ரூ.10,000 விலையில் இந்தியா சந்தையில் கிடைக்கும் தலைசிறந்த ஸ்மார்ட்போன்களின் பட்டியல்

ரூ.10,000 பட்ஜெட்டில் தலைசிறந்த ஸ்மார்ட்போன்களின் பட்டியல்

|

இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் இந்த ஆண்டின் இரண்டாவது காலாண்டில் அதிகம் விற்பனை செய்யப்பட்ட ஸ்மார்ட்போன் மற்றும் பட்டியலில் முன்னணி இடத்தில் உள்ள நிறுவனங்கள் எவை என்பதை தொடர்ந்து பார்ப்போம்.

ரூ.10,000 விலையில் இந்தியா சந்தையில் கிடைக்கும் தலைசிறந்த ஸ்மார்ட்போன்

இந்தியாவில் ஸ்மார்ட்போன் விற்பனை சார்ந்து கவுண்ட்டர்பாயிண்ட் நடத்திய ஆய்வில் அதிகம் விற்பனையான ஸ்மார்ட்போன்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. அதன்படி சியோமி, சாம்சங் உள்ளிட்ட நிறுவனங்கள் விற்பனையில் ஆதிக்கம் செலுத்தியுள்ளன.

இத்துடன் இந்தியாவில் எல்டிஇ வசதி கொண்ட ஸ்மார்ட்போன்களின் எண்ணிக்கை 15 கோடிகளை கடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 4ஜி வசதி கொண்ட ஸ்மார்ட்போன்களில் இந்தியா தற்சமயம் சீனா மற்றும் அமெரிக்காவுக்கு அடுத்த இடத்தில் உள்ளது. எனினும் அடுத்த ஆண்டு வாக்கில் இந்தியா அமெரிக்காவை பின்னுக்கு தள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இரண்டாவது காலாண்டு விற்பனையில் ரெட்மி நோட் 4 மொத்தம் 7.2 சதவிகிதம், ரெட்மி 4 4.5 சதவிகிதம், கேலக்ஸி ஜெ2 மொத்தம் 4.3 சதவிகிதம், ஒப்போ A37 மொத்தம் 3.5 சதவிகிதம் மற்றும் கேலக்ஸி ஜெ7 மொத்தம் 3.3 சதவிகிதமாக உள்ளது.

ஜியோ போன் எதிரொலி : இன்டெக்ஸ் நிறுவனம் அறிமுகப்படுத்தும் புதிய 4ஜி வோல்ட் பீச்சர் போன்கள்.!ஜியோ போன் எதிரொலி : இன்டெக்ஸ் நிறுவனம் அறிமுகப்படுத்தும் புதிய 4ஜி வோல்ட் பீச்சர் போன்கள்.!

ஸ்மார்ட்போன் பிரான்டுகளை பொருத்த வரை சாம்சங் 24 சதவிகிதம் பங்குகளும், சியோமி 15.5 சதிவிகிதம், விவோ 12.7 சதவிகிதம் மற்றும் ஒப்போ 9.6 சதவிகிதம் பங்குகளை கொண்டுள்ளது. லெனோவோ நிறுவனம் 6.8 சதிவிகிதம் விநியோகத்துடன் ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளது.

இந்தியாவில் பயன்படுத்தப்படும் ஸ்மார்ட்போன்களில் ஐம்பது சதவிகிதம் 3ஜி வசதி கொண்ட ஸ்மார்ட்போன்கள் என்ற நிலையில் இரண்டாவது காலாண்டில் விற்பனை செய்யப்பட்டதில் சுமார் 96 சிதவிகிதம் ஸ்மார்ட்போன்களில் 4ஜி வசதி கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

சியோமி ரெட்மி நோட் 4:

சியோமி ரெட்மி நோட் 4:

ரெட்மி நோட் 4 ஸ்மார்ட்போனில் 5.5 இன்ச் 1080 பிக்சல் ரெசல்யூஷன் கொண்ட எல்சிடி டிஸ்ப்ளே, குவால்காம் ஸ்னாப்டிராகன் 625 பிராசஸர் வழங்கப்பட்டுள்ளது. இன்டெர்னல் மெமரியுடன் மெமரியை கூடுதலாக 128GB வரை நீட்டிக்கும் வசதி வழங்கப்பட்டுள்ளது.

ரெட்மி நோட் 4 ஸ்மார்ட்போனில் புகைப்படங்களை எடுக்க 13 எம்பி பிரைமரி கேமராவும், 5 எம்பி செல்ஃபி கேமராவும் வழங்கப்பட்டுள்ளது. மேலும் அழகிய புகைப்படங்களை எடுக்க கூடுதலாக கேமரா அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது.

