Home
Mobile

ரூ.55,000 எல்ஜி ஜி7+ திங்க் வெறும் ரூ.7,990 க்கு வாங்கலாம்.! நம்பலாமா?

நமது ஊரில் வாடகைக்கு வீடு கிடைப்பதென்பது எவ்வளவு கடினம் என்பது நாம் அனைவருக்கும் தெரியும்.

By Sharath

நமது ஊரில் வாடகைக்கு வீடு கிடைப்பதென்பது எவ்வளவு கடினம் என்பது நாம் அனைவருக்கும் தெரியும். வாடகைக்குச் சைக்கிள் ஓட்டிய காலம் மாறி வாடகைக்கு மோட்டார் வாகனங்கள் ஓட்டிய காலத்தையும் தாண்டி நாம் கடந்துவந்து கொண்டிருக்கிறோம். இப்பொழுது உச்சத்தின் உச்சமாய் வாடகைத் தாய் கலாச்சாரம் மற்றும் வாடகை மனைவி கலாச்சாரம் கூட சில இடங்களில் பரவி வரும் நிலையில்.

எல்ஜி நிறுவனம், தன் பங்கிற்கு புதிய கலாச்சாரத்தை உருவாகியுள்ளது. ஆம் இதோ வந்து விட்டது வாடகை பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன். நம்புங்கள் இனி ஸ்மார்ட்போன் கூட வாடகைக்குக் கிடைக்கும். அதுவும் உங்கள் வீட்டு வாடகையை விட கம்மியான விலையில்.

எல்ஜி ஜி7+ திங்க்  ரூ.55,000

எல்ஜி ஜி7+ திங்க் ரூ.55,000

எல்ஜி நிறுவனம் தனது புது ரக பிரீமியம் ஸ்மார்ட்போன் ஜி7+ திங்க் மாடலின் அசல் விற்பனை விலையாக ரூ.55,000 உள்ளது. தற்பொழுது பிளிப்கார்ட் பிரீடம் சேல் தொடக்க விற்பனையாக ரூ.15,000 சலுகையுடன் கூடுதல் சலுகையாக ரூ.2,000 சிட்டி பேங்க் கார்டு பயனர்களுக்கு வழங்குகிறது. இந்த மாடலை ரூ.37,990 க்கு அறிமுகம் செய்கிறது.

 ரூ.7,900 க்கு வாடகைக்கு

ரூ.7,900 க்கு வாடகைக்கு

இத்துடன் 75% பை பேக் ஆஃபர் சலுகையை ஜி7+ திங்க் ஸ்மார்ட்போனிற்கு வழங்கியுள்ளது. இதன் அடிப்படையில் பை பேக் விலையாக ரூ.30,000 துடன் கூடுதல் சலுகையாக ரூ.2,000 சிட்டி பேங்க் கார்டு பயனர்களுக்கு ஒவ்வொரு புது ஜி7+ திங்க் ஸ்மார்ட்போனுடன் வழங்கப்படும் என அறிவித்திருக்கிறது. இந்தத் தொடக்க விற்பனையில் எல்ஜி ஜி7+ திங்க் ஸ்மார்ட்போன் ஐ வெறும் ரூ.7,900 க்கு வாடகைக்குப் பெற்றுக்கொள்ளுங்கள் என்று அட்டகாசமான சலுகை விலையை அறிவித்திருக்கிறது எல்ஜி நிறுவனம்.

8 மாதத்திற்குள் எக்ஸ்சேஞ்சு

8 மாதத்திற்குள் எக்ஸ்சேஞ்சு

எப்பொழுதும் இத்தகைய ஆஃபர்கள் அறிமுகம் செய்யும் பொழுது கூடவே சில நிபந்தனைகளை நிறுவனங்கள் சேர்ப்பது போல எல்ஜி நிறுவனமும் தனது நிபந்தனைகளை இச்சலுகையுடன் சேர்த்திருக்கிறது. இந்தச் சலுகை விலையில் ஜி7+ திங்க் ஸ்மார்ட்போன் வாங்க, நீங்கள் வாங்குகிற ஜி7+ திங்க் ஸ்மார்ட்போன் ஐ குறிப்பிட்ட காலத்திற்குள் பிளிப்கார்ட் இல் எக்ஸ்சேஞ்சு செய்ய வேண்டும். குறிப்பாக 6 அல்லது 8 மாதத்திற்குள் எக்ஸ்சேஞ்சு செய்ய வேண்டும் என்பதே அந்த நிபந்தனை.

ரூ.30,000 பை பேக் வழங்கப்படும்

ரூ.30,000 பை பேக் வழங்கப்படும்

முதலில் உங்கள் முழு தொகையாக ரூ.37990 தொகையை செலுத்தி உங்கள் புது ஜி7+ திங்க் ஸ்மார்ட்போன் ஐ வாங்கிக்கொள்ளலாம். பிளிப்கார்ட் இல் 6 அல்லது 8 மாதத்திற்குள் உங்கள் ஸ்மார்ட்போன் ஐ அப்கிரேட் செய்துகொள்ளும் பொழுது ரூ.30,000 பை பேக் வழங்கப்படும். நீங்கள் பயன்படுத்திய புது ஜி7+ திங்க் ஸ்மார்ட்போனிற்கு வாடகை விலையாக ரூ.7,990 மட்டுமே வசூலிக்கப்படும் என்று இந்த நிபந்தனை பட தெரிவித்துள்ளது பிளிப்கார்ட் நிறுவனம்.

வரப்பிரசாதம்

வரப்பிரசாதம்

பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களை பயன்படுத்த வேண்டும் என்ற ஆசை உள்ளவர்களுக்கு இந்த ஸ்மார்ட்போன் வாடகை கலாச்சாரம் ஒரு வரப்பிரசாதமென்றே சொல்லாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
You can get LG G7 ThinQ for just Rs 7990 : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X