டிசம்பர் 7 முதல் "மிகவும் எதிர்பார்க்கப்பட்ட" சியோமி ரெட்மீ 5 மற்றும் 5 ப்ளஸ்.!

Written By:

சியோமி நிறுவனத்திடம் இருந்து மிகவும் எதிர்பார்க்கப்படும் ஸ்மார்ட்போன்களான ரெட்மீ 5 மற்றும் ரெட்மீ ப்ளஸ் ஆகிய கருவிகள் இன்னும் சில தினங்களில் அதிகாரப்பூர்வ வெளியீட்டை நிகழ்த்தவுள்ளன. வருகிற வியாழன் அன்று (டிசம்பர் 7-ஆம் தேதி) சீனாவில் தொடங்கவுள்ள இக்கருவிகள் இந்திய சந்தையை ஆட்டிப்படைக்குமென்பதில் எந்த சந்தேகமும் வேண்டாம்.

டிசம்பர் 7-ஆம் தேதியன்று நடக்கவுள்ள அறிமுகத்திற்கு முன்னதாக சியோமி நிறுவனமானது, உலகளாவிய செய்தித் தொடர்பாளர்களிடம் வெளியாகப்போகும் ஸ்மார்ட்போன்களின் படங்களை பகிர்ந்து கொண்டது, அது நமக்கொரு முன்னோட்டத்தை கொடுத்துள்ளது.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
18: 9 என்கிற விகிதத்திலான டிஸ்ப்ளே

18: 9 என்கிற விகிதத்திலான டிஸ்ப்ளே

வெளியான படங்கள் ரெட்மீ 5 மற்றும் ரெட்மீ 5 பிளஸ் வடிவமைப்பை வெளிப்படுத்துகின்றன, மேலும் அவைகள் 18: 9 என்கிற விகிதத்திலான டிஸ்ப்ளேக்கள், வன்பொருள் கொள்ளளவு பொத்தான்கள் மற்றும் பின்புற கைரேகை சென்சார் ஆகியவற்றை பிரதானப்படுத்துகின்றன. கடந்த வாரம் சான்றிதழ் தளத்தில் காணப்பட்ட ரெட்மீ 5 பட்டியல் சரி என்றால், நாம் இந்த ஸ்மார்ட்போன்கள் குறித்த ஒரு சில நியாயமான யோசனை பெறலாம்.

புகைப்படங்கள் பகிரப்பட்டுள்ளன

புகைப்படங்கள் பகிரப்பட்டுள்ளன

தனது ட்விட்டர் இடுகையில், "அனைவருக்கும் புதிய ரெட்மீ 5 மற்றும் ரெட்மீ 5 பிளஸ் தயாராக உள்ளது? டிசம்பர் 7-ஆம் தேதி சீனாவில் இந்த இரண்டு புதிய சாதனங்களை நாங்கள் அறிமுகப்படுத்துகிறோம்" என்ற தகவலுடன் புகைப்படங்கள் பகிரப்பட்டுள்ளன. அந்த படங்கள் அனைத்து கோணங்களிலிருந்தும் ஸ்மார்ட்போன்களைக் காட்டுகின்றன.

பின்புற கைரேகை சென்சார்

பின்புற கைரேகை சென்சார்

அதன் வழக்கமான 18: 9 காட்சியைக் காட்டிலும் சற்று உயரமான டிஸ்பிளே, வழிசெலுத்தலுக்கான வன்பொருள் கொள்ளளவு பொத்தான்கள் இல்லை, பின்பக்கம் ஃபிளாஷ் தொகுதிக்கு கீழே உள்ள பின்புற கைரேகை சென்சார் இருப்பதை காணலாம். வடிவமைபில் பெரிய அளவிலான வேறுபாடு எதுவுமில்லை. ஆக, அம்சங்களில் வேறுபாடுகள் எதிர்பார்க்கப்படுகிறது.

பெஸல்லெஸ் வடிவமைப்பு

பெஸல்லெஸ் வடிவமைப்பு

கடந்த வாரம் வெளியான தகவல்களின்படி, சியோமி ரெட்மீ 5 ஆனது சீன தொலைத்தொடர்பு தொலைத் தொடர்பு சான்றிதழ் தலமான டிஇஎன்ஏஏ-வில் காணப்பட்டது. அதன்படி, இக்கருவி ஒரு 5.7 அங்குல எச்டி+ (720x1440 பிக்சல்கள்) 18: 9 டிஸ்பிளே, பெஸல்லெஸ் வடிவமைப்பு ஆகியவைகளை கொண்டிருக்கலாம்.

