இந்த வருஷம் இந்த Redmi 12C போனை தான் எல்லாம் போட்டிபோட்டு வாங்க போறாங்க.! ஏன்னா விலை கம்மி.!
பட்ஜெட்டுக்கு ஏற்ற ஸ்மார்ட்போன் (Budget smartphone) பயனர்களை ஈர்க்கும் நோக்கத்துடன், சியோமி (Xiaomi) இன் துணை பிராண்டான ரெட்மி (Redmi) நிறுவனம் இப்போது ரெட்மி 12C (Redmi 12C) என்ற புதிய ஸ்மார்ட்போன் மாடலை சீன ஸ்மார்ட்போன் (smartphone) சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது.
கடந்த ஆண்டு மார்ச் மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட ரெட்மியின், Redmi 10C ஸ்மார்ட்போன் மாடலின் வாரிசாக - இந்த Redmi 12C ஸ்மார்ட் போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த புதிய ரெட்மி 12C ஸ்மார்ட்போனின் தோற்றத்தைப் பொறுத்தவரை, ஸ்மார்ட்போன் அதன் முன்னோடியான ரெட்மி 10C உடன் ஒப்பிடும்போது சிறிய மாறுபாடுகளை வழங்குகிறது.

குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும் என்றால், இந்த புதிய Redmi 12C டிவைஸ் ஆனது MediaTek Helio G85 SoC சிப்செட் (chipset) மூலம் இயக்கப்படுகிறது. இது, இதன் முன்னோடி மாடலை விட அதிக சக்தியைக் கொண்டுள்ளது. ஆனால், விலை பிரிவில் அதே ரூ. 8,000 விலை வரம்பில் இது விற்பனையாகத் துவங்குகிறது. இந்த Redmi 12C போனில் மூன்று ஸ்டோரேஜ் வகைகளை (Redmi 12C storage variants) நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
சமீபத்தில் வெளியிடப்பட்ட இந்த சி-சீரிஸ் ரெட்மி ஸ்மார்ட்போனின் விலை, விவரக்குறிப்புகள் மற்றும் பிற விவரங்கள் இதோ. முதலில் இந்த போனின் சிறப்பம்ச விபரங்களைப் பார்த்துவிடலாம். Redmi 12C ஆனது 20.6:9 விகிதத்துடன் கூடிய 6.71' இன்ச் HD+ டிஸ்பிளே (Display) மற்றும் 500 nits பீக் பிரைட்னஸ் கொண்டுள்ளது. இது பின்புறத்தில் 50MP முதன்மை கேமரா (camera) சென்சார் மற்றும் முன்பக்கத்தில் டியூ-ட்ராப் நாட்ச்சில் (dew-drop notch) வைக்கப்பட்டுள்ள 5MP செல்ஃபி கேமராவைக் (selfie camera) கொண்ட இரட்டை பின்புற கேமரா அமைப்பைக் (dual rear camera setup) கொண்டுள்ளது.
ஒரு டேப்லெட் வடிவ கேமரா தொகுதி மற்றும் கைரேகை ஸ்கேனர் (fingerprint scanner) போனின் பின்புறத்தில் ஒரு சதுர வடிவ தொகுதியில் வைக்கப்பட்டுள்ளன. இதற்கிடையில், கேமரா தொகுதி LED ஃபிளாஷ் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் MediaTek Helio G85 SoC மூலம் இயக்கப்படுகிறது. இது 4ஜிபி மற்றும் 6ஜிபி LPDDR4X ரேம் மற்றும் eMMC 5.1 ஃபிளாஷ் ஸ்டோரேஜ் (flash storage) உடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போனின் இன்டர்னல் ஸ்டோரேஜ் உடன் கூடுதல் ஸ்டோரேஜை வழங்க, இந்த போன் மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் (micro SD card slot) மூலம் 512 ஜிபி வரை எக்ஸ்டரா ஸ்டோரேஜை வழங்குகிறது.

இந்த Redmi 12C ஸ்மார்ட்போன் ஆனது 10W சார்ஜிங் அடாப்டருடன் (charging adaptor) வரும் 5,000mAh பேட்டரியைக் (battery) கொண்டுள்ளது. கடந்த மாதம், நிறுவனம் சீனாவில் Redmi Note 12 Pro Speed Edition மற்றும் Redmi K60 தொடர் உள்ளிட்ட பல ஸ்மார்ட்போன்களை வெளியிட்டது. இப்போது, பிராண்ட் நாட்டில் Redmi 12C ஐ வெளியிட்டது. ஆனால் அதன் இந்திய வெளியீட்டு காலவரிசை குறித்து அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் எதுவும் இல்லை. பெரும்பாலும், இந்த டிவைஸ் 2023-ன் முதல் காலாண்டிற்குள் இந்தியாவில் (India) அறிமுகம் செய்யப்பட வாய்ப்புகள் அதிகம்.
Redmi 12C ஸ்மார்ட்போனின் விலை என்ன?
Redmi 12C ஆனது 4ஜிபி + 64ஜிபி ஸ்டோரேஜ் விருப்பத்தை வழங்கும் அடிப்படை மாடலுக்கான விலை CNY 699 ஆகும். இந்திய மதிப்பில் இதன் விலை தோராயமாக ரூ. 8,400 இல் தொடங்குகிறது. அதேபோல், இதன் 4ஜிபி + 128ஜிபி மற்றும் 6ஜிபி + 128ஜிபி சேமிப்பு விருப்பங்களைக் கொண்ட ஸ்மார்ட்ஃபோனின் விலை முறையே CNY 799 (தோராயமாக ரூ. 9,600) மற்றும் CNY 899 (தோராயமாக ரூ. 10,800) ஆகும். இது மூன்று வண்ண விருப்பங்களில் வருகிறது - ஷடோவ் பிளாக், ஸீ-ப்ளூ, மின்ட் க்ரீன் மற்றும் லாவெண்டர் நிறங்களில் வருகிறது.


Click it and Unblock the Notifications








