Home
Mobile

நெல்சா.. என்னப்பா இப்படி பண்ணிட்ட.. Samsung-ஐ கதறவிட்ட பிரபல யூட்யூபர்.. முதல் தடவை இப்படி நடக்குது!

தென் கொரிய நிறுவனம் ஆன சாம்சங் (Samsung) அதன் முதல் ட்ரை போல்ட் ஸ்மார்ட்போன் ஆன சாம்சங் கேலக்ஸி இசட் ட்ரை ஃபோல்ட் (Samsung's Galaxy Z Tri Fold) மாடலை கடந்த மாதம் தேர்ந்தெடுக்கப்பட்ட உலகளாவிய சந்தைகளில் அறிமுகம் செய்து இருந்தது.

சாம்சங் நிறுவனம் ஆனது இந்த ஸ்மார்ட்போன் "மிகவும் உறுதியானது" என்று கூறினாலும், பிரபலமான யூட்யூபர் ஒருவரால் நடத்தப்பட்ட ட்யூரபிலிட்டி டெஸ்ட்டின் (Durability test) ஒரு பகுதியான பெண்ட் டெஸ்டின் (Bend Test) போது சாம்சங் கேலக்ஸி இசட் ட்ரை ஃபோல்ட் டிஸ்பிளே தாக்குபிடிக்க முடியாமல் போயுள்ளது.

நெல்சா என்னப்பா இப்படி பண்ணிட்ட.. Samsung-ஐ கதறவிட்ட பிரபல யூட்யூபர்!

ஜெர்ரிரிக்எவ்ரிதிங் (JerryRigEverything) என்கிற யூட்யூப் சேனலின் தொகுப்பாளரான ஸாக் நெல்சன் (Zack Nelson), கீறல், தீ, அழுக்கு மற்றும் வளைவு எதிர்ப்புக்கான சோதனைகளை உள்ளடக்கிய தனது தனித்துவமான ட்யூரபிலிட்டி சீரிஸில் சாம்சங் கேலக்ஸி இசட் ட்ரை ஃபோல்ட் ஸ்மார்ட்போனை டெஸ்ட் செய்துள்ளார்.

கொரில்லா கிளாஸ் செராமிக் 2 ஆல் பாதுகாக்கப்பட்ட சாம்சங் கேலக்ஸி இசட் ட்ரை ஃபோல்ட் ஸ்மார்ட்போனின் கவர் டிஸ்பிளேவில் கீறல் எதிர்ப்பு சோதனையை நடத்திய போது - மோஸ் கடினத்தன்மை அளவுகோலில் ஆறாவது நிலையில் கீறல்களையும், ஏழாவது நிலையில் ரேஸர் பிளேடுடன் ஆழமான பள்ளங்களையும் காட்ட தொடங்கியது

இருப்பினும், பிளாஸ்டிக்கால் ஆனது என்று நம்பப்படும் இன்னர் பிளெக்ஸிபில் ஸ்க்ரீனின் ட்யூரபிலிட்டி சோதனையின் போது விஷயங்கள் சுவாரஸ்யமாகின. இது இரண்டாம் நிலையில் லேசான கீறல்களை பதிவு செய்தது, மேலும் மூன்றாம் நிலையில் ஆழமான உள்தள்ளல்கள் தெரிந்தன. கத்திகள் மற்றும் பிற கூர்மையான பொருட்களை பற்றி சொல்லப்போனால், நாணயங்கள், சாவிகள் மற்றும் விரல் நகங்களுடன் தொடர்பு கொள்ளும்போது கூட இந்த ஸ்க்ரீன் கீறல்களை தாங்க முடியாமல் போகலாம் என்றும் நெல்சன் குறிப்பிட்டுள்ளார்.

அடுத்தது தீ எதிர்ப்பு சோதனை. ஓஎல்இடி கவர் டிஸ்பிளே சுமார் 17 வினாடிகள் லைட்டருடன் எரிவதை தாங்க முடிந்தது, அதன் பிறகு பிக்சல்கள் கோல்ட்-பிளாக் நிறமாக மாறி, பின் மீளவில்லை. சாம்சங் கேலக்ஸி இசட் ட்ரை ஃபோல்ட் ஸ்மார்ட்போனின் இன்னர் ஸ்க்ரீன் இன்னும் உடையக்கூடியதாக தோன்றியது, பிக்சல்கள் எரியும் அறிகுறிகளை காட்டத் தொடங்குவதற்கு 10 வினாடிகள் மட்டுமே நீடித்தது. கவர் டிஸ்பிளேவை போலவே, மெயின் 10 இன்ச் டிஸ்பிளேவும் மீள தவறிவிட்டது.

அழுக்கு எதிர்ப்பு சோதனையின் போது, யூட்யூபர் ​​நெல்சன், கேலக்ஸி இசட் ட்ரைஃ போல்டின் பிரைமரி ஸ்க்ரீனில் ஒரு கைப்பிடி அளவு அழுக்கை போட்டார். அழுக்கு துகள்கள் சுற்றி நகர்த்தப்பட்டவுடன், போல்டபிள் கீல் மெக்கானிசத்தில் இருந்து நொறுக்குதல் மற்றும் கிரீச்சிங் சத்தங்கள் கேட்க தொடங்கின. உள் காந்தங்கள் இருக்கும் ஸ்க்ரீனில் தூசி குறிப்பிடத்தக்க அளவில் சேகரிக்கப்பட்டது.

இந்த டெஸ்டிங் வீடியோவின் சிறப்பம்சமாக வளைவு சோதனை இருந்தது. கேலக்ஸி இசட் ஃபோல்ட் 7 ஸ்மார்ட்போன் ஆனது இரு திசைகளிலும் நெகிழ்வதை தக்கவைத்துக் கொண்டாலும், கேலக்ஸி இசட் ட்ரைஃபோல்ட் அவ்வாறு செய்யவில்லை. யூடியூபர் நெல்சன் முதலில் ஸ்மார்ட்போனை அதன் ஒரு மூலையிலிருந்து வளைத்தார், அது நெகிழ்ந்தது மட்டுமல்லாமல் நிரந்தரமாக சிதைந்தது.

போல்டபிள் ஸ்மார்ட்போனை பின்னோக்கி வளைப்பதால் கேட்கக்கூடிய அளவுக்கு உரத்த விரிசல் ஒலி ஏற்பட்டது மற்றும் ஸ்க்ரீன் டார்க் ஆகிவிட்டது. ஆர்மர் அலுமினிய ஃபிரேமை கொண்டிருந்தாலும் கூட, ஆண்டெனா லைன்ஸ் ஆனது கேலக்ஸி இசட் ட்ரை ஃபோல்டின் பலவீனமான பகுதியாக தோன்றின, அங்குதான் முதலில் முறிவு ஏற்பட்டது.

ஸ்மார்ட்போனின் கீல்கள் தப்பிப்பிழைத்திருந்தாலும், ஃபிரேமின் தடிமன் (அல்லது அதன் பற்றாக்குறை) முறிவுக்கு முக்கிய காரணம் என்று யூட்யூபர் நெல்சன் குறிப்பிட்டார். மேலும் இந்த யூட்யூபரின் கூற்றுப்படி, சாம்சங் கேலக்ஸி இசட் ட்ரைஃபோல்ட் தான் தனது ட்யூரபிலிட்டி சோதனையில் தோல்வியடைந்த முதல் சாம்சங் ஸ்மார்ட்போன் ஆகும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
YouTuber Puts Samsung Galaxy Z TriFold in Durability test Display Breaks in Bend Test
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X