Apple மேல சத்தியம்.. இதை விட கம்மி விலைக்கு இனி iPhone 14 கிடைக்காது.. களைகட்டும் Amazon கிரேட் சம்மர் சேல்!
பிரபல இ-காமர்ஸ் நிறுவனமான அமேசான் அறிவித்துளாள் கிரேட் சம்மர் 2023 விற்பனையின் (Amazon Great Summer Sale 2023) போது, இதுவரை இல்லாத அளவிற்கு, மிகவும் மலிவான விலையில் ஆப்பிள் ஐபோன் 14 (Apple iPhone 14) விற்பனை செய்யப்படுமென்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அமேசானின் கூற்றுப்படி, வருகிற மே 4 ஆம் தேதி நள்ளிரவு 12 மணிக்கு தொடங்கும் கிரேட் சம்மர் சிறப்பு விற்பனையின் போது, ஐபோன் 14 மாடலை ரூ.40,000 க்கும் குறைவான விலையில் வாங்க முடியும். இன்னும் சரியான சொல்லவேண்டுமென்றால் (அமேசான் வலைத்தளத்தின்படி) ரூ.39,293 க்கு வாங்க முடியும்.

ஐபோன் 14-ஐ ரூ.39,293 க்கு வாங்குவது எப்படி? ரூ.79,990 க்கு அறிமுகமான ஐபோன் 14 மீது அமேசான் வலைதளம் ரூ.9,901 என்கிற ஃபிளாட் ஆஃபரை (Flat Offer) அறிவித்து உள்ளது. இதன் மூலம் ஐபோன் 14-ன் விலையானது ரூ.69,999 ஆக குறைந்துள்ளது.
அதனை தொடர்ந்து ஐசிஐசிஐ மற்றும் கோடக் வங்கிகளுக்கான ரூ.375 என்கிற பேங்க் ஆஃபர் (Bank Offer), அமேசான் பே ஐசிஐசிஐ கிரெடிட் கார்டிற்கான ரூ.2,331 கேஷ்பேக், ரூ.5,000 அமேசான் பே ரிவார்ட்ஸ் (Amazon Pay Rewards) மற்றும் ரூ.20,000 வரையிலான எக்ஸ்சேன்ஜ் ஆஃபர் (Exchange Offer) போன்றவைகளை பயன்படுத்த வேண்டும்.
மேற்கண்ட அத்தனை ஆஃபர்களையும் (பேங்க் + கேஷ்பேக் + ரிவார்ட்ஸ் + எக்ஸ்சேன்ஜ்) பயன்படுத்தினால், ஐபோன் 14 மாடலின் விலை ரூ 39,293 ஆக குறைக்க முடியும் என்று அமேசான் வலைத்தளம் கூறுகிறது. மேலும் இதுவொரு அமேசான் ப்ரைம் எக்ஸ்க்ளூஸிவ் ஆஃபர் (Amazon Prime exclusive offer) என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
அம்சங்களை பொறுத்தவரை ஐபோன் 14 ஆனது செராமிக் ஷீல்டு பாதுகாப்பு மற்றும் 1,200 நிட்ஸ் வரையிலான பீக் ப்ரைட்னஸ் உடனான 6.1 இன்ச் சூப்பர் ரெட்டினா எக்ஸ்டிஆர் ஓஎல்இடி டிஸ்பிளேவை கொண்டுள்ளது. மேலும் இது ஆப்பிளின் சொந்த ஏ15 பயோனிக் சிப் மூலம் இயக்கப்படுகிறது.
கேமராக்களை பொறுத்தவரை, இதில் 1.9um சென்சார் மற்றும் எஃப்/1.7 அப்பெச்சர் உடனான 12 மெகாபிக்சல் வைட் ஆங்கிள் கேமரா + எஃப்/2.4 அப்பெச்சர் உடனான 12 மெகாபிக்சல் அல்ட்ரா வைட் ஆங்கிள் கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா (Dual rear Camera) செட்டப் உள்ளது.
செல்பீக்கள் மற்றும் வீடியோ கால்களுக்காக, முன்பக்கத்தில் எஃப்/1.9 அப்பெச்சர் உடனான 12 மெகாபிக்சல் ட்ரூடெப்த் (TrueDepth) கேமரா உள்ளது. கடைசியாக, 2017 ஆம் ஆண்டு அறிமுகமான ஐபோன் எக்ஸ்-இல் இருந்து தற்போது வரை அறிமுகம் செய்யப்பட்ட அனைத்து ஐபோன்களிலும் உள்ளதை போலவே, ஐபோன் 14 மாடலும் பயோமெட்ரிக் அன்லாக்கிங்கிற்கான ஃபேஸ் ஐடி (Face ID) உடன் வருகிறது.


Click it and Unblock the Notifications








