நவ.30 ரெடியா இருங்க.! அறிமுகமாகிறது ரெட்மீ வரிசையின் சிறந்த சாதனம்.!

Written By:

வருகிற நவம்பர் 30-ஆம் தேதி இந்தியாவில் புதிய ரெட்மீ ஸ்மார்ட்போன் ஒன்றை அறிமுகப்படுத்த சியோமி நிறுவனம் தயாராக உள்ளது. இப்போது இந்த புதிய ஸ்மார்ட்போன் ஆனது பிரபல இ-காமர்ஸ் வலைத்தளமான ப்ளிப்கார்டில் பிரத்தியேகமாக அறிமுகப்படுத்தப்படும் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

நவ.30 ரெடியா இருங்க.! அறிமுகமாகிறது ரெட்மீ வரிசையின் சிறந்த சாதனம்.!

தற்போது, ப்ளிப்கார்டில் இந்த சாதனம் கிடைக்கும் தன்மையைக் குறிக்கும் டீஸர் இயங்குகிறது மறுகையில் கடந்த சில நாட்களாகவே ரெட்மீ இந்தியா அதன் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கில் இக்கருவி சார்ந்த டீஸர்களை தேஷ் கா ஸ்மார்ட்போன் என்ற ஹேஸ்டேக்கின் கீழ் வெளியிட்ட வண்ணம் உள்ளதென்பதும் குறிப்பிடத்தக்கது.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
ரெட்மீ 5ஏ

ரெட்மீ 5ஏ

எனினும் நவம்பர் 30 அன்று வெளியாகும் ஸ்மார்ட்போனின் பெயரை சியோமி நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை. இருப்பினும், சியோமி அதன் ரெட்மீ 5ஏ ஸ்மார்ட்போனை தான் நாட்டில் தொடங்கவேண்டுமென்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்.

சுமார் ரூ.5,884/- ஆகும்

சுமார் ரூ.5,884/- ஆகும்

கடந்த மாதம் சீனாவில் சியோமி ரெட்மே 5ஏ ஸ்மார்ட்போன் ஆனது 599 யுவான் என்ற விலைப்புள்ளியில் அறிமுகமானது. இந்திய மதிப்பின்படி இது சுமார் ரூ.5,884/- ஆகும். இது நிஜமாயின், இந்தியாவில் அதிக விற்பனையாகும் அடுத்த ரெட்மீ ஸ்மார்ட்போனாக இது திகழுமென்பதில் சந்தேகமில்லை.

டிஸ்ப்ளே

டிஸ்ப்ளே

சியோமி ரெட்மீ 5ஏ கருவியின் அம்சங்களை பொறுத்தமட்டில், இது 720 x 1280 பிக்சல்கள் தீர்மானம் மற்றும் 296பிபிஐ பிக்சல் அடர்த்தி கொண்ட 5-இன்ச் எச்டி டிஸ்ப்ளே கொண்டுள்ளது மற்றும் 1.2ஜிகாஹெர்ட்ஸ் ஸ்னாப்டிராகன் 425 க்வாட்-கோர் ப்ராஸசர் மூலம் இயக்கப்படுகிறது.

ரேம்

ரேம்

இது 2ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி அளவிலான உள்ளடக்க சேமிப்பு கொண்டுள்ளது மற்றும் மைக்ரோஎஸ்டி அட்டை வழியாக 128ஜிபி வரையிலான விரிவாக்க சேமிப்பு வருகிறது. ரெட்மீ 5ஏ ஒரு மெல்லிய 3000 எம்ஏஎச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகின்றது. ஆண்ட்ராய்டு நௌவ்கட் அடிப்படையிலான மியூஐ 9 கொண்டு இயங்குகிறது.

13 மெகாபிக்சல் பின்புற கேமரா

13 மெகாபிக்சல் பின்புற கேமரா

கேமராத்துறையை பொறுத்தமட்டில், ரெட்மீ 5ஏ ஆனது பிடிஏஎப், எல்இடி பிளாஷ், எஃப் / 2.2 துளை, பர்ஸ்ட் ஷார்ட், பனோரமா மோட், எச்டிஆர் மோட் ஆகிய அம்சங்களை கொண்ட ஒரு 13 மெகாபிக்சல் பின்புற கேமரா கொண்டுள்ளது. மறுபக்கம் எப் / 2.0 துளை உடனான 5 மெகாபிக்சல் முன்பக்க எதிர்கொள்ளும் கேமரா கொண்டுள்ளது.

இணைப்பு ஆதரவு

இணைப்பு ஆதரவு

தவிர ஸ்மார்ட்போன் ஆனது, கலப்பு இரட்டை சிம், வோல்ட், வைஃபை, ப்ளூடூத் 4.1, ஜிபிஎஸ் மற்றும் ஒரு மைக்ரோ யுஎஸ்பி போர்ட் ஆகிய இணைப்பு ஆதரவுகளை தன்னுள் கொண்டுள்ளது. அளவீட்டில் இந்த கைபேசியில் 140.4 x 70.1 x 8.35 மிமீ மற்றும் 137 கிராம் எடையுடையதாக உள்ளது.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!


English summary
Xiaomi upcoming Desh ka Smartphone to be a Flipkart exclusive. Read more about this in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot