மொத்தம் 4 கேமராக்களுடன் களமிறங்கும் சியோமி எக்ஸ்1.!

|

கடந்த வாரம் சியோமி நிறுவனம் அதன் அடுத்த சாதனம் சார்ந்த பணியில் ஈடுபட்டு வருவதாக தகவலொன்று வெளியானது. மேலும் அந்த புதிய ஸ்மார்ட்போன் ஆனது நிறுவனத்தின் எக்ஸ்1 ஸ்மார்ட்போனாக இருக்கலாமென்ற ஒரு ஆன்லைன் தகவலும் வெளியானது.

இந்நிலைப்பாட்டில் கடந்த வார இறுதியில் ஆண்ட்ராய்ட் ட்ரெஸெர்ஸில் இருந்து வந்த அறிக்கை சாதனத்தின் விவரங்கள் சார்ந்த சில விடயங்களை பகிர்ந்துக்கொண்டது. தற்போது கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று விப மூலம் வெளியான அறிக்கையின் கீழ் தகவல்கள் மற்றுமின்றி சியோமி எக்ஸ்1 ஸ்மார்ட்போனின் லீக்ஸ் புகைப்படங்களும் வெளியாகியுள்ளன.

5.5 அங்குல க்யூஎச்டி 1440பி டிஸ்பிளே

5.5 அங்குல க்யூஎச்டி 1440பி டிஸ்பிளே

கசிந்த புகைப்படங்களில் இருந்து வெளியாகுமென்று எதிர்பார்க்கப்படும் சியோமி எல்ஸ்1 ஒரு 5.5 அங்குல க்யூஎச்டி 1440பி டிஸ்பிளே பொருத்தப்பட்டிருக்க வேண்டும் மற்றும் ஸ்னாப்டிராகன் 660 எஸ்ஓசி மூலம் உயர் இறுதி மற்றும் நடுப்பகுதி வரம்பிலான செயல்திறனை வழங்கும்.

மொத்தம் நான்கு கேமரா சென்சார்கள்

மொத்தம் நான்கு கேமரா சென்சார்கள்

சியோமி எக்ஸ்1 ஸ்மார்ட்போனின் இமேஜிங் துறையை பொறுத்தமட்டில் சோனி ஐஎம்எக்ஸ்362 மற்றும் ஐஎம்எக்ஸ்386 சென்சாரை அதன் பின்புறத்தில் ஒரு இரட்டை கேமரா அமைப்பாக கொண்டுள்ளது. மேலும் இக்கருவி இரட்டை செல்பீ கேமரா அமைப்பு கொண்டிருக்குமென்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இரண்டு மாறுபாடுகளில் எதிர்பார்க்கப்படுகிறது

இரண்டு மாறுபாடுகளில் எதிர்பார்க்கப்படுகிறது

வெளியான தகவல்களின்படி, இந்த சியோமி சாதனதமானது இரண்டு மாடல்களில் வெளியிடபடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு மாறுபாட்டில் வழக்கமான டிஸ்ப்ளே மற்றொன்றில் ஜேடிஐ-யிலிருந்து ஒரு முழு திரை டிஸ்ப்ளே இடம்பெறலாம்.

விலை நிர்ணயமும் வெளியாகியுள்ளது

விலை நிர்ணயமும் வெளியாகியுள்ளது

நிறுவனத்தின் வழக்கமான திரை கொண்ட சியோமி எக்ஸ்1 ஸ்மார்ட்போன் ஆனது 4 ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி உள்ளடக்க சேமிப்பு மாறுபாடு சுமார் ரூ.19,000/- அல்லது சுமார் ரூ.22,000/- என்ற விலை நிர்ணயம் பெறலாம். மறுபக்கமுள்ள உயர் இறுதியில் மாறுபாடு சுமார் ரூ.24,000/- அல்லது சுமார் ரூ.26,500/- என்ற விலை நிர்ணயம் பெறலாம்.

முழுத்திரை வகை இரண்டு சேமிப்பு மாதிரிகளில்

முழுத்திரை வகை இரண்டு சேமிப்பு மாதிரிகளில்

மேலும் சியோமி எக்ஸ்1 ஸ்மார்ட்போனின் முழுத்திரை வகை இரண்டு சேமிப்பு மாதிரிகளில் துவக்கப்படலாம். அதாவது 6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க சேமிப்பு மாதிரி ரூ.22,000/-கும் மற்றும் 6 ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க சேமிப்பு மாறுபாடு சுமார் ரூ.26,500/-க்கும் வெளியாகலாம்.

இந்த மாதம் துவக்கப்படும்

இந்த மாதம் துவக்கப்படும்

வெளியான தகவலின் கீழ் இந்த சியோமி எக்ஸ்1 ஸ்மார்ட்போன் ஆனது இந்த மாதம் துவக்கப்படும் என்று நம்பப்படுகிறது மேலும் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தலுக்கு நாம் காத்திருக்க வேண்டும். மேலும் சியோமி எக்ஸ்1 சார்ந்த அப்டேட்ஸ்களுக்கு தமிழ் கிஸ்பாட் வலைத்தளத்துடன் இணைந்திருங்கள்.

Best Mobiles in India

English summary
Xiaomi X1 images leak: Specs and price are out. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X