ரூ.1,999 விலையில் புதிய டியூவல் சிம் போன்: ஸென் அறிமுகப்படுத்துகிறது

By Super
|
ரூ.1,999 விலையில் புதிய டியூவல் சிம் போன்: ஸென் அறிமுகப்படுத்துகிறது
ரூ.1,999 விலையில் புதிய டியூவல் சிம் மொபைல்போனை ஸென் நிறுவனம் விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது. வாடிக்கையாளர்களை திருப்த்திப்படுத்தும் வகையில் பல மொபைல்களை உருவாக்கியுள்ளது சென் நிறுவனம்.

இந்திய நாட்டின் அடிப்படையில் இயங்கிக் கொண்டிருக்கிறது இந்நிறுவனம். முதன்முறையாக ஆப்பிரிக்கா நாடான நைஜீரியா,கென்யா போன்ற வெளியிடங்களில் அறிமுகமாக உள்ளது. இந்த நேரத்தில் இந்த புதிய டியூவல் சிம் போனை அறிமுகம் செய்ய ஸென் திட்டமிட்டுள்ளது.எம்-72 என்ற பெயரில் வரும் இந்த மிகக் குறைந்த விலை மொபைல்போன் சிறப்பான நிபுணர்களைக் கொண்டு வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

சிவப்பு மற்றும் கறுப்பு நிறத்தில் தயாரிக்கப்பட்டுள்ளது. கண்களை கவரும் வகையில் இந்த மாடலை சென் நிறுவனம் வடிவமைத்துள்ளது. 1.3 பிக்ஸல் ரிசல்யூஷன் கொண்ட கேமரா இதில் பொருத்தப்பட்டுள்ளது.

இதன் மூலம் தெளிவான புகைப்படங்கள் எடுத்து கண்டு ரசிக்கலாம். இந்த வகைக் கேமராவில் சூம் மற்றம் வீடியோ பதிவு செய்யும் வசதிகளும் இதில் உள்ளது. எம்பி4,3ஜிபி ஃபைல்களுக்கு சப்போர்ட் செய்ய பயன்படுகிறது. இந்த டியூவல் சிம் மாடல் டச் அன்ட் டைப் வசதி கொண்டது.

இதில் உள்ள ஜிபிஆர்எஸ் வசதியின் மூலம் மிகுந்த வேகம் கொண்ட பிரவுசிங் வசதியினைப் பெறமுடியும். ஸென் எம்-72 மாடலில் உள்ள புளூடூத் மற்றும் யூஎஸ்பி போர்ட் மூலம் தகவல் பரிமாற்றங்களையும் எளிதில் பெற முடியும். நீடித்து உழைக்கும் பேட்டரி இதில் பொருத்தப்பட்டுள்ளது.

இதனால் 40 நாள் ஸ்டான்ட்-பை டைமும், 600 நிமிடம் டாக் டைம் பெறும் வசதியும் உள்ளது. பொழுதுபோக்கு அம்சமாக இதில் பாடல்கள் கேட்கவும், வீடியோப் பார்க்கவும் முடியும். தேவையான தகவல்களை 16 ஜிபி வரை பதிவு செய்து கொள்ள முடியும். 3.5 மிமீ ஆடியோ ஜேக் வசதியும் உள்ளது.இதன் விலை என்னவென்று பார்த்தால் நிச்சயம் உங்கள் கண்களை உங்களாலேயே நம்பமுடியாது.வெறும் ரூ.1,999 விலைக்கு இந்த மாடலை சொந்தமாக்கிக் கொள்ளலாம்.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X