Home
Mobile

இரண்டு பக்கமும் டிஸ்பிளே கொண்ட யோடாபோன் 3 (விலை & அம்சங்கள்).!

இந்த சாதனத்தின் முக்கிய சிறப்பம்சமாக ஸ்மார்ட்போனின் பின்புற பலகத்தில் உள்ள இ-இன்க் டிஸ்பிளே உள்ளது.

By Muthuraj

யோடாபோன் 2 ஸ்மார்ட்போனின் வெற்றியை தொடர்ந்து யோடாபோன் 3 என்ற ஸ்மார்ட்போனை நிறுவனம் அறிவித்துள்ளது. சீனாவில் உள்ள சோங்கிங் மாநாட்டு மையத்தில் வருகிற செப்டம்பர் 19 அன்று அறிமுகப்படுத்தப்படவுள்ள இந்த ஸ்மார்ட்போன் மொத்தம் இரண்டு வகைகளில் வெளிவருகிறது.

இரண்டு பக்கமும் டிஸ்பிளே கொண்ட யோடாபோன் 3 (விலை & அம்சங்கள்).!

64 ஜிபி உள்ளடக்க சேமிப்பு மற்றும் 128ஜிபி சேமிப்பு என்ற இரண்டு மாதிரிகளில் வெள்ளை மற்றும் கருப்பு நிறங்களில் வெளியாகும் இந்த யோடாபோன் 3 ஸ்மார்ட்போனின் அம்சங்கள் மற்றும் விலை நிர்ணயத்தை பொறுத்தமட்டில்..

இரண்டு மாதிரிகள்; மூன்று கருவிகள்

இரண்டு மாதிரிகள்; மூன்று கருவிகள்

64ஜிபி மாதிரியானது சுமார் ரூ.23,054/- என்றும் மற்றும் அதன் 128ஜிபி மாதிரியின் வெள்ளை நிற மாறுபாடு ரூ.29,784/- என்றும் மற்றும் அதன் கருப்பு வண்ண மாதிரி ரூ.31,319/- என்றும் விலை நிர்ணயம் பெற்றுள்ளது.

விலைகள் நீக்கப்பட்டுள்ளன

விலைகள் நீக்கப்பட்டுள்ளன

கடந்த ஆகஸ்ட் மாதம், இந்த மூன்று வகை கருவிகளும் யோடோவின் உத்தியோகபூர்வ இணைய தளத்தில் ஆண்டு விலை நிர்ணயத்தின் கீழ் பட்டியலிடப்பட்டுள்ளன. ஆனால் இப்போது இணையதளத்தில் இருந்து விலைகள் நீக்கப்பட்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

5.5 அங்குல அமோஎல்இடி டிஸ்பிளே

5.5 அங்குல அமோஎல்இடி டிஸ்பிளே

இந்த சாதனத்தின் முக்கிய சிறப்பம்சமாக ஸ்மார்ட்போனின் பின்புற பலகத்தில் உள்ள இ-இன்க் டிஸ்பிளே உள்ளது. யோடாபோன் 3 ஆனது 1920 x 1080 பிக்சல்கள் என்ற திரை தீர்மானம் கொண்ட 5.5 அங்குல அமோஎல்இடி டிஸ்பிளே கொண்டுள்ளது பின்பக்கம் ஒரு 5.2 அங்குல எச்டி இ-இன்க் தொடுதிரையும் கொண்டுள்ளது.

64 / 128ஜிபி உள் சேமிப்பு

64 / 128ஜிபி உள் சேமிப்பு

முன்பக்கம் ஒரு கைரேகை சென்சார் கொண்டுள்ள இந்த தொலைபேசி ஆக்டா கோர் க்வால்காம் ஸ்னாப்ட்ராகன் 625 செயலி உடனான 4 ஜிபி ரேம் மற்றும் 64 / 128ஜிபி உள் சேமிப்பு கொண்டு இயங்குகிறது.

ஆண்ட்ராய்டு 7.1.1 நௌவ்கட்

ஆண்ட்ராய்டு 7.1.1 நௌவ்கட்

இரண்டு வகையான மாறுபாடுகளும் மைக்ரோ எஸ்டி அட்டைக்கான இடத்தை கொண்டுள்ளன. ஆண்ட்ராய்டு 7.1.1 நௌவ்கட் இயக்க முறைமையின் கீழ் யோடா ஓஎஸ் 3.0 கொண்டு இயங்கும். 3300எம்ஏஎச் பேட்டரி மூலம் ஆதரிக்கப்படும் இந்த ஸ்மார்ட்போன் ஒரு ரிவெர்சபிள் யூஎஸ்பி டைப்-சி கனெக்டர் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

13 மெகாபிக்சல் பின்புற கேமரா

13 மெகாபிக்சல் பின்புற கேமரா

கேமரா துறையை பொறுத்தமட்டில், யோடாபோன் 3 ஆனது ஆட்டோ போகஸ், இரட்டை தொனியில் எல்இடி ப்ளாஷ் கொண்ட 13 மெகாபிக்சல் பின்புற கேமரா மற்றும் ஒரு 12 மெகாபிக்சல் முன் கேமரா கொண்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் க்ளோனாஸ், 3.5 மிமீ ஹெட்போன் ஜாக், ப்ளூடூத் மற்றும் வைஃபை, ஏஜிபிஎஸ் போன்ற இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது.

Best Mobiles in India

English summary
YotaPhone 3 to be launched on September 19. Read more about this in Tamil GizBot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X