சோலோ ஆன்டிராய்டு கிட்காட் ஸ்மார்ட்போன் ரூ.6,999 தாங்க...

Written By:

சோலோ நிறுவனம் ஸ்மார்ட்போன் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதுக்கு இப்ப என்னனு கேக்குறீங்களா, இதோட விலை ரூ. 6,999 தாங்க. சரி அப்ப கண்டிப்பா மொக்கை போனாக தான் இருக்கும்னு சொல்றீங்களா, அதுக்கு முன்னாடி இந்த போன்ல என்னென்ன சிறப்பம்சங்கள் இருக்குனு பாருங்க.

சோலோ ஆன்டிராய்டு கிட்காட் ஸ்மார்ட்போன் ரூ.6,999 தாங்க...

டூயல் சிம் சோலோ கியு710எஸ் ஆன்டிராய்டு 4.4 கிட்காட் ஓஎஸ் மூலம் இயங்குகிறது, 4.5 இன்ச் கியுஎஹ்டி 540*960 பிக்சல், ஐபிஎஸ் டிஸ்ப்ளேவும் இதில் உள்ளது.

கியு710எஸ் 1.3 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் மீடியாடெக் எம்டி6582 சிப்செட் பிராசஸர், 1 ஜிபி ராமும் கொடுக்கப்பட்டுள்ளது. கேமராவை பொருத்தவரை எல்ஈடி ப்ளாஷ் கொண்ட 8 எம்பி ப்ரைமரி கேமராவும், 1.3 ஜிகாஹெர்ட்ஸ் முன்பக்க கேமராவும் உள்ளது. மெமரியை பொருத்த வரை 8 ஜிபி இன்டெர்னல் மெமரியும், கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதியும் உள்ளது.

கனெக்டிவிட்டி ஆப்ஷன்களில் 3ஜி, வைபை, ப்ளூடூத், ஜிபிஎஸ், எப்எம் ரேடியோ வசதிகள் இருப்பதோடு இந்த ஸ்மார்ட்போனில் ஏம்பியன்ட் லைட் சென்சார், அக்செல்லோமீட்டர் மற்றும் ப்ராக்சிமிட்டி சென்சார் ஆகியவைகளும் உள்ளது. பேட்டரியை பொருத்த வரை 2000 எம்ஏஎஹ் பேட்டரி மூலம் 2 ஜி நெட்வர்கில் 22 மணி நேரமும், 3ஜி நெட்நர்க் மூலம் 12 மணி நேர பேட்டரி பேக்கப்பும் கொடுக்கின்றது.

English summary
Xolo Q710s With Android 4.4 KitKat Launched at Rs. 6,999. Xolo has launched the Q710s smartphone in India at Rs. 6,999. The smartphone is listed on company's website with price
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot