ரூ. 8,499 க்கு வெளியான சோலோ ஒபஸ் 3 ஆன்டிராய்டு கிட்காட் ஸ்மார்ட்போன்
சோலோ நிறுவனம் புதிய ஒபஸ் 3 ஸ்மார்ட்போனை ரூ.8,499 க்கு வெளியிட்டது. ஒபஸ் 3, 5 எஹ்டி ஐபிஎஸ் டிஸ்ப்ளே, 1.3 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் பிராசஸர் மற்றும் 1 ஜிபி ராம் மூலம் இயங்குகின்றது. கேமராவை பொருத்த வரை டூயல் ப்ளாஷ் கொண்ட 8 மெகாபிக்சல் ப்ரைமரி கேமரா மற்றும் 5 மெகாபிக்சல் முன்பக்க கேமராவும் உள்ளது.

ஒபஸ் 3 ஆன்டிராய்டு 4.4 கிட்காட் மூலம் இயங்குவதோடு 8 ஜிபி இன்டெர்னெல் மெமரி கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி இருப்பதோடு 2500 எம்ஏஎஹ் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகின்றது. மேலும் 3ஜி, ஜிபிஆர்எஸ்/ எட்ஜ், வைபை மற்றும் ப்ளூடூத் 4.0 ஆப்ஷன்களும் கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும் மோஷன் கன்ட்ரோல் தொழில்நுட்பம் மூலம் மியுசிக் ப்ளேயர், எப்எம் ரேடியோ, கேலரி மற்றும் கேமரா ஆகிய ஆப்ஷன்களை இயக்க முடியும். ஒபஸ் 3 மூலம் நீங்க பல அப்ளிகேஷன்களை செயல்படுத்த முடியும்.


Click it and Unblock the Notifications