4ஜிபி ரேம்; 16எம்பி ரியர் கேம் உடன் பட்ஜெட் விலையில் யூ யுரேகா 2 அறிமுகம்.
இந்தியாவில் யூ யுரேகா 2 ஸ்மார்ட்போன் ஆனது ரூ.11,999/- என்ற விலை நிர்ணயத்தை பெற்றுள்ளது.
மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமான யூ மொபைல்ஸ் இன்று (வியாழன்) அதன் யூ யுரேகா 2 ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. கடந்த ஜூன் மாதம் தொடங்கப்பட்ட யூ யுரேகா பிளாக் ஸ்மார்ட்போனிற்கு பின்னர் வெளியாகும் யுரேகா தொடரில் வெளியாகும் முதல் ஸ்மார்ட்போன் இதுவாகும்.

பிரதான அம்சங்கள்
செப்டம்பர் 20 முதல் இந்த ஸ்மார்ட்போன், ப்ளிப்கார்ட்டின் பிக் பில்லியன் டேஸ் விற்பனையில் பிரத்யேகமாக விற்பனைக்கு வருகிறது. உலோக வடிவமைப்பு கொண்டுள்ள இக்கருவி 5.5 அங்குல முழு எச்டி டிஸ்பிளே, 2.5டி வளைந்த கண்ணாடி, ஸ்னாப் டிராகன் 625 எஸ்ஓசி, 4 ஜிபி ரேம், 16 மெகாபிக்சல் பின்புற கேமரா, ஒரு 8 மெகாபிக்சல் முன்பக்க கேமரா, கைரேகை சென்சார், 3930எம்ஏஎச் பேட்டரி மற்றும் க்வால்காம் பாஸ்ட் சார்ஜிங் ஆகிய பிரதான அம்சங்களை தன்னுள் கொண்டுள்ளது.

இதர அம்சங்கள்
யூ யுரேகா 2 சாதனத்தின் இதர அம்சங்களை பொறுத்தமட்டில், இது இரட்டை சிம் ஆதரவு கொண்டு ஆண்ட்ராய்டு 6.0 மார்ஷ்மல்லோ கொண்டு இயங்குகிறது. இரட்டை எல்இடி ஃப்ளாஷ் கொண்ட 16 மெகாபிக்சல் பின்புற கேமரா கொண்டுள்ளது. 64ஜிபி உள்ளடக்க சேமிப்பை கொண்டுள்ள இக்கருவியின் இணைப்பு விருப்பங்களை பொறுத்தமட்டில், 4ஜி வோல்ட், ப்ளூடூத், ஜிபிஎஸ்/ ஏ-ஜிபிஎஸ், 3.5மிமீ ஹெட்ஜாக் மற்றும் மைக்ரோ-யூஎஸ்பி ஆகியவைகளை கொண்டுள்ளது.

இந்திய விலை நிர்ணயம்
இந்தியாவில் யூ யுரேகா 2 ஸ்மார்ட்போன் ஆனது ரூ.11,999/- என்ற விலை நிர்ணயத்தை பெற்றுள்ளது.


Click it and Unblock the Notifications