விரைவில் YouTube-ற்கு வரும் புதிய அம்சம்.! சோதனை மேல் சோதனை.!

|

வாட்ஸ்அப் நிறுவனம் தனது பயனர்களை அதன் புதிய ஒப்புதல் விதிகளுக்குக் கட்டாயம் ஒப்புதல் வழங்கியாக வேண்டும் என்று வற்புறுத்தியதன் காரணமாக, உலகளவில் உள்ள பல வாட்ஸ்அப் பயனர்கள் இப்போது வாட்ஸ்அப் பயன்பாட்டை நிராகரித்து சிக்னல் மற்றும் டெலிகிராம் போன்ற பிற மெசேஜ்ஜிங் ஆப்ஸ்களை பதிவிறக்கம் செய்து வருகின்றனர்.

யூட்யூப் நிறுவனம்

இந்நிலையில் வீடியோக்களில் பார்க்கும் தயாரிப்புளை தனது பிளாட்பார்மில் இருந்து நேரடியாக வாங்க அனுமதிக்கும் ஒரு புதிய
அம்சத்தை யூட்யூப் நிறுவனம் சோதித்து வருகிறது எனத் தகவல் வெளிவந்துள்ளது.

YouTube வீடியோக்களில் இடம்பெறும்

மேலும் வெளிவந்த தகவலின் அடிப்படையில், தேர்ந்தெடுக்கப்பட்டYouTube வீடியோக்களில் இடம்பெறும் தயாரிப்புகளை பார்வையாளர்கள் யூட்யூப் "வழியாகவே" ஷாப்பிங் செய்ய முடியும் என்று கூறப்படுகிறது.

64எம்பி ரியர் கேமராவுடன் டெக்னோ கமோன் 16 பிரீமியர் ஸ்மார்ட்போன் அறிமுகம்.!64எம்பி ரியர் கேமராவுடன் டெக்னோ கமோன் 16 பிரீமியர் ஸ்மார்ட்போன் அறிமுகம்.!

து அமெரிக்கவில் குறைந்த

அதாவது அமெரிக்கவில் குறைந்த எண்ணிக்கையிலான பயனர்களுடன் ஆண்ட்ராய்டு, ஐஒஎஸ் மற்றும் இணையம் வழியாக இந்த
புத்தம் புதிய அம்சம் தற்போது சோதிக்கப்பட்டு வருகிறது என்று தகவல்கள் வெளிவந்துள்ளது.

சேர்க்கலாம் என்றும், அவை ஷாப்பிங்

குறிப்பாக இந்த சோனையின் ஒரு பகுதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்பாளிகள் தங்கள் வீடியோக்களில் சில தயாரிப்புளைச் சேர்க்கலாம் என்றும், அவை ஷாப்பிங் பேக் ஐகான் வழியாக வாங்குவதற்கு கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

இந்த அம்சம் பார்வையாளர்கள்

மேலே கூறப்பட்ட இந்த அம்சம் குறித்து கூகுள் நிறுவனம் அண்மையில் அதன் யூட்யூப் ஆதரவு பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது. அதேபோல் இந்த அம்சம் பார்வையாளர்கள் வீடியோக்களில் பார்க்கும் தயாரிப்புகளுக்கான பொருத்தமான தகவல்களையும், அதை வாங்குவதற்கான விருப்பங்களையும் பெற அனுமதிக்கும் என்று யூட்யூப் தெரிவித்துள்ளது.

ந்த அம்சத்திற்காக

அதேபோல் இந்த அம்சத்திற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்பாளர்களுடன் நாங்கள் செயல்படுகிறோம் என்று யூட்யூப் கூறியுள்ளது. பின்புசில வீடியோவின் கீழ் இடது மூலையில் தோன்றும் ஷாப்பிங் பேக் ஐகானைக் கிளிக் செய்வதன் மூலம் பார்வையாளர்களின் பிரத்யேகதயாரிப்புகளின் பட்டியலைக் காண முடியும்.

வாங்குவதற்கான வி

இந்த வசதியின் மூலம் வாடிக்கையாளர்கள் ஒவ்வொரு தயாரிப்பின் பக்கத்தையும் ஆராயலாம் என்று கூறப்படுகிறது. மேலும் இங்கு கூடுதல் தொடர்புடைய வீடியோக்கள் மற்றும் தயாரிப்பை வாங்குவதற்கான விருப்பங்களையும் காணலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
YouTube will soon introduce a new feature for shopping: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X