Home
Mobile

மிஸ் பண்ணிடாதீங்க.. Amazon சம்மர் சேலில் பாதிக்கு பாதி விலையில் Xiaomi போன்.. என்ன மாடல்?

அமேசான் கிரேட் சம்மர் சேல் 2025 (Amazon Great Summer Sale 2025) விற்பனையின் ஒரு பகுதியாக ஷாவ்மீ நிறுவனத்தின் ஸ்பெஷல் ஸ்மார்ட்போன் ஒன்று கிட்டத்தட்ட பாதிக்கு பாதி விலையில் வாங்க கிடைக்கிறது. அதென்ன ஸ்மார்ட்போன் அதன் அசல் விலை நிர்ணயம் என்ன? ஆபர் விலை என்ன? என்னென்ன அம்சங்களை பேக் செய்கிறது? இந்த ஸ்மார்ட்போனை நம்பி வாங்கலாமா?

என்ன மாடல்? நாம் இங்கே பேசுவது ஷாவ்மீ 14 சிவி (Xiaomi 14 Civi) ஸ்மார்ட்போனை பற்றித்தான். வழக்கமான ஷாவ்மீயின் சிவி சீரீஸ் ஸ்மார்ட்போன் ஆனது சீனாவில் மட்டுமே அறிமுகம் செய்யப்படும். ஆனால் இது ஸ்பெஷல் ஆக இந்திய சந்தையிலும் அறிமுகமானது. தற்போது இது அமேசான் இந்தியா வலைத்தளத்தில் நம்ப முடியாத ஆபர் விலையில் வாங்க கிடைக்கிறது.

Amazon சம்மர் சேலில் பாதிக்கு பாதி விலையில் Xiaomi போன்.. என்ன மாடல்?

அப்படி என்ன ஆபர்? அமேசான் கிரேட் சம்மர் சேல் 2025 விற்பனையின் ஒரு பகுதியாக, ஷாவ்மீ 14 சிவி ஸ்மார்ட்போனின் பேஸிக் 8ஜிபி ரேம் + 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ஆனது அதன் அசல் எம்ஆர்பி விலையான ரூ.54,999 க்கு பதிலாக 42% நேரடி தள்ளுபடியை பெற்று ரூ.31,999 க்கு வாங்க கிடைக்கிறது. மேலும் கூடுதல் வங்கி சலுகையின் கீழ் ரூ.29,999 க்கு வாங்க முடியும் என்று அமேசான் குறிப்பிட்டுள்ளது.

வாங்கலாமா? வேண்டாமா? ஷாவ்மீ 14 சிவி ஸ்மார்ட்போனை நம்பி வாங்க 3 காரணங்களை முன்வைக்கலாம். ஒன்று - அதன் அற்புதமான டிசைன் மற்றும் தரமான பில்ட் குவாலிட்டி. இரண்டாவது - அதன் பெரிய மற்றும் பிரகாசமான டிஸ்பிளே. மூன்றாவது - பக்காவான அவுட்புக்களை வழங்கும் அதன் கேமரா செட்டப். இருந்தாலும் கூட இந்த ஸ்மார்ட்போனில் ஒரு சின்ன குறை உள்ளது. அது இந்த ஸ்மார்ட்போனின் சற்றே சரியான பேட்டரி கெப்பாசிட்டி ஆகும். சிலருக்கு இது பெரிய குறையாக கூட தெரியலாம்!

ஷாவ்மீ 14 சிவி ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்: இது டூயல் சிம் ஆதரவு, ஆண்ட்ராய்டு 14-ஐ அடிப்படையாக கொண்ட ஹைப்பர்ஓஎஸ், 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.55-இன்ச் 1.5கே கர்வ்டு AMOLED டிஸ்பிளே, 4என்எம் ஸ்னாப்டிராகன் 8எஸ் ஜென் 3 சிப்செட், 12ஜிபி வரை LPDDR5 ரேம் மற்றும் 512ஜிபி UFS 4.0 ஸ்டோரேஜ், வழக்கமான வேப்பர் கூலிங் சிஸ்டம்களை விட மூன்று மடங்கு திறமையாக செயல்படுவதாக கூறப்படும் ஐஸ்லூப் (IceLoop) கூலிங் சிஸ்டம் போன்றவைகளை கொண்டுள்ளது.

கேமராக்களை பொறுத்தவரை, இபோது சம்மிலக்ஸ் லென்ஸுடன் இணைந்து லைகாவால் வடிவமைக்கப்பட்ட ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது. அதில் ஆப்டிகல் இமேஜ் ஸ்டேபிலைசேஷன், எப்/1.63 அபெர்க்ஷர் மற்றும் 25மிமீ சமமான குவிய நீளம் கொண்ட 50-மெகாபிக்சல் லைட் ஃப்யூஷன் 800 இமேஜ் சென்சார் + 2எக்ஸ் ஜூம் கொண்ட 50-மெகாபிக்சல் டெலிஃபோட்டோ கேமரா + 12-மெகாபிக்சல் 120 டிகிரி வைட் ஆங்கிள் ஷூட்டர் உள்ளது. முன்பக்கத்தில் இரண்டு 32-மெகாபிக்சல் செல்பீ கேமராக்கள் உள்ளன.

இதுதவிர்த்து டால்பி அட்மோஸ் ஆதரவுடன் ஸ்டீரியோ ஸ்பீக்கர்ஸ், இன்-டிஸ்ப்ளே பிங்கர் பிரிண்ட் சென்சார் மற்றும் ஏஐ-ஆதரவு கொண்ட ஃபேஸ் அன்லாக் சிஸ்டம் போன்ற அம்சங்களையும் கொண்டுள்ளது. கடைசியாக இது 67W வயர்டு சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 4,700mAh பேட்டரியை கொண்டுள்ளது. ஷாவ்மீயின் கூற்றுப்படி இது 30 நிமிடங்களில் 80 சதவீதம் பேட்டரியை சார்ஜ் செய்யும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Xioami civi 14 gets biggest discount ever in amazon great summer sale 2025
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X