Home
Mobile

அனைத்து அம்சங்களுடன் பவர்பேக்டு போன்: ஸென் அறிமுகம்

By Super
அனைத்து அம்சங்களுடன் பவர்பேக்டு போன்: ஸென் அறிமுகம்
டெல்லி: குறைந்த விலை கொண்ட மார்க்கெட்டை குறிவைத்து அனைத்து பவர்பேக்டு அம்சங்கள் கொண்ட மொபைல்போனை ஸென் மொபைல்ஸ் அறிமுகப்படுத்தியுள்ளது.

ஸென் எம்72 என்ற பெயருடன் சந்தையில் களமிறங்கியுள்ள இந்த போனில் இரண்டு சிம் கார்டு பொருத்தும் வசதி கொண்டுள்ளது. இந்த போன் 2.4 இஞ்ச் திரையுடன் வந்துள்ளது. இந்தபோன் சிவப்பு மற்றும் வெள்ளை ஆகிய இரண்டு நிறங்களை கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளதால், கண்ணை கவர்கிறது. பேனலை மாற்றிக்கொள்ளவும் முடியும்.

பட்ஜெட் போன் என்று கூறிவிடக்கூடாது என்பதில் ஸென் மொபைல்ஸ் காட்டியுள்ள அக்கறை போனை பார்த்தவுடன் தெரிகிறது. 1.3 மெகாபிக்செல் கொண்ட ஆற்றல்வாய்ந்த கேமரா, வீடியோ ரெக்கார்டிங், எம்பி-3, எம்பி-4 பார்மெட் பைல்களில் இசையை கேட்கும் வசதி மற்றும் எப்எம் ரேடியோ ஆகியவற்றுடன் 3.5 மிமீ ஆடியோ ஜாக்கும் உண்டு.

தவிர, 1,800 mAh திறன் கொண்ட பேட்டரி 40 நாட்கள் ஸ்டான்ட்-பை மோடில் இருக்கும் திறன் கொண்டது. மேலும், டியூவல் எல்இடி டார்ச் லைட்டும் கொண்டுள்ளது.

ஸென் எம்72வின் சிறப்பம்சங்கள்:

திருடினால் கண்டுபிடிக்கும், ஆன்ட்டி தெப்ட் மொபைல் டிராக்கர் தொழில்நுட்பம்

புளூடூத்

அலார்ம் கிளாக்

சவுண்டு ரெக்கார்டர்

லவுடு ஸ்பீக்கர்

இந்தி மொழியிலும் இயக்கும் வசதி

பொதுவாக டியூவல் சிம் கார்டு கொண்ட பட்ஜெட் போன்களில், இதர அம்சங்கள் குறைவாக இருக்கும். ஆனால், ஸென் எம்-72 போனில் எல்லாம் நிறைவாக இருக்கிறது.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X