Home
Mobile

யாரு சாமி அவன்.. ரூ.9999 பட்ஜெட்ல 5000mAh பேட்டரி.. 15W ஃபாஸ்ட் சார்ஜிங்.. புது ZENO போன்.. எந்த மாடல்?

இந்திய மார்கெட்டில் ஜெனோ 200 (ZENO 200) ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலை பிரியர்களுக்கு ஏற்ப வெளியாகி இருக்கிறது. மலிவான விலைக்கு 5000mAh பேட்டரி, 15W ஃபாஸ்ட் சார்ஜிங் மட்டுமல்லாமல், ஆக்டா கோர் சிப்செட், IP65 ரேட்டிங் உள்ளிட்ட பீச்சர்களை கொடுத்துள்ளது. இந்த ஜெனோ 200 ஸ்மார்ட்போனின் முழு விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

ஐடெல் நிறுவனத்தின் மற்றொரு பிராண்ட்டான ஜெனோ, இந்தியாவில் மலிவான விலைக்கு ஸ்மார்ட்போன்களை களமிறக்கி வருகிறது. ரூ.10,000 பட்ஜெட்டுக்குள் மட்டுமே இந்த ஸ்மார்ட்போன்களில் விலை இருக்கிறது. இருப்பினும், டிசைனில் ரூ.20,000 விலை கொண்ட மாடல்களுக்கு நிகராக லுக் கொடுக்கிறது. இதில் ஜெனோ 200 சேர்ந்துள்ளது.

யாரு சாமி அவன்.. ரூ.9999 பட்ஜெட்ல 5000mAh பேட்டரி.. 15W சார்ஜிங்!

ஜெனோ 200 அம்சங்கள் (ZENO 200 Specifications): ஆக்டா கோர் யுனிசோக் டி7250 12என்எம் (Octa Core UNISOC T7250 12nm) ப்ராசஸர் மற்றும் மாலி ஜி57 எம்பி1 ஜிபியு (Mali G57 MP1 GPU) கிராபிக்ஸ் கார்டை இந்த ஜெனோ 200 ஸ்மார்ட்போன் கொடுத்துள்ளது. 720 x 1600 பிக்சல்களுடன் எச்டிபிளஸ் (HD+) ரெசொலூஷன் கொண்ட 6.75 இன்ச் எல்சிடி (LCD) டிஸ்பிளேவை கொடுத்துள்ளது.

இந்த டிஸ்பிளேவுக்கு 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 240Hz டச் சாம்பிளிங் ரேட் கிடைக்கிறது. டைனாமிக் பார் (Dynamic Bar) சப்போர்ட் கிடைக்கிறது. ஆகவே, பேட்டரி, வாய்ஸ் கால்கள் உள்ளிட்ட பேசிக் நோட்டிபிகேஷன்களை டைனாமிக் பாரில் பார்க்க முடியும். 590 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொண்ட மாடலாக இந்த ஜெனோ 200 ஸ்மார்ட்போன் இருக்கிறது.

4 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி மெமரி கொடுத்துள்ளது. பட்ஜெட் மாடல்களில் வழக்கமாக கிடைக்கும் 2 டிபிக்கான மைக்ரோஎஸ்டி (microSD) சப்போர்ட் கிடைக்கிறது. ஆண்ட்ராய்டு 16 கோ எடிஷன் (Android 15 Go Edition) கிடைக்கிறது. எப்/1.85 அபெர்சர் கொண்ட 13 எம்பி மெயின் கேமரா மற்றும் எல்இடி பிளாஷ் கிடைக்கிறது. 5 எம்பி செல்பீ கேமராவை கொடுக்கிறது.

15W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 5000mAh பேட்டரியை இந்த ஜெனோ 200 ஸ்மார்ட்போன் கொடுக்கிறது. 3.5 எம்எம் ஆடியோ ஜாக் (Audio Jack) மற்றும் டிடிஎஸ் சவுண்ட் (DTS Sound) கிடைக்கிறது. சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted Fingerprint Sensor) உள்ளது. இந்த பட்ஜெட்டுக்கு ஏற்ப IP65 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ட் கிடைக்கிறது.

மேலும், மிலிட்டரி கிரேடு டியூரபிலிட்டி (Military Grade Durability) கொடுக்க எம்ஐஎல்-எஸ்டிடி-810எச் (MIL-STD-810H) சர்டிபிகேஷனை கொடுத்துள்ளது. டூயல் 4ஜி வோஎல்டிஇ (Dual 4G VoLTE), வை-பை 802.11 (Wi-Fi 802.11), ப்ளூடூத் 5.2 (Bluetooth 5.2), ஜிபிஎஸ் (GPS) மற்றும் குளோனாஸ் (GLONASS) உள்ளிட்ட கனெக்டிவிட்டிகளை இந்த ஜெனோ 200 ஸ்மார்ட்போன் கொடுத்துள்ளது.

ஜெனோ 200 விலை (ZENO 200 Price): இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ.9,999ஆக இருக்கிறது. இது அறிமுக விலையாக இருக்கிறது. அமோசன் (Amazon) தளத்தில் ஆர்டர் செய்து கொள்ளலாம். ரூ.10,000 பட்ஜெட்டுக்குள் ஸ்மார்ட்போன் தேடிக் கொண்டிருக்கும் ஸ்மார்ட்போன் பிரியர்களுக்கு ஏற்ற மாடாக இந்த ஜெனோ 200 ஸ்மார்ட்போன் இருக்கிறது.

Best Mobiles in India

English summary
ZENO 200 With 5000mAh Battery 15W Charging Launched in India Under Rs 10000 Check Specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X