ஆற்றல் வாய்ந்த பேட்டரியுடன் ஸென் டியூவல் சிம் மொபைல்போன்!

அந்த விருப்பத்தினை அறிந்து வைத்திருக்கும் ஸென்நிறுவனம் நிறைய டியூவல் சிம் வசதி கொண்ட மொபைலைக் கொடுத்திருக்கிறது. அந்த பட்டியலில் இனி ஸென்எக்ஸ்-400ஐ என்ற மொபைலும் சேரப் போகிறது.
டிஎப்டி தொழில் நுட்பம் கொண்ட 1.5 இஞ்ச் திரை கொண்டதாக தயாரிக்கப்பட்டுள்ளது. மிருதுவான விரல்களில் தொட்டு இயக்க, இதில் மிருதுவான கீப்பேடும் உள்ளது.
இரண்டு சிம் கார்டு நெட்வொர்கையும் இயக்கும் அளவிற்கு ஆற்றல் வாய்ந்த 1,800 எம்ஏஎச் பேட்டரி இதில் பொருத்தப்பட்டுள்ளது. இதனால் ஒரு முறை சார்ஜ் செய்தாலே 10 மணி நேரம் தொடர்ந்து டாக் டைம் கொடுக்கிறது.
இன்றை அவசர உலகில் கேட்பதற்கும், பார்ப்பதற்கும் இனிமையான விஷயம் என்பது மிகவும் குறைவுதான். இதனால் மொபைல்களில் பொழுதுபோக்கு அம்சம் என்பது முக்கிய பங்கு வகிக்கிறது. அந்த வைகையில், இந்த மொபைல் மீடியா ப்ளேயர் வசதிக்கு ஏதுவாக இருக்கிறது. இதனால் வாடிக்கையாளர்களால் வீடியோ மற்றும் ஆடியோ வசதியைப் பெற முடியும்.
அனைத்து தகவல்களையும் ஞாபகத்தில் வைத்திருப்பது மிகவும் கடினம்தான். அந்த வகையில், எக்ஸ்-400ஐ மொபைலில் உள்ள 2ஜிபி மெமரி வசதி இந்த கடினத்தைக் குறைக்கின்றது. ஸென்எக்ஸ்-400ஐ மொபைலில் உள்ள 3.5 எம்எம் ஆடியோ ஜேக்கை உபயோகித்து மகிழலாம்.
தகவல்களை உடனுக்குடன் பகிர்ந்து கொள்ள புளூடூத் சவுகரியம் உள்ளது. கணினியில் உள்ள விஷயங்களை அதோடு விட்டுவிடாமல் மொபைல்களில் பதிவேற்றம் செய்ய இருக்கவே இருக்கிறது யூஎஸ்பி வசதி.
இந்த போன் பார்ப்பதற்கு மிகவும் எளிமையான தோற்றம் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. ஸென்எக்ஸ்-400ஐ மொபைல் ரூ.1,700 விலைக்கும் அதிகமாக இருக்காது என்று அனுமானிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications