Home
Mobile

இரண்டு பக்கமும் டிஸ்பிளே கொண்ட யோடாபோன் 3 (விலை & அம்சங்கள்).!

இதன் இந்திய விற்பனை, கிடைக்கும் விவரம் மற்றும் விலை பற்றிய வார்த்தைகள் இல்லை எனினும் மாறுபாடுகள் மற்றும் அம்சங்கள் சார்ந்த விவரங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.

By Muthuraj

யோடாபோன் 2 ஸ்மார்ட்போனின் வெற்றியை தொடர்ந்து யோடாபோன் 3 என்ற ஸ்மார்ட்போனை நிறுவனம் அறிவித்துள்ளது. இக்கருவியின் முக்கிய குறிப்புகள் மற்றும் கிடைக்கும் விபரங்களும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, யோடாபோன் 3 ஆனது சீனாவில் யோடா3 என்ற பெயரில் வெளியாகும், இக்கருவியின் ஆன்லைன் வீரப்பனை வருகிற செப்டம்பர் 5-ஆம் ஜேடி.காம் வலைதளத்தில் தொடங்கும்.

இரண்டு பக்கமும் டிஸ்பிளே கொண்ட யோடாபோன் 3 (விலை & அம்சங்கள்).!

இந்த ஸ்மார்ட்போனின் ஆப்லைன் விற்பனை செப்டம்பர் 18-ம் தேதி தொடங்குகிறது. இதன் இந்திய விற்பனை, கிடைக்கும் விவரம் மற்றும் விலை பற்றிய வார்த்தைகள் இல்லை எனினும் மாறுபாடுகள் மற்றும் அம்சங்கள் சார்ந்த விவரங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.

இரண்டு வகை மாறுபாடு

இரண்டு வகை மாறுபாடு

யோடாபோன் 3 ஸ்மார்ட்போன் ஆனது - 64 ஜிபி உள் சேமிப்பு மாறுபாடு (தோராயமாக ரூ.23,054 மற்றும்) மற்றும் 128ஜிபி உள்ளடக்க சேமிப்பு மாதிரி (சுமார் ரூ.29,784) - இரண்டு வகைகளில் வருகிறது.

5.5 அங்குல அமோஎல்இடி டிஸ்பிளே

5.5 அங்குல அமோஎல்இடி டிஸ்பிளே

இந்த சாதனத்தின் முக்கிய சிறப்பம்சமாக ஸ்மார்ட்போனின் பின்புற பலகத்தில் உள்ள இ-இன்க் டிஸ்பிளே உள்ளது. யோடாபோன் 3 ஆனது 1920 x 1080 பிக்சல்கள் என்ற திரை தீர்மானம் கொண்ட 5.5 அங்குல அமோஎல்இடி டிஸ்பிளே கொண்டுள்ளது பின்பக்கம் ஒரு 5.2 அங்குல எச்டி இ-இன்க் தொடுதிரையும் கொண்டுள்ளது.

64 / 128ஜிபி உள் சேமிப்பு

64 / 128ஜிபி உள் சேமிப்பு

முன்பக்கம் ஒரு கைரேகை சென்சார் கொண்டுள்ள இந்த தொலைபேசி ஆக்டா கோர் க்வால்காம் ஸ்னாப்ட்ராகன் 625 செயலி உடனான 4 ஜிபி ரேம் மற்றும் 64 / 128ஜிபி உள் சேமிப்பு கொண்டு இயங்குகிறது.

ஆண்ட்ராய்டு 7.1.1 நௌவ்கட்

ஆண்ட்ராய்டு 7.1.1 நௌவ்கட்

இரண்டு வகையான மாறுபாடுகளும் மைக்ரோ எஸ்டி அட்டைக்கான இடத்தை கொண்டுள்ளன. ஆண்ட்ராய்டு 7.1.1 நௌவ்கட் இயக்க முறைமையின் கீழ் யோடா ஓஎஸ் 3.0 கொண்டு இயங்கும். 3300எம்ஏஎச் பேட்டரி மூலம் ஆதரிக்கப்படும் இந்த ஸ்மார்ட்போன் ஒரு ரிவெர்சபிள் யூஎஸ்பி டைப்-சி கனெக்டர் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

13 மெகாபிக்சல் பின்புற கேமரா

13 மெகாபிக்சல் பின்புற கேமரா

கேமரா துறையை பொறுத்தமட்டில், யோடாபோன் 3 ஆனது ஆட்டோ போகஸ், இரட்டை தொனியில் எல்இடி ப்ளாஷ் கொண்ட 13 மெகாபிக்சல் பின்புற கேமரா மற்றும் ஒரு 12 மெகாபிக்சல் முன் கேமரா கொண்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் க்ளோனாஸ், 3.5 மிமீ ஹெட்போன் ஜாக், ப்ளூடூத் மற்றும் வைஃபை, ஏஜிபிஎஸ் போன்ற இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது.

Best Mobiles in India

English summary
YotaPhone 3 announced with dual-screen and Android Nougat. Read more about this in Tamil GizBot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X