Home
Mobile

சத்தமின்றி வேலைபார்க்கும் சியோமி; அடுத்த ஸ்மார்ட்போன் பற்றிய விவரங்கள்.!

அந்த சிப்செட் மூலம் இயங்கும் முதல் ஸ்மார்ட்போர்களில் ஒன்றாக, ஒப்போ நிறுவனத்தின் ஒப்போ எப்7 சமீபத்தில் இந்தியாவில் அறிமுகமானது.

By Muthuraj

கடந்த மாதம், மீடியாடெக் நிறுவனம் அதன் முதல் சிப்செட் மல்டி-கோர் ஏஐ ப்ராசஸிங் சிப்செட் ஆன ஹீலியோ பி60பி-ஐ அறிமுகம் செய்தது. அந்த சிப்செட் மூலம் இயங்கும் முதல் ஸ்மார்ட்போர்களில் ஒன்றாக, ஒப்போ நிறுவனத்தின் ஒப்போ எப்7 சமீபத்தில் இந்தியாவில் அறிமுகமானது.

சத்தமின்றி வேலைபார்க்கும் சியோமி; அடுத்த ஸ்மார்ட்போன் பற்றி விவரங்கள்!

அதனை தொடர்ந்து இப்போது, சியோமி நிறுவனத்தின் வரவிருக்கும் ஸ்மார்ட்போனில் ஒன்று ஹீலியோ பி60 எஸ்ஓசி கொண்டு இயங்கும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. ஹீலியோ பி60 ஆனது இடைப்பட்ட ஸ்மார்ட்போன்களில் செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்களை இணைக்கும் திறன் கொண்டுள்ளதால், அடுத்து வரஇருக்கும் சியோமி ஸ்மார்ட்போன் மீது இப்போதே ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் கிளம்பியுள்ளது.

வெளியான அறிக்கையின் படி, பி60 கொண்டு இயங்கும் சியோமி ஸ்மார்ட்போனின் தயாரிப்பானது 2018-ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில் தொடங்கலாம். கூறப்படும் அந்த ஸ்மார்ட்போன் ஆனது சியோமி மி7 ஸ்மார்ட்போனின் ஒரு மாறுபாடாக இருக்கவும் அதிக வாய்ப்புள்ளது.

ஒப்போ மற்றும் சியோமி மட்டுமில்லாமல், விவோ நிறுவனமும் அதன் வரவிருக்கும் ஸ்மார்ட்போனில், ஹீலியோ பி60 சிப்செட்டை பயன்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் விளைவாக, மீடியா டெக் அதன் இரண்டாம் காலாண்டு வருவாயை 60 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவில் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சத்தமின்றி வேலைபார்க்கும் சியோமி; அடுத்த ஸ்மார்ட்போன் பற்றி விவரங்கள்!

சியோமி நிறுவனத்தின் மி7 ஸ்மார்ட்போனின் அம்சங்களை பொறுத்தமட்டில், ஒரு 20 மெகாபிக்சல் பின்பக்க கேமரா கொண்ட ஒரு 6.01 இன்ச் ஓல்இடி காட்சி கொண்டு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில், இது மைக்ரோசாப்ட் சோதனைகளின் சிங்கிள்-கோர் டெஸ்டில் 2,449 மதிப்பெண்களும் மற்றும் மமல்டி-கோர் டெஸ்டில் 8,309 மதிப்பெண்களும் பெற்றிருந்ததும், 6ஜிபி அலசிலான ரேம் கொண்டு வெளியாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Xiaomi to unveil Helio P60-powered smartphone soon: Report. Read more about this in Tamil GizBo
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X