சியோமி வேறலெவல்: மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனின் அதிகாரப்பூர்வ வீடியோ வெளியீடு.!
வீடியோவில் தெரிவிக்கப்பட்டது என்னவென்றால், இந்த ஸ்மார்ட்போன் மடிக்கப்பட்ட நிலையிலும் பின்புற ஸ்கிரீன் ஆஃப் ஆகாமல் இருக்கிறது.
சியோமி நிறுவனம் தொடர்ந்து அதிநவீன தொழில்நுட்பம் கொண்ட ஸ்மார்ட்போன்களை வெளியிடுவதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறது, மேலும் இந்நிறுவனம் பல்வேறு புதிய முயற்சிகளை செயல்படுத்திக் கொண்டு தான இருக்கிறது என்று கூறவேண்டும்.
அதன்படி சியோமி நிறுவனம் தனது மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனின் டீசர் வீடியோவை அதிகராப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. இந்த வீடியோவினை சியோமி நிறுவனத்தின் இணை நிறுவனரும், தலைவருமான லின் பின் என்பர் தனது பேஸ்புக்கில் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

வீடியோ
வீடியோவில் இருக்கும் ஸ்மார்ட்போன் ஏற்கனவே வெளியாக விவரங்களுடன் ஒற்றுப் போகும் படி காட்சியளிக்கிறது, இது ஸ்மார்ட்போனின் ஸ்கிரீன் இருபுறங்களிலும் மடிக்கக்கூடியதாக வடிவமைக்கப்பட்டுள்ளது என்று தான் கூறவேண்டும்.

டேப்லெட்
இந்த புது வகை சியோமி ஸ்மார்ட்போனை இருபுறங்களிலும் மிக எளிமையாக மடிக்கக்கூடியதாக இருக்கிறது, பின்பு
இயக்கத்திற்கும் மிக அருமையாக இருக்கும் இந்த அட்டகசமான சியோமி ஸ்மார்ட்போன். குறிப்பாக டேப்லெட் போன்றும் இந்த சாதனத்தை பயன்படுத்த முடியும்.

ஸ்கிரீன் ஆஃப்
வீடியோவில் தெரிவிக்கப்பட்டது என்னவென்றால், இந்த ஸ்மார்ட்போன் மடிக்கப்பட்ட நிலையிலும் பின்புற ஸ்கிரீன் ஆஃப் ஆகாமல் இருக்கிறது. எனினும் இந்த ஸ்மார்ட்போன் தற்சமயம் ப்ரோடோடைப் வடிவில் இருப்பதாக சியோமி நிறுவனம் தெரிவித்துள்ளது.

பெயர்
மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினை வாடிக்கையாளர்கள் விரும்பும் பட்சத்தில் இதனை அதிகளவு உற்பத்தி செய்யும் பணி எதிர்காலத்தில் துவங்கும் என்றும் பின்பு ஸ்மார்ட்போனின் பெயரையும் வாடிக்கையாளர்களிடம் கேட்க
இருப்பதாக தெரிவித்துள்ளது சியோமி நிறுவனம்.

பிப்ரவரி 23
வரும் பிப்ரவரி 23-ம் தேதி நடைபெறும் சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவிற்கு சியோமி நிறுவனம் 20 வாடிக்கையாளரை அழைத்து செல்ல இருக்கிறது. இந்த சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் அறிமுகம்
செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








