சோலோ கியு700 ஸ்மார்ட்போன் விலை ரூ.6,999
சோலோ நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் கியு700 ஐபி சான்றிதழ் கொண்டு தண்னீர் மற்றும் தூசி புகாத அளவு வடிவமைக்கப்பட்டுள்ளது இதன் விலை ரூ.6,999 என அந்நிறுவனத்தின் இணையத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது, ஆனால் விற்பனை தேதி குறித்து எந்த தகவலும் இல்லை.
[புத்தாண்டு சலுகை 50 சதவீதம் தள்ளுபடி கொண்ட டாப் 10 ஸ்மார்ட்போன்கள்]
2012 ஆம் ஆண்டு வெளியான கியு700 ஸ்மார்ட்போனை விட வித்தியாசமாக இருக்கும் இந்த ஸ்மார்ட்போனில் இரு முன்பக்க கேமராக்கள் இருக்கின்றது. 4.5 இன்ச் 854*480 பிக்சல் மற்றும் டூயல் சிம் கொண்டு 10.8 எம்எம் தட்டையாக இருக்கின்றது.

மீடியாடெக் MTK 6582M SoC மற்றும் 1.3 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் பிராசஸர் 400 ஜிபியு மற்றும் 1 ஜிபி ராம் கொண்டுள்ளது. மேலும் ஆன்டிராய்டு 4.4.2 கிட்காட் கொண்டு இயங்குவதோடு 8 ஜிபி இன்டெர்னல் மெமரியும் கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதியும் உள்ளது.
[ஆப்பிள் ஐபோன் 6+ ஸ்மார்ட்போனை விட சாம்சங் கேலக்ஸி நோட் 4 சிறந்தது]
கேமராவை பொருத்த வரை 5 எம்பி ப்ரைமரி கேமரா மற்றும் விஜிஏ முன்பக்க கேமராவும் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் வைபை 802.11 b/g/n, ப்ளூடூத் 4.0, 3ஜி, GPRS/ EDGE, A-GPS இருப்பதோடு 2000 எம்ஏஎஹ் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகின்றது.


Click it and Unblock the Notifications