி போர்ட் போன்ற இணைப்பு ஆதரவுகளுடன் வெளிவந்துள்ளது ஸியோஸ் டூயோபிக்ஸ் ஆர்1 ஸ்மார்ட்போன்.

பேட்டரி:
இந்த ஸ்மார்ட்போனில் 2600எம்ஏஎச் பேட்டரி இடம்பெற்றுள்ளது, அதன்பின்பு வெள்ளை, தங்கம், கருப்பு மற்றும் நீல வண்ண விருப்பங்கள்
கொண்டுள்ளது ஸியோஸ் டூயோபிக்ஸ் ஆர்1 ஸ்மார்ட்போன்.

விலை:
ஸியோஸ் டூயோபிக்ஸ் ஆர்1 ஸ்மார்ட்போனின் விலை மதிப்பு பொறுத்தவரை ரூ.6,249-ஆக உள்ளது, மேலும் இந்த ஸ்மார்ட்போனின்
பல தகவல்கள் ஆன்லைனில் வெளிவந்துள்ளது.


Click it and Unblock the Notifications