ஸ்னாப்டிராகன் 435 எஸ்ஓசி

ஸ்னாப்டிராகன் 435 எஸ்ஓசி

உடன் சியோமி ரெட்மீ 5 ஆனது ஒரு 1.8ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் எஸ்ஓசி உடனாக ஸ்னாப்டிராகன் 450 அல்லது ஸ்னாப்டிராகன் 625 கொண்டு இயக்கப்படலாம். ரெட்மீ 4 ஆனது ஒரு ஸ்னாப்டிராகன் 435 எஸ்ஓசி கொண்டுள்ளதென்பது குறிப்பிடத்தக்கது. ஆக, இக்கருவிகளிலும் அதே ஸ்னாப்டிராகன் 400 வரிசை தொடர அதிக வாய்ப்புள்ளது.

2ஜிபி, 3ஜிபி மற்றும் 4ஜிபி

2ஜிபி, 3ஜிபி மற்றும் 4ஜிபி

மேலும் ரெட்மீ 5 ஸ்மார்ட்போனை பொறுத்தமட்டில், 2ஜிபி, 3ஜிபி மற்றும் 4ஜிபி என மொத்தம் மூன்று மாறுபாடுகளில் வெளியாகும் என்றும் தரசான்றிதழ் பட்டியல் குறிப்பிட்டுள்ளது. உள்ளடக்க சேமிப்பை பொறுத்தமட்டில் இக்கருவி - 16 ஜிபி, 32 ஜிபி, மற்றும் 64 ஜிபி கொண்டிருக்கலாம். உடன் மைக்ரோ எஸ்டி அட்டை வழியாக 128ஜிபி வரை விரிவாக்கக்கூடியதாகவும் இருக்கலாம்.

3200எம்ஏஎச் பேட்டரி

3200எம்ஏஎச் பேட்டரி

இந்த ஸ்மார்ட்போன் ஒரு 3200எம்ஏஎச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படலாமென பட்டியலிடப்பட்டுள்ளது. இந்த இடத்தில ரெட்மீ 4 ஆனது ஒரு 4100எம்ஏஎச் பேட்டரி கொண்டுள்ளதென்பது குறிப்பிடத்தக்கது. கேமராத்துறையை பொறுத்தமட்டில், இக்கருவி ஒரு 12 மெகாபிக்சல் பின்புற கேமரா மற்றும் ஒரு 5 மெகாபிக்சல் முன்பக்க கேமரா கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.

இயக்கமுறைமை

இயக்கமுறைமை

அளவீட்டில், 151.8x72.8x7.7 மிமீ மற்றும் 157 கிராம் எடை கொண்டுள்ளதென்றும், ஆண்ட்ராய்டு 7.1.2 அடிப்படையிலான மியூஐ9 இயக்கமுறைமையின்கீழ் இயங்கலாமென்றும் பட்டியலிடப்பட்டுள்ளது.இக்கருவி அதன் பின்புற பழக்கத்தில் கைரேகை ஸ்கேனர்ற ஒன்றையும் கொண்டுள்ளது.

ஸ்னாப்டிராகன் 630

ஸ்னாப்டிராகன் 630

ஸ்னாப்டிராகன் 625 அல்லது ஸ்னாப்டிராகன் 630 முந்தைய கசிவை அடிப்படையாகக் கொடு பார்த்தால், ரெட்மீ 5 ப்ளஸ் ஆனது ஸ்னாப்டிராகன் 625 அல்லது ஸ்னாப்டிராகன் 630 எஸ்ஓசி கொண்டு, வேறுபட்ட ரேம் மற்றும் சேமிப்பு வகைகளில் வெளியாகலாம். மற்றும் ஒரு பெரிய 4000எம்ஏஎச் பேட்டரி கொண்டு சக்தியூட்டப்படலாமென எதிர்பார்க்கப்படுகிறது.

விலைப்புள்ளி

விலைப்புள்ளி

சியோமி ரெட்மீ 5 மற்றும் ரெட்மீ 5 ப்ளஸ் ஸ்மார்ட்போன்களின் அதிகாரபூர்வமான அம்சங்களை அறிய நாம் டிசம்பர் 7-ஆம் தேதி நடக்கும் வெளியீடு நிகழ்வு வரை காத்திருக்க வேண்டும். விலை நிர்ணயத்தை பொறுத்தமட்டில், ஸ்லாஷ்லீக்ஸ் தகவலின்படி - ரெட்மீ 5 ஆனது சுமார் ரூ.13,600/- என்கிற விலைப்புள்ளியை எட்டலாம். மேலும் அதன் முதல் விற்பனையானது டிசம்பர் 10-ஆம் தேதி தொடங்கலாம்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
English summary
Xiaomi shows off bezel-less Redmi 5, Redmi 5 Plus ahead of December 7 launch. Read more about this in Tamil GizBot
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot