ஆஃபர்னா அது இதுதான்! ரூ.7000 தள்ளுபடி விலையில் ஐபோன் 14 வாங்கலாம்.. மொத்த பேரையும் வாயடைத்த JioMart!

|

Apple iPhone 14 ஆனது கடந்த செப்டம்பர் மாதம் நிறுவனத்தின் 'ஃபார் அவுட்' நிகழ்வில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த ஐபோன் ஆனது ஏ15 பயோனிக் எஸ்ஓசி மூலம் இயக்கப்படுகிறது. பிற ஆன்லைன் தளங்கள் முந்தைய ஐபோன் மாடல்களுக்கு தள்ளுபடிகள் அறிவித்து வரும் நேரத்தில் ஐியோமார்ட் ஆஃப்லைன் ஸ்டோரில் சமீபத்திய மாடலுக்கு தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜியோமார்ட் ஆஃப்லைன் ஸ்டோர்கள்

ஜியோமார்ட் ஆஃப்லைன் ஸ்டோர்கள்

ஜியோ 14 ஆரம்ப விலையானது இந்தியாவில் ரூ.79,900 என அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது இந்த ஐபோன் 14 ஆனது ஜியோமார்ட் ஆஃப்லைன் கடைகளில் ரூ.77,900 என விற்பனைக்கு கிடைக்கிறது. அதோடு கூடுதலாக வங்கி சலுகைகளும் கிடைக்கிறது. குறிப்பிட்ட வங்கி கார்ட்கள் மற்றும் இஎம்ஐ பரிவர்த்தனைகள் மூலம் இந்த ஐபோனை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு கூடுதலாக ரூ.5000 தள்ளுபடி வழங்கப்படுகிறது.

ரூ.7000 தள்ளுபடியுடன் ஐபோன் 14 வாங்குவது எப்படி?

ரூ.7000 தள்ளுபடியுடன் ஐபோன் 14 வாங்குவது எப்படி?

91 மொபைல்ஸ் இல் இதுகுறித்து வெளியான அறிக்கையின்படி, ஐபோன் 14 இன் அடிப்படை மாறுபாடான 128 ஜிபி சேமிப்பு வேரியண்ட் ரூ.77,900 என JioMart ஆஃப்லைன் ஸ்டோரில் கிடைக்கிறது. கூடுதலாக HDFC கிரெடிட் கார்டுகள் மற்றும் EMI பரிவர்த்தனைகள் மூலம் ஐபோன் 14ஐ ஜியோமார்ட் தளத்தில் வாங்கும் போது ரூ.5000 கேஷ்பேக் வழங்கப்படுகிறது.

இதன்மூலம் ஆப்பிள் நிர்ணயித்த விலையை விட ரூ.7000 தள்ளுபடி விலையில் இந்த ஐபோன் 14ஐ ஜியோமார்ட் ஆஃப்லைன் தளத்தில் வாங்கலாம் என கூறப்பட்டுள்ளது. ஜியோமார்ட் ஆன்லைன் ஸ்டோருக்கு இந்த சலுகை பொருந்தாது என தகவல்கள் தெரிவிக்கிறது.

ஐபோன் 13 மற்றும் ஐபோன் 12

ஐபோன் 13 மற்றும் ஐபோன் 12

ஐபோனின் முந்தைய மாடலான ஐபோன் 13 மற்றும் ஐபோன் 12 சாதனத்துக்கு அதீத தள்ளுபடிகளை ஒவ்வொரு ஆன்லைன் தளங்களும் வழங்கி வருகிறது. ப்ரீமியம் விலையில் அறிமுகமான இந்த ஐபோன் 13 மற்றும் ஐபோன் 12 தற்போது ஏறத்தாழ மிட்ரேன்ஜ் விலையில் கிடைக்கிறது.

இந்த நிலையில் சமீபத்தில் அறிமுகமாக ஐபோன் 14ம் தள்ளுபடி விலையில் கிடைக்கத் தொடங்கி இருக்கிறது என்பது கவனிக்கத்தக்க ஒன்று.

