அல்ட்ரோபோன் யு1 மற்றும் நிஞ்சா 3 எ57 - ஒரு ஒப்பீடு

ஆன்ட்ராய்டு ஸ்மாரட்போன்கள் உலக அளவில் மட்டும் அல்லாமல் இந்திய சந்தையிலும் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. அதிலும் டூவல் சிம் வசதி கொண்டு மலிவு விலையில் வரும் ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன்கள் இந்திய சந்தையில் 61 சதவீத பங்கைப் பெற்றிருக்கின்றன.
மேலும் இந்தியாவைச் சேர்ந்த மொபைல் நிறுவனங்களான மைக்ரோமேக்ஸ், கார்போன், சென்மொபைல் மற்றும் இன்டெக்ஸ் நிறுவனங்கள் இது போன்ற டூவல் சிம் வசதி கொண்ட ஆன்ட்ராய்டு போன்களை மலிவு விலையில் இந்திய ரசிகர்களுக்கு வழங்கி வருகின்றன.
அந்த வகையில் சென் மொபைல் நிறுவனம் அல்ட்ராபோன் யு1 என்ற ஆன்ட்ராய்டு போனை ரூ.4,999க்கு களமிறக்கி இருக்கிறது. அதுபோல் மைக்ரோமேக்ஸ் எ57 நிஞ்சா 3 என்ற ஆன்ட்ராய்டு போனை ரூ.4,750க்கு களமிறக்கி இருக்கிறது. இந்த இரண்டு போன்களுக்கும் இடையே இந்திய சந்தையில் கடும் போட்டி இருக்கும் என்று நம்பப்படுகிறது.
ஏனெனில் இந்த இரண்டு போன்களும் ஏறக்குறைய சம அளவிலான தொழில் நுட்ப வசதிகளைப் பெற்றுள்ளன. குறிப்பாக அல்ட்ராபோன் யு1 மற்றும் நிஞ்சா 3 எ57 போன் ஆகிய இரண்டு போன்களும் 3.5 இன்ச் அளவில் ஒரு கப்பாசிட்டிவ் தொடுதிரையைக் கொண்டுள்ளன.
ப்ராசஸரைப் பொருத்தவரை யு1 போன் 1ஜிஹெர்ட்ஸ் கோர் ப்ராசஸரையும், நிஞ்சா 1ஜிஹெர்ட்ஸ் குவல்காம் ப்ராசஸரையும் கொண்டிருக்கின்றன. இதில் நிஞ்சா போனில் இருக்கும் ப்ராசஸர் மல்டி டாஸ்கிங், கேமிங் மற்றும் கிராபிக்ஸ் போன்ற வேலைகளைச் செய்யும் அளவிற்கு திறன் கொண்டுள்ளது.
இரண்டு போன்களுமே ஆன்ட்ராய்டு 2.3 ஜிஞ்சர் பிரீடு இயங்கு தளத்தில் வருகின்றன. அதோடு இந்த போன்களில் இருக்கும் சேமிப்பை 32ஜிபி வரை அதிகரிக்க மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் வசதியும் உள்ளது. ஆனால் யு1 போன் 512எம்பி ரேமையும், நிஞ்சா 265 ரேமையும் கொண்டுள்ளது.
கேமராவைப் பொருத்தவரை இந்த இரண்டு போன்களுமே 3எம்பி பின்பக்க கேமராக்களைக் கொண்டுள்ளன. ஆனால் இரண்டுமே முகப்புக் கேமராக்களைக் கொண்டிருக்கவில்லை. மேலும் இணைப்பு வசதிகளைப் பொருத்த மட்டில் இரண்டு போன்களும் டூவல் சிம், 3ஜி, வைபை, ப்ளூடுத் மற்றும் மைக்ரோ யுஎஸ்பி போர்ட் ஆகியவற்றைக் கொண்டுள்ளன.
யு1 போன் 5 மணி நேர இயங்கு நேரத்தையும், நிஞ்சா போன் 8.5 மணி நேர இயங்கு நேரத்தையும் கொண்டிருக்கின்றன. இந்த இரண்டு போன்களுமே விலைகளுக்குத் தகுந்தவாறு ஏராளமான தொழில் நுட்ப வசதிகளைக் கொண்டிருக்கின்றன.
நிஞ்சா போனில் மைசோன், மைஎஸ்எம்எஸ், மைஸ்டோர், க்ராவிட்டி சென்சார், ஹூக் அப் அப், பேஸ்புக் மற்றும் எப்எம் ரேடியோ போன்ற அப்ளிகேசன்கள் உள்ளன. இந்த இரண்டு போன்களும் சம அளவிலான தொழில் நுட்ப வசதிகளைக் கொண்டிருந்தாலும் ப்ராசஸரைப் பொருத்த மட்டில் நிஞ்சா போன் சற்று உயர்ந்து இருக்கிறது.


Click it and Unblock the Notifications