சத்தமில்லாமல் சாதனை படைத்த ரெட்மி நோட் 10 சீரிஸ்.!
இந்தியாவில் ரெட்மி நோட் 10 சீரிஸ் சாதனங்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது என்றுதான் கூறவேண்டும். குறிப்பாக ரெட்மி நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்கள் பட்ஜெட் விலையில் அதிநவீன அம்சங்களுடன் வெளிவரும் என்பதால் உலகம் முழுவதும் நல்ல வரவேற்பு உள்ளதாக
கூறப்படுகிறது.

மேலும் சியோமி நிறுவனம் அண்மையில் மி 11எக்ஸ் சீரிஸ் மாடலை ஏப்ரல் மாத வாக்கில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது, பின்பு அறிமுகமான 45 நாட்களுக்குள் இந்த மாடல் ரூ.300 கோடி மதிப்பிலான யூனிட்கள் விற்பனையாகி இருப்பதாக சியோமி தெரிவித்தது.

இந்நிலையில் 3000 கோடி மதிப்பிலான ரெட்மி நோட் 10 சீரிஸ் சாதனங்கள் முன்பதிவு செய்தவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. அதாவது இந்த ஸ்மார்ட்போன்கள் அதிக லாபத்தை பெற்று தந்துள்ளதாக அந்நிறுவனம் சார்பில் கூறப்பட்டுள்ளது. குறிப்பாக ரெட்மி நோட் 10, ரெட்மி நோட் 10 ப்ரோ, ரெட்மி நோட் 10எஸ், ரெட்மி நோட் 10 ப்ரோ மேக்ஸ் சாதனங்கள் சிறந்த தொழில்நுட்ப வசதியுடன் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அண்மையில் இந்நிறுவனம் சீனாவில் அறிமுகம் செய்த ரெட்மி நோட் 10 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனின் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.
ரெட்மி நோட் 10 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 6.6-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. மேலும் 2,400x1,080 பிக்சல் தீர்மானம், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 450 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட், கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது இந்த புத்தம் புதிய ஸ்மார்ட்போன்.

குறிப்பாக ரெட்மி நோட் 10 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனில் 6ஜிபி/8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/256ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவைக் கொண்டுள்ளது இந்த சாதனம். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்துவதற்கு ஒரு ஸ்லாட் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய ரெட்மி நோட் 10 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனில் மீடியாடெக் Dimensity 1100 SoC சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது. பின்பு MIUI 12.5 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவரும் இந்த புதிய ஸ்மார்ட்போன். எனவே இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும் ரெட்மி நோட் 10 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன்.

இந்த புதிய ஸ்மார்ட்போனின் பின்புறம் 64எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி வைடு லென்ஸ் + 2எம்பி மேக்ரோ கேமரா என மொத்தம் மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி செல்பீ கேமரா இவற்றுள் அடக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

ரெட்மி நோட் 10 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. மேலும் 67 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி, கைரேகை சென்சார் உட்பட பல்வேறு அசத்தலான அம்சங்களை கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன்.


Click it and Unblock the Notifications








