Home
Mobile

குறைந்த விலையில் தனது முதல் ஆன்ட்ராய்டு போனை வழங்கும் சென் மொபைல்

By Karthikeyan
குறைந்த விலையில் தனது முதல் ஆன்ட்ராய்டு போனை வழங்கும் சென் மொபைல்

சென் மொபைல் நிறுவனம் முதல் முறையாக ஒரு புதிய ஆன்ட்ராய்டு தயாரித்து அதை குறைந்த விலைக்கு இந்திய சந்தையில் களமிறக்கி இருக்கிறது. சென் அல்ட்ராபோன் யு1 என்று அழைக்கப்படும் இந்த ஆன்ட்ராய்டு போன் ரூ.4,999க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னின் முதல் ஆன்ட்ராய்டு போன் குறைந்த விலையில் வந்தாலும் இந்த மலிவு விலைப் போனில் ஏராளமான தொழில் நுட்ப வசதிகள் இருக்கின்றன. குறிப்பாக ஆன்ட்ராய்டு 2.3 இயங்கு தளத்தில் வரும் இந்த போன் டூவல் சிம் வசதியைக் கொண்டிருக்கிறது. அதோடு இந்த போனில் 1 ஜிஹெர்ட்ஸ் ப்ராசஸர் இருப்பதால் இதன் இயங்கு வேகமும் மிக அதிகமாக இருக்கும்.

இந்த போனில் இருக்கும் 3.5 இன்ச் எச்விஜிஎ கப்பாசிட்டிவ் தொடுதிரை மிகவும் துல்லியமாக இருக்கும். அதுபோல் இந்த போன் ப்ளாஷ் வசதியுடன் கூடிய 3.2 எம்பி கொண்ட ஒரு கேமராவையும் வழங்குகிறது. இணைப்பு வசதிகளுக்காக இந்த போனில் ஜிபிஆர்எஸ், எட்ஜ், வைபை மற்றும் ப்ளூடூத் ஆகிய வசதிகளும் உள்ளன.

இந்த போன் 512எம்பி மெமரியுடன் வருகிறது. மைக்ரோ எஸ்டி கார்டு மூலம் இதன் மெமிரியை 16ஜிபி வரை அதிகரிக்க முடியும். ஆனால் இந்த போனில் 3ஜி வசதி இல்லை. இந்த போனை ஹோம்ஷாப்18.காம் என்ற ஆன்லைன் மூலம் ரூ.4,999க்கு வாங்கலாம்.

இந்த சென் அல்ட்ராபோன் யு1 மூலம் குறைந்த விலையில் ஆன்ட்ராய்டு அனுபவத்தை இந்திய மொபைல் ரசிகர்களுக்கு வழங்குவதில் தாம் பெருமை அடைவதாக சென் மொபைலின் மேலாளர் தீபேஷ் குப்தா தெரிவித்திருக்கிறார்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X