Home
Mobile

மலிவு விலையில் புதிய 3ஜி போன் - ஸென் அறிவிப்பு

By Super
மலிவு விலையில் புதிய 3ஜி போன் - ஸென் அறிவிப்பு
ஸென்மொபைல் நிறுவனம் மொபைல் உற்பத்தி மற்றும் வர்த்தகத்தில் தனக்கென ஒரு இடத்தைப் பெற்றிருக்கிறது. அவர்களுடைய புதிய 3ஜி போன் மூலம் அவர்கள் எல்லா வகையான மொபைல்களையும் அறிமுகப்படுத்திவிட்டார்கள் என கூறலாம்.

இந்த நெட் கம்ப்யூட்டிங்குடன் கூடிய இந்த புதிய மொபைலின் பெயர் ஸென் ஏ-60 ஆகும். மேலும் இந்நிறுவனம் மற்ற நிறுவனங்களைவிட மலிவு விலை போனுக்கு பெயர் பெற்றுது.

ஸென் ஏ-60 கருப்பு மற்றும் வெள்ளை நிறங்களில் வருகிறது. இது 2.4 இஞ்ச் திரையை பெற்றுள்ளது. இதன் மெமரி சேமிப்பு வசதி 16ஜிபி வரை அதிகரிக்கக்கூடிய 78எம்பி ஆகும். மேலும் இதை பயன்படுத்துவோர் பொழுதுபோக்கிற்காக வீடியோ, ஆடியோ மற்றும் லைவ் வசதிகளும் உள்ளன.

இந்த போன் டூவல் சிம் வசதியுடன் வீடியோ காலிங் வசதியையும் பெற்றிருக்கிறது. மேலும் இதன் டூவல் சிம் 2ஜி மற்றும் 3ஜி சேவையை வழங்குகிறது.

ஸென் நிர்வாக இயக்குநர் கூறும் போது, 3ஜி போன் மூலம் நிறைய சாதித்திருக்கிறோம் அதனால் இந்த புதிய மொபைலை மலிவு விலைக்கு வழங்குகவோம், என்று கூறினார்.

மேலும் இந்த மொபைல் போட்டா வீயுவர், எடிட்டர் மற்றும் ஆர்கனைஸர் கொண்டு வாய்ஸ் மெமரி மற்றும் டெக்ஸ்ட இன்புட் இன்ஸ்டன்ட் எஸ்எம்எஸ் மற்றும் எம்எம்எஸ் ஆகிய வசதிகளை வழங்குகிறது.

ஸென் ஏ-60ன் 3.2எம்பி + விஜிஎ கேமரா தரமான 240 X 320 ரிசலூசனை கொண்டுள்ளது. இதன் வீடியோ ரிக்கார்டிங் 25எப்பிஎஸ் வேகத்தை பெற்றுது. அதோடு பேஸ்புக், டிவிட்டர் மற்றும் ஸ்கைப் கால் வசதிகளையும் வழங்குகிறது. மேலும் ஆன்லைன் வசதிகளான கூகுள் தேடல், யூட்யூப், கூகுள் உரையாடல் போன்ற அனைத்து வசதிகளையும் வழங்குகிறது.

ஸென் ஏ-60ன் விலையைப் பார்த்தால் ரூ.3,249 மட்டுமே. இதனால் பலர் இந்த மொபைலை தேர்வு செய்வர் என்று எதிர்பார்க்கலாம்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X