நீட்டா அம்பானியின் மொபைல் பற்றிய ஜீரணிக்க முடியாத உண்மை.!
நீட்டா அம்பானி அவர்கள் ரூ.315 கோடி மதிப்பில் ஐபோன் 6 பிங்க் என்ற செல்போனை பயன்படுத்துவருகிறார் என இணையத்தில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது
முகேஷ் அம்பானி - இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரர், இவருடைய ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தற்போது மிகப்பெரிய வளர்ச்சியைக் நோக்கிய வண்ணம் உள்ளது, ஜியோ சேவையை தான் இந்தியாவின் பெரும்பாலான மக்கள் பயன்படுத்துகின்றனர் மற்றும் விரைவில் ஜியோபோனையும் பயன்படுத்துவர் என்பதெல்லாம் நாம் அனைவருமே நன்கு அறிந்த விடயமே.
நாமெல்லாம் கற்பனைக்கூட செய்து பார்க்காத ஒரு விடயம் உள்ளது. அதுதான் முகேஷ் அம்பானியின் மனைவியான நீட்டா அம்பானி பயன்படுத்தும் செல்போனை பற்றிய விபரங்கள். உங்களால் மட்டுமின்றி யாராலும் ஜீரணத்துக்கொள்ளவே முடியாத நீட்டா அம்பானியின் ஸ்மார்ட்போன் பற்றிய உண்மைகள் இதோ.

ஐபோன் 6 பிங்க்:
நீட்டா அம்பானி அவர்கள் ரூ.315 கோடி மதிப்பில் ஐபோன் 6 பிங்க் என்ற செல்போனை பயன்படுத்துகிறார் என இணையத்தில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 48.5 மில்லியன் டாலர்கள் செலவில் இந்த ஐபோன் 6 பிங்க் செல்போனை வாங்கியுள்ளார்.

பிளாக்பெர்ரி:
அம்பானியின் குடும்ப உறுப்பினர்கள் பெரும்பாலானோர் பிளாக்பெர்ரி மாடல்களை பயன்படுத்தி வருகின்றனர், அதேசமயம் நீட்டா அம்பானி அவர்கள் மட்டும் ஐபோன் 6 பிங்க் என்ற செல்போனை பயன்படுத்துகிறார்.

24கேரட்:
இந்த ஐபோன் 6 பிங்க் மொபைல் பொறுத்தவரை 24 கேரட் தங்கம் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. அதன்பின் பிளாட்டினம் கோட்டிங் செய்யப்பட்டுள்ளது. மேலும் உடைக்க முடியாத வண்ணம் இந்த ஐபோன் 6 பிங்க் மொபைல் உள்ளது.

பாதுகாப்பு:
இந்த மொபைல் பல்வேறு பாதுகாப்பு அம்சங்களோடு தயார் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் இதுபோன்ற செல்போனை நீட்டா அம்பானி அவர்கள் மட்டுமே பயன்படுத்துகின்றனர் என இணையத்தில் செய்திகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

2014:
இந்த ஐபோன் 6 பிங்க் மொபைல் 2014ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது அதன்பின் சிறப்பு வாடிக்கையாளர்களுக்கு ஆர்டரின்பேரில் மட்டுமே கிடைக்கும் வகையில் உள்ளது.


Click it and Unblock the Notifications