Google தலையில் இடி.. சைலன்ட்-ஆ ரெடியான Xiaomi-யின் முதல் Clamshell Foldable போன்.. எப்போது அறிமுகம்?
கூகுள் (Google) நிறுவனத்தின் முதல் ஃபோல்டபிள் ஸ்மார்ட்போனான பிக்சல் ஃபோல்ட் (Pixel Fold) அறிமுகமாகி முழுதாக 1 மாதம் கூட ஆகவில்லை; இன்னும் சொல்லப்போனால் அது இன்னமும் இந்திய விற்பனைக்கு கூட வரவில்லை. அதற்குள் சீன நிறுவனமான சியோமி (Xiaomi), "நாங்களும் ஆட்டத்துக்கு வரலாமா?" என்று கேட்கும்படியான ஒரு காரியத்தை செய்துள்ளது.
நாளுக்கு நாள் ஃபோல்டபிள் ஸ்மார்ட்போன்களின் (Foldable Smartphone) மீதான வரவேற்பும், ஆசையும் வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிகரித்துக் கொண்டே போகிறது. இதன் விளைவாக ஏற்கனவே மடங்கக்கூடிய போன்களை அறிமுகம் செய்த நிறுவனங்கள் மட்டுமின்றி, மேலும் பல நிறுவனங்கள் தத்தம் சொந்த ஃபோல்டபிள் போன்களில் வேலை செய்து வருகின்றன.

தற்போது இந்த பட்டியலில் சீன நிறுவனமான சியோமியும் (Xiaomi) சேர்ந்துள்ளது. கிடைக்கப்பெற்ற தகவலின்படி, சியோமி தனது முதல் கிளாம்ஷெல் ஃபோல்டபிள் போனை (Xiaomi First-ever Clamshell Foldable Phone) விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது. இது சாம்சங்கின் கேலக்ஸி இஸட் ஃபிளிப் சீரீஸ் (Samsung Galaxy Z Flip Series) போன்களுக்கு நிச்சயம் ஒரு கெட்ட செய்தியாகும்.
சியோமியின் முதல் ஃபோல்டபிள் போனில் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்? இது கிளாம்ஷெல் வடிவமைப்பை பெறும் என்பதால், இது ஒரு ஃபிளிப்-ஃபோல்டபிள் ஸ்மார்ட்போனாகவே இருக்கும். இருப்பினும் இது சாம்சங் கேலக்ஸி இஸட் ஃபிளிப் (Samsung Galaxy Z Flip 4) அல்லது மோட்டோரோலா ரேஸர் 2022 (Motorola Razr 2022) அளவிற்கு "பருமனாக" இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் சியோமியின் முதல் பிளிப் ஃபோல்டபிள் ஸ்மார்ட்போன் ஆனது ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 சிப்செட் (Snapdragon 8 Gen 2 SoC) மூலம் இயக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இது தவிர, சியோமியின் இந்த கிளாம்ஷெல் போன் ஆனது 50W வயர்லெஸ் சார்ஜிங்கையும் (Wireless Charging) ஆதரிக்கலாம்.
மேலும் இந்த ஸ்மார்ட்போன் மல்டி ஆங்கிள் ஹோவரிங் (Multi angle hovering) உடன் 5எக்ஸ் பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ லென்ஸையும் (5X periscope telephoto lens) கொண்டிருக்கலாம். இதுதவிர்த்து சியோமியின் முதல் ஃபிளிப் ஃபோல்டபிள் போனை பற்றிய வேறு விவரங்கள் எதுவும் தற்போது வரை கிடைக்கவில்லை.
எப்போது அறிமுகமாகும்? சியோமி நிறுவனத்தின் முதல் கிளாம்ஷெல் ஃபோல்டபிள் போன் ஆனது சரியாக எப்போது அறிமுகமாகும் என்கிற தகவல் வெளிப்படுத்தப்படவில்லை; அது குறித்த தகவல் கூடிய விரைவில் வெளிப்படுத்தப்படலாம். மேலும் இது சீனாவிற்கு வெளியே உள்ள சந்தைகளில் கிடைக்குமா என்பது குறித்த தகவல் உறுதிப்படுத்தப்படவில்லை.
இருப்பினும் கூகுள் நிறுவனத்தின் முதல் ஃபோல்டபிள் ஸ்மார்ட்போனான் பிக்சல் ஃபோல்ட் (Google Pixel Fold) உட்பட பெரும்பாலான ஃபோல்டபிள் போன்கள் இந்தியாவிற்கு வரும் என்பதால், சியோமியின் ஃபோல்டபிள் போனும் இந்திய சந்தையில் அறிமுகமாக நிறைய வாய்ப்புகள் உள்ளன. அறியாதோர்களுக்கு பிக்சல் ஃபோல்ட் ஆனது வருகிற செப்டம்பர் மாதத்தில் இந்திய விற்பனையை தொடங்குமென்று எதிர்பார்க்கப்படுகிறது.
நினைவூட்டும் வண்ணம், ஓப்போ மற்றும் விவோ நிறுவனங்கள் சமீபத்தில் தங்கள் கிளாம்ஷெல் ஃபோல்டபிள் ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தியது. அதில் ஒப்போ ஃபைண்ட் என்2 ஃபிளிப் (Oppo Find N2 Flip) ஸ்மார்ட்போனானது இந்தியாவில் வாங்க கிடைக்கிறது. மறுகையில் உள்ள விவோ எக்ஸ் ஃபிளிப் (Vivo X Flip) தற்போது வரையிலாக சீனாவில் மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








