ஜெட் வேகத்தில் வரும் ஸென் மொபைல்!

மார்க்கெட்டில் டியூவல் சிம் கார்டு வசதிகொண்ட போன்களுக்கு அதிக மவுசு உள்ளது.
இந்த மொபைல்களில் இரண்டு நெட்வொர்க் வசதியினை ஒரே நேரத்தில் பெற முடியும் என்பதால் இரண்டு மொபைல்களை வாங்க வேண்டிய அவசியமும் இல்லை.
இதனால் டியூவல் சிம் தொழில் நுட்பம் கொண்ட மொபைல் மக்கள் மத்தியில் பெரிதும் விரும்பப்படுகிறது. இதை புரிந்து வைத்திருக்கும் ஸென் நிறுவனம் விரைவில் ஒரு புதிய டியூவல் சிம் வசதி கொண்ட மொபைலை மார்க்கெட்டிற்கு கொண்டு வருகிறது.
ஸென் எம்-75 என்ற பெயரில் வரும் இந்த மொபைல் மெட்டாலிக் பேனல் கொண்டது. மெட்டாலிக் கிரே மற்றும் மேட்டாலிக் ப்ளாக் என்ற இரண்டு நிறத்தில் இந்த கிடைக்கும்.
2.4 இஞ்ச் திரை வசதி கொண்ட இந்த மொபைலை அனைவரும் எந்த விதமான சிரமுமின்றி பயன்படுத்தலாம்.
3.42 மெகா பிக்ஸல் கேமராவினையும், வீடியோவினையும் மிக துல்லியமாக கொடுக்கிறது.
இந்த கேமராவின் தனித்துவம் என்னவென்றால் குறைந்த வெளிச்சத்திலும் கூட சிறந்த புகைப்படத்தை கொடுக்கும் தன்மை கொண்டது.
ஸென் எம்-75 மொபைல் 16ஜிபி வரை விரிவுப்படுத்தக்கூடிய எக்ஸ்டர்னல் மெமரி கார்டு ஸ்லாட் வசதியை கொண்டுள்ளது.
புளூடூத் தொழில் நுட்பத்தின் மூலம் இதில் புகைப்படங்கள், தகவல்கள் போன்றவற்றை நண்பர்களுக்கு அனுப்பி மகிழ முடியும்.
இதன் மீடியா ப்ளேயர் மூலம் ஆடியோ மற்றும் வீடியோ வசதியினை பெற முடியும்.
அனைவராலும் விரும்பப்படும் இந்த டியூவல் சிம் வசதி கொண்ட சென் எம்-75 மொபைல் ரூ.2,399 விலை கொண்டது.


Click it and Unblock the Notifications