எதிர்பார்ப்புக்கு மத்தியில் அறிமுகமான புது ஐபோன்

எதிர்பார்ப்புக்கு மத்தியில் அறிமுகமான புது ஐபோன்

பல்வேறு எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 14 சீரிஸ் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது. ஆப்பிள் நிறுவனம் அறிமுகம் செய்யும் ஒவ்வொரு புது மாடல்களிலும் புதுமைகளை புகுத்துவது வழக்கம். அதன்படி நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த ஐபோன் 14 சீரிஸ்களில் பல்வேறு புது அம்சங்களை புகுத்தி இருந்தது. அதில் ஒன்று செயற்கைக்கோள் இணைப்பு.

பிரத்யேக பாதுகாப்பு அம்சம்

பிரத்யேக பாதுகாப்பு அம்சம்

ஆப்பிள் ஐபோன் 14 மாடல்களில் நிறுவனம் பல்வேறு பாதுகாப்பு அம்சங்களை புகுத்தி இருக்கிறது. அதில் ஒன்று தான் விபத்து கண்டறிதல் அம்சம். பெயர் குறிப்பிடுவது போல், இந்த விபத்து கண்டறிதல் அம்சமானது நீங்கள் கடுமையான கார் விபத்தில் சிக்கியிருக்கும் போது உங்களுக்கு உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது.

நீடித்த பேட்டரி ஆயுள்

நீடித்த பேட்டரி ஆயுள்

ஐபோன் 14 ஆனது 6.1 இன்ச் டிஸ்ப்ளேவைக் கொண்டிருக்கிறது. ஐபோன் 14 ப்ளஸ் இல் 6.7 இன்ச் பொருத்தப்பட்டுள்ளது. ஐபோன் 14 சீரிஸ் இல் இதுவரை கண்டிராத சிறந்த பேட்டரி ஆதரவை ப்ளஸ் மாடல் கொண்டிருக்கிறது. ப்ளஸ் மாடலில் 26 மணிநேரம் வரை வீடியோவை நீங்கள் பார்க்கலாம், ஐபோன் 14 இல் 19 மணிநேரம் வரை வீடியோ பார்க்கலாம். சிறந்த பேட்டரி ஆயுள் வழங்குவதற்கு என இந்த மாடல்களில் ஆப்பிள் கூலிங் சிஸ்டத்தை மேம்படுத்தி இருக்கிறது.

12MP பிரதான கேமரா

12MP பிரதான கேமரா

iPhone 14 மற்றும் iPhone 14 Plus ஆகிய மாடல்களில் பழைய ஏ15 பயோனிக் சிப்செட் பொருத்தப்பட்டிருந்தாலும், கேமரா தொகுதியை மேம்படுத்தி வழங்கி இருக்கிறது ஆப்பிள். கேமரா அம்சங்களை பொறுத்தவரை இரண்டு மாடல்களிலும் f/1.5 துளையுடன் கூடிய புதிய 12MP பிரதான கேமரா மற்றும் அல்ட்ராவைடு கேமரா பொருத்தப்பட்டுள்ளது.

செல்பி மற்றும் வீடியோ ஆதரவு

செல்பி மற்றும் வீடியோ ஆதரவு

குறைந்த ஒளி பதிவு மற்றும் ஃபாஸ்ட் நைட்மோட் செயல்திறனில் முந்தைய மாடல்களை விட 49% முன்னேற்றம் இருக்கும் என ஆப்பிள் தெரிவித்துள்ளது. செல்பி மற்றும் வீடியோ ஆதரவுக்கு என புதிய ஐபோன்களின் முன்புறத்தில் 12 எம்பி ட்ரூடெப்த் சென்சார் பொருத்தப்பட்டிருக்கிறது. செல்ஃபிகள் மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு முன்பக்கத்தில் 12 மெகாபிக்சல் TrueDepth கேமராவும் உள்ளது.

Source: gadgets360

Best Mobiles in India

English summary
You can buy Apple iPhone 14 at Rs.7000 discount price: Go to JioMart Offline site immediately

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X