Home
Mobile

தூக்குங்குடா அந்த தங்கத்த.. ரூ.10,000 கூட இல்ல.. 6000mAh பேட்டரி.. 18W ஃபாஸ்ட் சார்ஜிங்.. எந்த மாடல்?

ஐடெல் நிறுவனத்தின் ஜெனோ சீரிஸ் மாடல்களின் கீழ் ஜெனோ 300 (ZENO 300) மாடல் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. ரூ.10,000 விலைக்கு வெளியான மாடல்களில் விலை ரூ.1,000 முதல் ரூ.3,000 வரையில் உயர்ந்துவரும் நேரத்தில் ரூ.10,000 பட்ஜெட்டை விட மலிவான விலைக்கு இந்த ஸ்மார்ட்போன் களமிறங்கி இருக்கிறது.

இந்தியாவில் பட்ஜெட் ஸ்மார்ட்போன்களுக்கு எப்போதும் வரவேற்பு இருக்கிறது. இதில் ஐடெல் மாடல்களும் அடங்கும். இதுபோக ஜெனோ என்று மற்றொரு பிராண்டின் கீழும் ஐடெல் நிறுவனம் ஸ்மார்ட்போன்களை களமிறக்கி வருகிறது. ஜெனோ மாடல்கள் எப்போதும் அடிமட்ட பட்ஜெட்டிலேயே வெளியாகி வருகின்றன.

தூக்குங்குடா அந்த தங்கத்த.. ரூ.10,000 கூட இல்ல.. 6000mAh பேட்டரி!

ஜெனோ 300 அம்சங்கள் (ZENO 300 Specifications): எச்டிபிளஸ் (HD+) ரெசொலூஷன் கொண்ட 6.56 இன்ச் (720 x 1612 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளேவை ஜெனோ 300 ஸ்மார்ட்போன் கொடுக்கிறது. இந்த டிஸ்பிளேவுக்கு 90Hz ரெஃப்ரெஷ் ரேட் கொடுக்கப்பட்டு உள்ளது. ஆண்ட்ராய்டு 16 கோ எடிஷன் (Android 16 Go Edition) ஓஎஸ் கிடைக்கிறது.

யுனிசோக் டி7100 ஆக்டா கோர் 12என்எம் (UNISOC T7100 Octa Core 12nm) சிப்செட்டை இந்த ஜெனோ 300 ஸ்மார்ட்போன் கொடுக்கிறது. மாலி ஜி57 எம்பி1 ஜிபியு (Mali G57 MP1 GPU) கிராபிக்ஸ் கார்டு கொடுக்கப்பட்டு இருக்கிறது. பட்ஜெட் மாடலாக இருப்பதால், 4 ஜிபி ரேம் + 64 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் மட்டும் அறிமுகமாகி இருக்கிறது.

கூடுதல் மெமரி கொடுக்க மைக்ரோஎஸ்டி கார்டு (microSD Card) சப்போர்ட் கொடுக்கப்பட்டு இருக்கிறது. ஆகவே, டூயல் சிம் சிலாட் (Dual SIM Slot) மற்றும் மைக்ரோஎஸ்டி கார்டு சிலாட் (microSD Card Slot) கொண்ட மாடலாக இந்த ஜெனோ 300 ஸ்மார்ட்போன் கிடைக்கிறது. 8 எம்பி ரியர் கேமரா கொடுக்கப்பட்டு இருக்கிறது. 5 எம்பி செல்பீ கேமரா கிடைக்கிறது.

இந்த பட்ஜெட்டிலும் 18W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 6000mAh பேட்டரியை இந்த ஜெனோ 300 ஸ்மார்ட்போன் பேக் செய்துள்ளது. சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side Mounted Fingerprint Sensor) மட்டுமல்லாமல், இன்பிராரெட் சென்சார் (Infrared Sensor) கொடுக்கப்பட்டு உள்ளது. 3.5 எம்எம் ஆடியோ ஜாக் (Audio Jack) கொடுக்கப்பட்டு இருக்கிறது.

இந்த ஜெனோ 300 ஸ்மார்ட்போனுக்கு எம்ஐஎல்-எஸ்டிடி 810எச் (MIL-STD-810H) சர்டிபிகேஷன் கிடைக்கிறது. ஆகவே, மிலிட்டரி கிரேடு டியூரபிலிட்டி கொண்ட மாடலாக இருக்கிறது. கனெக்டிவிட்டிகளை பார்க்கையில், 4ஜி ஸ்மார்ட்போன்களில் கிடைக்கும் டூயல் 4ஜி வோஎல்டிஇ (Dual 4G VoLTE) உள்ளது. மேலும், வை-பை 801.11 ஏசி (Wi-Fi 802.11 ac) கிடைக்கிறது.

ப்ளூடூத் 5.2 (Bluetooth 5.2), ஜிபிஎஸ் (GPS) மற்றும் குளோனாஸ் (GLONASS) கிடைக்கிறது. யூஎஸ்பி டைப்-சி சார்ஜிங் (USB Type-C Charging) போர்ட் கிடைக்கிறது. இந்த ஜெனோ 300 ஸ்மார்ட்போனின் 4 ஜிபி ரேம் + 64 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.9,649ஆக மட்டுமே இருக்கிறது. ஆகவே, ரூ.10,000 பட்ஜெட்டுக்குள் 6000mAh பேட்டரி ஸ்மார்ட்போனை வாங்க முடியும்.

லாவெண்டர் பர்பிள் (Lavender Purple), சில்வர் மிஸ்ட் (Silver Mist) மற்றும் கிளாசிக் பிளாக் (Classic Black) ஆகிய கலர்களில் கிடைக்கிறது. இப்போது, அமேசான் (Amazon) தளத்தில் வாங்கி கொள்ளலாம். ஜெனோ ஸ்மார்ட்போன்கள் ஐடெல் நிறுவனத்தின் சப்-பிராண்ட் மாடல்களாக இருக்கின்றன. ஆகவே, அதில் கிடைக்கும் பீச்சர்களை இதிலும் எதிர்பார்க்கலாம்.

Best Mobiles in India

English summary
ZENO 300 With 4GB RAM 6000mAh Battery Launched in India Under Rs 10000 Check Specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X