Home
Mobile

Xiaomi மிரட்டிவிட்டாப்ல.. ரூ.7999 விலை முதல் Poco C75, Poco M7 Pro மொபைல்.. 24 மணி நேரத்தில் சேல்ஸ்..

சியோமி (Xiaomi) நிறுவனத்திற்கு சொந்தமான போக்கோ (Poco) பிராண்ட், இந்தியாவில் போக்கோ C75 (Poco C75) மற்றும் போக்கோ M7 ப்ரோ (Poco M7 Pro) ஆகிய இரண்டு ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்துள்ளது. இந்த போன்களின் விலை ரூ. 7,999 முதல் துவங்குகிறது என்பதனால், ஸ்மார்ட்போன் வாங்க விரும்பும் வாடிக்கையாளர்களின் கவனத்தை இந்த போன்கள் ஈர்த்துள்ளன. இந்த Poco M7 Pro மற்றும் Poco C75 ஆகிய மொபைல்களின் விலை மற்றும் சிறப்பம்ச விபரங்களை இப்போது பார்க்கலாம்.

Xiaomi மிரட்டிவிட்டாப்ல.. ரூ.7999 விலை முதல் Poco C75, Poco M7 Pro..

1. போக்கோ C75 சிறப்பம்சம் (Poco C75 Specifications):
புதிய போக்கோ C75 ஸ்மார்ட்போன் சாதனம் 6.88" இன்ச் அளவு கொண்ட 1640×720 பிக்சல் LCD டிஸ்பிளேவை (display) கொண்டுள்ளது. இந்த டிஸ்பிளே 120Hz ரெஃப்ரஷ் ரேட் (refresh rate) உடன் 600 நீட்ஸ் பீக் பிரைட்னஸ் (nits peak brightness) ஆதரவுடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் ரூ.10,000 விலைக்குள் வருவதினால், இதில் LCD டிஸ்பிளே இருப்பதாக கூறப்படுகிறது. இது மிகவும் துல்லியமான டிஸ்பிளே அனுபவத்தை வழங்குகிறது.

இந்த ஸ்மார்ட்போன் சாதனம் ஸ்னாப்டிராகன் 4s ஜென் 2 பிராசஸர் சிப்செட் (Snapdragon 4s Gen 2 processor chipset) உடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் சாதனம் 4GB ரேம் (RAM) உடன் 128GB ஸ்டோரேஜ் (storage) ஆதரவை கொண்டுள்ளது. இந்த சாதனம் ஆண்ட்ராய்டு 14 இயங்குதளத்துடன் ஹைப்பர் ஓஎஸ் (Android 14 based HyperOS) இயங்குதளத்தில் இயங்குகிறது.

இந்த புதிய Poco C75 ஸ்மார்ட்போன் சாதனம் 5160mAh பேட்டரி உடன் 18W சார்ஜிங் ஆதரவுடன் வருகிறது. இது 50MP மெயின் கேமரா மற்றும் 1.8MP QVGA இரண்டாம் கேமராவை கொண்ட டூயல் கேமரா அம்சத்துடன் வருகிறது. முன்பக்கத்தில், இது 5MP செல்பி கேமரா வழங்கப்பட்டுள்ளது.

2. போக்கோ M7 ப்ரோ சிறப்பம்சம் (Poco M7 Pro Specifications):
இந்த புதிய Poco M7 Pro சாதனம் 6.67" இன்ச் அளவு கொண்ட FHD+ AMOLED டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இது 120Hz ரெஃப்ரஷ் ரேட் உடன் 2100 நீட்ஸ் பீக் பிரைட்னஸ் அம்சத்தை கொண்டுள்ளது. இந்த டிஸ்பிளே 120Hz ரெஃப்ரஷ் ரேட் உடன் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்புடன் (Corning Gorilla Glass 5 protection) வருகிறது.

இந்த டிவைஸ் பட்ஜெட் செக்மென்ட் பிரிவில் மீடியாடெக் டைமென்சிட்டி 7025 அல்ட்ரா சிப்செட் (MediaTek's Dimensity 7025 Ultra chipset) உடன் 8GB ரேம் (RAM) மற்றும் 256GB ஸ்டோரேஜ் (Storage) உடன் வருகிறது. இந்த சாதனம் ஆண்ட்ராய்டு 14 இயங்குதளத்துடன் ஹைப்பர் ஓஎஸ் (Android 14 based HyperOS) இயங்குதளத்தில் இயங்குகிறது. இரண்டு போன்களும் 2 வருட ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் 4 வருட செக்யூரிட்டி அப்டேட்டை பெறுகிறது.

புதிய போக்கோ M7 ப்ரோ சாதனம் 50MP மெயின் கேமரா மற்றும் 2MP இரண்டாம் கேமராவை கொண்ட டூயல் கேமரா அம்சத்துடன் வருகிறது. முன்பக்கத்தில், இது 20MP செல்பி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இது 5110mAh பேட்டரி உடன் 45W பாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பத்தை பெறுகிறது.

போக்கோ C75 மற்றும் போக்கோ M7 ப்ரோ விலை (Poco C75 and Poco M7 Pro Price):

இதன் விலை பற்றி பேசுகையில் இந்த Poco M7 Pro இந்தியாவில் ரூ. 13,999 விலையில் வரும் டிசம்பர் 20, 2024 ஆம் தேதி மதியம் 12 மணி முதல் Flipkart வழியே விற்பனைக்கு வருகிறது. மறுபுறம், Poco C75 ஸ்மார்ட்போன் சாதனம் மலிவு விலை விருப்பமாக இந்தியாவில் ரூ. 7,999 என்ற விலையுடன் டிசம்பர் 19, 2024 ஆம் தேதி முதல் விற்பனைக்கு வருகிறது. இந்த போனின் விற்பனைக்கு இன்னும் 24 மணி நேரம் மட்டுமே மிஞ்சியுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Xiaomi Sub Brand Poco Launched Poco C75 and Poco M7 Pro Starting Price From Rs 7999 In India Sale Date
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X