Home
Mobile

புதிய சியோமி ஸ்மார்ட்போன் தீப்பிடித்தது: காரணம் என்ன?

ஸ்மார்ட்போன்கள் தீ பிடிக்கும் சம்பவங்கள் மக்களுக்கு மிகவும் அதிர்ச்சியை அதிகமாக ஏற்படுத்துகிறது, குறிப்பாக எங்கே நமது போன்களும் தீ பிடித்து வெடித்துவிடுமோ என்று பயமும் மக்களுக்கு வருகிறது. குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் இப்போதெல்லாம் ஸ்மார்ட்போன் தீப்பிடிக்கும் சம்பவம் விபத்துபோல நடக்கிறது.

சியோமி நிறுவனம்

சியோமி நிறுவனம்

சியோமி நிறுவனம் இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் சிறந்த மற்றும் தரம் கொண்ட ஸ்மார்ட்போன்களை அறிமுகம்செய்து வருகிறது. குறிப்பாக இந்நிறுவனத்தின் அனைத்து ஸ்மார்ட்போன்களுக்கு இந்தியாவில் நல்ல வரவேற்ப்பு உள்ளதுஎன்றுதான் கூறவேண்டும்.

 ரெட்மி நோட் 7 எஸ்

ரெட்மி நோட் 7 எஸ்

இந்நிலையில் சியோமி ஒரு ஸ்மார்ட்போன் சமீபத்தில் தீப்பிடித்து எரிந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது, அதன்படி மும்பையைச் சேர்ந்த ஒரு பயனர் தனது ரெட்மி நோட் 7 எஸ் உற்பத்தி குறைபாடு காரணமாக தீப்பிடித்ததாக குற்றம்
சாட்டியுள்ளார்.

 ஈஸ்வர் சாவன்

ஈஸ்வர் சாவன்

ஆனால் டைம்ஸ் ஆப் இந்தியா-கேஜெட் நவ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையின் அடிப்படையில், இந்த தீப்பிடித்ததாககூறப்படும் ஸ்மார்ட்போனின் சேதம் வாடிக்கையாளரால் தூண்டப்பட்டதாக" தெளிவுபடுத்தியுள்ளது.

மும்பையைச் சேர்ந்த ஈஸ்வர் சவான் என்பவரின் ரெட்மி நோட் 7 எஸ் சாதனம் தான் தீப்பிடித்து எரிந்துள்ளது. மேலும் ஈஸ்வர் சாவன் நடந்தது என்ன என்பதை பேஸ்புக் தளத்தில் கூறியள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி பேஸ்புக்கில் அவர் பதிவிட்டபதிவின் படி அக்டோபர் மாதம் பிளிப்கார்ட் தளத்தில் இருந்து ரெட்மி நோட் 7எஸ் ஸ்மார்ட்போன் வாங்கினேன்.

ஸ்மார்ட்போன் எரிந்துகொண்டிருந்து

பின்பு நவம்பர் 2-ம் தேதி வரை ஸ்மார்ட்போன் அருமையாக செயல்பட்டது என்றும், பின்பு அதே நாளில் அவரது ரெட்மி நோட் 7எஸ் ஒரு மேஜையின் மீது வைக்கப்பட்டிருந்தது என்றும், உடனே எரியும் வாசனையை உணர்ந்தேன் வந்து பார்த்தபோது ஸ்மார்ட்போன் எரிந்துகொண்டிருந்து என்று தெரிவித்தார் ஈஸ்வர்.

பேஸ்புக்கில் ஈஸ்வர்

குறிப்பாக ரெட்மி நோட் 7எஸ் ஸ்மார்ட்போன் மிகவும் மோசமாக எரிந்ததால் தனது சிம் கார்டை வெளியே எடுக்க முடியவில்லை என ஈஸ்வர் தெரிவித்தார். மேலும் தானேவில் உள்ள சியோமியின் அங்கீகரிக்கப்பட்ட கடையை அவர் தொடர்பு கொண்டார்பின்பு நடந்ததை கூறியுள்ளார். அதன்பிறகு ஸ்மார்ட்போனை பரிசோதித்து ஐந்து நாட்களுக்கு பிறகு பேட்டரியில் எதோ தவறு இருப்பதாக தனக்கு அந்நிறுவனம் கூறியுள்ளதாக பேஸ்புக்கில் ஈஸ்வர் எழுதியுள்ளார்.

உற்பத்தி குறைபாடு

உற்பத்தி குறைபாடு

உற்பத்தி குறைபாடு இருப்பதாகவும், அதுவே இந்த விபத்துக்கு வழிவகுந்தது என்று அவர் சமூகவலைதளத்தில் தெரிவித்துள்ளார்,
இந்த விஷயத்தில் கருத்து தெரிவிக்கும்படி சியோமி நிறுவனத்திடம் தி டைம்ஸ் ஆப் இந்தியா வலைதளம் கேட்டது, பதில்கூறிய சியோமி நிறுவனம் ஸ்மார்ட்போனிற்கு ஏற்பட்ட சேதம் வெளிப்புற சக்தியால் தான் ஏறப்பட்டது என்றும், எங்கள் தயாரிப்புகளின் தரம் மிக அதிகம் முக்கியத்துவம், கடந்த 5 ஆண்டுகளாக மி ரசிகர்கள் பிராண்டில் காட்டியுள்ள நம்பிக்கை அதற்கு ஒரு சான்றாகும். வாடிக்கையாளர் பிரச்சனைகளை தடையின்றி தீர்க்கும் நோக்கத்துடன் செயல்படுகிறோம்.

வாடிக்கையாளர்

இந்த குறிப்பிட்ட வழக்கில்,கவனமாக பரிசோதித்தபின், வெளிப்புற சக்தி காரணமாக சேதம் ஏற்பட்டது என்று முடிவு செய்யப்பட்டது, இதனால், 'வாடிக்கையாளர் தூண்டப்பட்ட சேதம்' என்பதன் கீழ் வகைப்படுத்தப்பட்டது என சியோமி நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Xiaomi smartphone catches fire, company claims ‘customer induced damage : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X