மலிவு விலையில் ஸியோக்ஸ் அஸ்ட்ரா ஸ்டார் அறிமுகம்.!
இந்த ஸ்மார்ட்போன் 1ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக 32ஜிபி மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.
ஸியோக்ஸ் மொபைல்ஸ் நிறுவனம் தனது ஸியோக்ஸ் அஸ்ட்ரா ஸ்டார் என்ற ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்துள்ளது, அதன்பின்பு பல்வேறு அம்சங்கள் இந்த ஸ்மார்ட்போனில் இடம்பெற்றுள்ளது.தங்கம், கருப்பு மற்றும் நீல வண்ண விருப்பங்களில் இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல் கிடைக்கும்.
ஆண்ட்ராய்டு 7.0 நௌக்கட் இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது, மேலும் பல்வேறு இணைப்பு ஆதரவுகளுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்து.

ஆண்ட்ராய்டு 7.0:
ஸியோக்ஸ் அஸ்ட்ரா ஸ்டார் பொறுத்தவரை 1.3ஜிகாஹெர்ட்ஸ் குவாட்-கோர் செயலிக் கொண்டுள்ளது, அதன்பின் ஆண்ட்ராய்டு 7.0 நௌகட் இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

5-இன்ச் டிஸ்பிளே:
இக்கருவி 5-இன்ச் முழு எச்டி டிஎப்டி டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது, அதன்பின் ( 854 x 480)பிக்சல் தீர்மானம் கொண்டவையாக உள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

1ஜிபி ரேம்:
இந்த ஸ்மார்ட்போன் 1ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக 32ஜிபி மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

5எம்பி ரியர் கேமரா:
ஸியோக்ஸ் அஸ்ட்ரா ஸ்டார் ஸ்மார்ட்போனில் 5எம்பி ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் இதனுடைய செல்பீ கேமரா 5மெகாபிக்சல் எனக் கூறப்படுகிறது மேலும் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.


இணைப்பு ஆதரவுகள்:
ஜிபிஎஸ், வைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட், யுஎஸ்பி டைப்-சி 2.0, என்எப்சி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

விலை:
ஸியோக்ஸ் அஸ்ட்ரா ஸ்டார் ஸ்மார்ட்போனில் 2350எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் ஆதரவு கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் விலைப் பொறுத்தவரை ரூ.5,899-ஆக உள்ளது.


Click it and Unblock the Notifications