Home
Mobile

முன்பக்கம் 5.5 இன்ச், பின்பக்கம் 5.2 இன்ச் என அசத்தும் யோட்டோபோன் 3.!

இந்த சாதனத்தின் முக்கிய சிறப்பம்சமாக ஸ்மார்ட்போனின் பின்புற பலகத்தில் இருக்கும் இ-இன்க் டிஸ்பிளே திகழ்கிறது. கருவியின் முன்பக்கம் ஒரு அமோஎல்இடி டிஸ்பிளே கொண்டுள்ளது.

By Muthuraj

வட சீனாவில் நிகழ்ந்த ஒரு மாநாட்டில் யோட்டாபோன்3 அறிவிக்கப்பட்டுள்ளது. டூயல் டிஸ்பிளேவிற்காக அறியப்படும் யோட்டாபோன் 2 சாதனத்தின் இரண்டு மாறுபாட்டுகளான 64 ஜிபி மற்றும் 128 ஜிபி சேமிப்பு மாதிரிகள் முறையே ரூ.22,539/- மற்றும் சுமார் ரூ.28,978/- என்ற விலை நிர்ணயம் பெற்றது.

இப்போது அதனை தொடர்ந்து வெளியாகியுள்ள யோட்டாபோன் 3 ஆனது எகாடேட் மூலம் வெளியான அறிக்கையின்படி, இந்த ஸ்மார்ட்போன் ரஷ்யாவிலும் சீனாவிலும் இந்த ஆண்டின் முற்பகுதியில் கிடைக்கிறது. இருப்பினும், இந்தியவில் எப்போது கிடைக்கும் மற்றும் இந்திய விலை நிர்ணயம் பற்றிய செய்திகள் எதுவும் இல்லை.

இந்த சாதனத்தின் முக்கிய சிறப்பம்சமாக ஸ்மார்ட்போனின் பின்புற பலகத்தில் இருக்கும் இ-இன்க் டிஸ்பிளே திகழ்கிறது. கருவியின் முன்பக்கம் ஒரு அமோஎல்இடி டிஸ்பிளே கொண்டுள்ளது.

டிஸ்பிளே

டிஸ்பிளே

யோட்டாபோன் 3 ஆனது முன்பக்கத்தில் 1920 x 1080 பிக்சல்கள் திரை தீர்மானம் கொண்ட ஒரு 5.5 அங்குல அமோ எல்இடி டிஸ்பிளேவும் பின்பக்கம் ஒரு 5.2 அங்குல எச்டி இ-இன்க் தொடுதிரையும் கொண்டுள்ளது. மேலும் இந்த தொலைபேசியின் முன்பக்கம் ஒரு கைரேகை சென்சார் உள்ளது.

3200எம்ஏஎச் பேட்டரி

3200எம்ஏஎச் பேட்டரி

மேலும் இந்த ஸ்மார்ட்போன் 4ஜிபி ரேம், இரட்டை ப்ளாஷ் கொண்ட 12 மெகாபிக்சல் பின்புற கேமரா, 13 மெகாபிக்சல் முன்பக்க கேமரா, 3200எம்ஏஎச் பேட்டரி மற்றும் ஒரு யூஎஸ்பி டைப்-சி போர்ட் ஆகிய அம்சங்களை கொண்டுள்ளது.

ஸ்னாப்டிராகன் 625 செயலி

ஸ்னாப்டிராகன் 625 செயலி

க்வால்காம் ஸ்னாப்டிராகன் 625 செயலி மூலம் இயக்கப்படும் இந்த ஸ்மார்ட்போனின் நிறுவனம் கடந்த 2014-ஆம் ஆண்டில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. எனினும் யோட்டாபோன் 2 விற்பனையை ப்ளிப் ப்கார்ட் மூலம் ரூ.23,499/-க்கு நிகழ்த்தியது. அக்கருவி இரண்டு பக்கமும் 4.3 அங்குல டிஸ்பிளே கொண்டிருந்தது.

எலெக்ட்ரானிக் பேப்பர் தொழில்நுட்பம்

எலெக்ட்ரானிக் பேப்பர் தொழில்நுட்பம்

எலெக்ட்ரானிக் பேப்பர் தொழில்நுட்பம் மூலம் கருவியின் சார்ஜ் முழுமையாக காலியான பின்னரும் கூட ஸ்மார்ட்போனின் ஒரு காட்சி எப்பொழுதும் ஆன் ஆகியே இருக்கும். இதன் திரை கார்னிங் கொரில்லா கிளாஸ் மூலம் பாதுகாக்கப்பட்டுள்ளது மற்றும் 640x300 பிக்சல்கள் தீர்மானம் கொண்டிருக்கிறது மற்றும் அதை கட்டுப்படுத்த டிஸ்பிளேவின் கீழ் தொடு மண்டலமும் உள்ளது.

உயர் வரையறை தீர்மானம்

உயர் வரையறை தீர்மானம்

யோட்டோபோன் 2 சாதனத்தின் 4.3-அங்குல அளவிலான முக்கிய திரையானது உயர் வரையறை தீர்மானம் மற்றும் கொள்ளளவு தொடு உள்ளீடு கொண்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

2ஜிபி ரேம், 32 ஜிபி உள் சேமிப்பு

2ஜிபி ரேம், 32 ஜிபி உள் சேமிப்பு

எல்இடி ப்ளாஷ் கொண்ட 13 மெகாபிக்சல் பின்புற கேமிராவும், 1 எம்பி முன்பக்க கேமராவும் கொண்டுள்ள இக்கருவி 1.7 ஜிகாஹெர்ட்ஸ் ஸ்னாப்டிராகன் 400 டூயல் கோர் ப்ராஸசர், 2ஜிபி ரேம், 32 ஜிபி உள் சேமிப்பு, ஆண்ட்ராய்டு 4.2.2 ஜெல்லி பீன் இயங்குதளம் ஆகிய அம்சங்களை கொண்டுள்ளது.

இணைப்பு ஆதரவு

இணைப்பு ஆதரவு

மேலும் யோட்டோபோன் 2 ஸ்மார்ட்போன் ஜிபிஎஸ், மைக்ரோ சிம் கார்டு ஸ்லாட், 3.5 மி.மீ கனெக்டர், ப்ளூடூத் 4.0 மற்றும் வைஃபை ஆகிய இணைப்பு ஆதரவுகளையும் வழங்குகிறது.

Best Mobiles in India

English summary
YotaPhone 3 with dual-screen to launch later this year: Everything you need to know. Read more about this in Tamil GizBot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X