ரெட்மீ 4, கேலக்ஸி ஜே2-க்கு கடும் போட்டி; களமிறங்கியது அஸ்ட்ரா கர்வ் 4ஜி.!
"தொலைபேசி தொழில்நுட்பம், பாணி மற்றும் செயல்பாடு ஆகியவைகளின் கச்சிதமான கூட்டணி தான் இந்த ஸ்மார்ட்போன்"
உள்நாட்டு ஸ்மார்ட்போன் பிராண்ட் ஆன ஸியோஸ் (Ziox) மொபைல்கள், நேற்று (திங்களன்று) அதன் 3டி கர்வ்டு கிளாஸ் கொண்ட பட்ஜெட் சாதனமான அஸ்ட்ரா கர்வ் 4ஜி ஸ்மார்ட்போனை ரூ.7,299/-க்கு அறிமுகம் செய்துள்ளது.

ஆண்ட்ராய்டு 7.0 நௌவ்கட் கொண்டு இயங்கும் இந்த கைபேசி இப்போது கடைகளில் விற்பனைக்கு கிடைக்கிறது, ஒரு வருட ஸ்க்ரீன் ப்ரேக் உத்தரவாதத்துடன் வரும் இந்த ஸ்மார்ட்போன் சாம்பெயின் மற்றும் பிளாக் என்ற இரண்டு வண்ண மாறுபாடுகளில் மொத்தம் 21 மொழிகளுக்கான ஆதரவு மற்றும் எஸ்ஓஎஸ் செயல்பாடு கொண்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

டிஸ்பிளே
4ஜி வோல்ட் திறன் கொண்ட ஸியோஸ் அஸ்ட்ரா கர்வ் 4ஜி ஸ்மார்ட்போன் ஒரு 3டி வளைந்த கண்ணாடி கொண்ட 5 அங்குல எப்டபுள்யூவிஜிஏ (FWVGA) 854x480 பிக்சல் அளவிலான டிஸ்பிளே கொண்டுள்ளது.

2ஜிபி ரேம்
உடன் 1.3ஜிகாஹெர்ட்ஸ் க்வாட்-கோர் ப்ராஸசர் உடன் இணைந்த 2ஜிபி ரேம் மற்றும் 16 ஜிபி உள்ளடக்க நினைவகம் கொண்டு இயங்குகிறது. மைக்ரோஎஸ்டி அட்டை வழியாக 32 ஜிபி வரை மெமரி நீட்டிப்பு ஆதரவும் வழங்குகிறது.

5-எம்பி கேமரா
கேமராத்துறையை பொறுத்தமட்டில், இந்த ஸ்மார்ட்போன் பின்புறத்தில் 5-எம்பி கேமரா மற்றும் செல்பீக்களுக்கான ஒரு 2 மெகாபிக்சல் கேமரா கொண்டுள்ளது.

வைஃபை, ப்ளூடூத் மற்றும் ஜிபிஎஸ்
புதிய அஸ்ட்ரா கர்வ் 4ஜி சாதனத்தின் இணைப்பு விருப்பங்களை பார்த்தால், இக்கருவி வைஃபை, ப்ளூடூத் மற்றும் ஜிபிஎஸ் ஆகிய ஆதரவுகளை வழங்குகிறது. முக்கியமாக இந்த சாதனா இது ஒரு தொகுக்கப்பட்டபேக் கேஸ் உடன் வருகிறது.

பாணி மற்றும் செயல்பாடு
இந்த வெளியீட்டின் போது பேசிய தீபக் கபு, (சிஇஓ, ஸியோஸ் மொபைல்ஸ்) "இயக்கருவியின் சக்தி நிரம்பிய அம்சங்கள் கவர்ச்சிகரமான முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொலைபேசி தொழில்நுட்பம், பாணி மற்றும் செயல்பாடு ஆகியவைகளின் கச்சிதமான கூட்டணி தான் இந்த ஸ்மார்ட்போன்" என்று கூறினார்.

போட்டி
சியோமி நிறுவனத்தின் ரெட்மீ 4 (3 ஜிபி ரேம் + 32 ஜிபி சேமிப்பு), மோட்டோ சி பிளஸ் மற்றும் சாம்சங் கேலக்ஸி ஜே2 ஆகிய ஸ்மார்ட்போன்களுக்கு எதிராக இந்த ஸியோஸ் தொலைபேசி போட்டியிடும் என்பதில் சந்தேகமில்லை.


Click it and Unblock the Notifications