Home
Mobile

சொக்க வைக்கும் புதிய சோனி எரிக்ஸன் ஸ்மார்ட்போன்!

By Super
சொக்க வைக்கும் புதிய சோனி எரிக்ஸன் ஸ்மார்ட்போன்!

பல அருமையான வசதிகளை மொபைல்கள் மூலம் கொடுத்து, மக்கள் மத்தியில் பாராட்டுதல்களை பெற்று வருகிறது சோனி எரிக்சன் நிறுவனம். அந்த வரிசையில் புதிய எக்ஸ்பீரியா ஸ்மார்ட்போனை சோனி எரிக்ஸன் அறிமுகப்படுத்த இருக்கிறது. இந்த புதிய ஸ்மார்ட்போனின் புகைப்படங்கள் ஆன்லைனில் வெளியாகி உள்ளன.

சோனி எரிக்சனின் புதிய படைப்பான இந்த எக்ஸ்பீரியா யூ என்று சொல்லப்படும் ஸ்மார்ட்போனின் சரியான பெயர் வெளி வரவில்லை. ஆனால் இதன் பெயர் எஸ்டி-25ஐ காம்குவாட் என்று முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதில் அகன்ற 3.5 மெகா பிக்ஸல் திரை பொருத்தப்பட்டுள்ளது. இந்த திரை 480 X 854 பிக்ஸல் திரை துல்லியத்தினை கொடுக்கும். ஆன்ட்ராய்டு ஜின்ஜர்பிரெட் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும், இதன் டியூவல் கோர் பிராசஸரும் 1ஜிகாஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும்.

சிறப்பான கேமராவும் இதில் கொடுக்கப்பட்டுள்ளது. 5 மெகா பிக்ஸல் கேமராவினால் புகைப்படங்களையும், வீடியோவினையும் அழகாக எடுக்கலாம். இதுவரை சோனி எரிக்ஸன் நிறுவனம் அனைவரும் மெச்சும் வகையில் உள்ள தொழில் நுட்பங்களை தான் கொடுத்து கொண்டும் இருக்கிறது. இந்த புதிய எஸ்டி-25ஐ ஸ்மார்ட்போனின் விலையும், இன்னும் அதிகமான விவரமும் அடுத்த வாரத்தில் வெளியாகும்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X