டூயல் சிம் ஸ்லாட் கொண்டுள்ள நோட் 4 ஆண்ட்ராய்டு மார்ஷ்மல்லோ இயங்குதளம் சார்ந்த MIUI 8 யூஸர் இன்டர்ஃபேஸ் கொண்டுள்ளது. 4ஜி வோல்ட்இ தொழில்நுட்பம் கொண்டுள்ள ரெட்மி நோட் 4 ஸ்மார்ட்போன் 4100 எம்ஏஎச் திறன் கொண்ட பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.

சியோமி ரெட்மி 4:

சியோமி ரெட்மி 4:

சியோமி ரெட்மி 4 ஸ்மார்ட்போனில் MIUI 8 சார்ந்த ஆண்ட்ராய்டு 6.0.1 மார்ஷ்மல்லோ இயங்குதளம், முழுமையான மெட்டல் வடிவமைப்பு, கைரேகை ஸ்கேனர் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 5.0 இன்ச் 720x1280 பிக்சல் ரெசல்யூஷன் கொண்ட டிஸ்ப்ளே, 1.4 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 435 சிப்செட் வழங்கப்பட்டுள்ளது.

கைப்படங்களை எடுக்க 13 எம்பி பிரைமரி கேமரா, f/2.0 அப்ரேச்சர், எல்இடி பிளாஷ், 5 எம்பி செல்ஃபி கேமரா மற்றும் f/2.2 அப்ரேச்சர் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் இன்ஃப்ராரெட் சென்சார், 4100 எம்ஏஎச் திறன் கொண்ட பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகின்றது. இத்துடன் ஒவ்வொரு செயலியையும் கைரேகை மற்றும் பாஸ்வேர்டு மூலம் பாதுகாக்கும் வசதியும், டூயல் ஆப்ஸ், ஆண்ட்ராய்டு நௌக்கட் சிறப்பு பீட்டா பதிப்பு உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி ஜெ2:

சாம்சங் கேலக்ஸி ஜெ2:

சாம்சங் கேலக்ஸி ஜெ2 சிறப்பமங்களை பொருத்த வரை 5.0 இன்ச் எச்டி AMOLED டிஸ்ப்ளே, 1.5 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் ஸ்ப்ரெட்ரம் பிராசஸர், 1.5 ஜிபி ரேம் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 8 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ் மற்றும் அழகிய செல்ஃபிக்களை எடுக்க 5 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது.

2600 எம்ஏஎச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படும் கேலக்ஸி ஜெ2 ஆண்ட்ராய்டு 6.0 மார்ஷ்மல்லோ இங்குதளம் கொண்டு இயங்குகிறது.

ஒப்போ A37:

ஒப்போ A37:

ஆண்ட்ராய்டு 5.1 லாலிபாப் இயங்குதளம் கொண்டு இயங்கும் ஒப்போ A37 ஸ்மார்ட்போனில் 5.0 இன்ச் ஐபிஎஸ் எல்.சி.டி. 720x1280 பிக்சல் டிஸ்ப்ளே, குவாட்கோர் 1.5 ஜிகாஹெர்ட்ஸ் குவால்காம் ஸ்னாப்டிராகன் 410 சிப்செட் மற்றும் 16 ஜிபி இன்டெர்னல் மெமரி வழங்கப்பட்டுள்ளது.

இத்துடன் 8 எம்பி பிரைமரி கேமரா, 5 எம்பி செல்ஃபி கேமரா மற்றும் 2630 எம்ஏஎச் பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. டூயல் சிம் ஸ்லாட் கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போனில் மைக்ரோ யுஎஸ்பி 2.0 வழங்கப்பட்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி ஜெ7:

சாம்சங் கேலக்ஸி ஜெ7:

சாம்சங் கேலக்ஸி ஜெ7 (2016) ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு மார்ஷ்மல்லோ 6.0, 5.5 இன்ச் சூப்பர் ஏஎம்ஒஎல்இடி 720x1280 பிக்சல் டிஸ்ப்ளே, 1.6 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் பிராசஸர், 2 ஜிபி ரேம் மற்றும் 16 ஜிபி இன்டெர்னல் மெமரி வழங்கப்பட்டுள்ளது.

இத்துடன் 13 எம்பி பிரைமரி கேமரா, 5 எம்பி செல்ஃபி கேமரா மற்றும் 3300 எம்ஏஎச் பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. டூயல் சிம் ஸ்லாட் மற்றும் மைக்ரோ யுஎஸ்பி 2.0 வழங்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Xiaomi tops in under Rs.10000 smartphones category in India Q2. Models are Redmi Note 4, Samsung Galaxy J2, Opp A37, Galaxy J7 and more.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X