Home
Mobile

சீனாக்காரன் மூளைக்காரன் தான் யா.. 2026-ஐ கலக்க போகும் 2 Xiaomi போன்கள்.. எப்போது அறிமுகம்?

2026 ஆம் ஆண்டில் ஷாவ்மீ (Xiaomi) நிறுவனம் ஆனது 2 முக்கியமான ஸ்மார்ட்போன்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய உள்ளது. இவ்விரு ஸ்மார்ட்போன்களுமே ஏற்கனவே சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டு விட்டதால், இப்போதைக்கு விலை மற்றும் அம்சங்கள் அடிப்படையில் எந்த குழப்பமும் இல்லை. "எப்போது இந்திய அறிமுகம்?" என்பது மட்டுமே ஒரு கேள்வியாக இருந்தது.

தற்போது அந்த கேள்விக்கு பதில் கிடைத்துள்ளது போல் தெரிகிறது. நாம் இங்கே பேசுவது ஷாவ்மீ 17 சீரீஸ் ஸ்மார்ட்போன்களை பற்றித்தான். இதன்கீழ் ஷாவ்மீ 17 மற்றும் ஷாவ்மீ 17 அல்ட்ரா ஆகிய 2 மாடல்கள் உள்ளன. நம்பகமான டிப்ஸ்டர்களில் ஒருவரான அபிஷேக் ஷர்மா (Abhishek Yadav - @yabhishekhd) வழியாக கிடைத்துள்ள சமீபத்திய தகவல் ஆனது இவ்விரு மாடல்களும் மார்ச் 2026 இல் இந்தியாவில் அறிமுக செய்யப்படலாம் என்கிறது.

2026-ஐ கலக்க போகும் 2 Xiaomi போன்கள்.. எப்போது அறிமுகம்?

முன்னதாக இதே டிப்ஸ்டர், இவ்விரு போன்களும் ஜனவரி அல்லது பிப்ரவரியில் இந்தியாவிற்கு வரும் என்று கூறியிருந்தார். இப்போது லான்ச் டைம்லைனில் சில மாற்றங்கள் இருக்கலாம் என்று பரிந்துரைக்கிறார். ஆக 2026 தொடங்கியதும் அனைத்து நிறுவனங்களும் போட்டிபோட்டு கொண்டு புதிய மாடல்களை அறிமுகம் செய்யும், அதில் சிக்கிக்கொள்ள கூடாது என்று ஷாவ்மீ முடிவு செய்துள்ளது போல் தெரிகிறது - சீனாக்காரன் மூளைக்காரன் தான் யா!

மிகவும் சமீபத்தில் அறிமுகமான ஷாவ்மீ 17 அல்ட்ரா ஸ்மார்ட்போனின் அம்சங்கள்:
- Android 16 ஓஎஸ் அடிப்படையிலான HyperOS 3 ஓஎஸ்
- 120Hz ரெஃப்ரெஷ் ரேட்
- 1060 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ்
- டிராகன் கிரிஸ்டல் கிளாஸ் 3 ப்ரொடெக்ஷன்
- 6.9-இன்ச் 1.5K LTPO AMOLED டிஸ்பிளே
- குவால்காம் ஆக்டா கோர் 3nm ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 சிப்செட்
- அட்ரெனோ 840 GPU
- 16GB வரை LPDDR5x அல்ட்ரா ரேம்
- 1TB UFS 4.1 ஆன்போர்டு ஸ்டோரேஜ்

- Leica-வால் டியூன் செய்யப்பட்ட ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்
- 1-இன்ச் சென்சார் மற்றும் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) கொண்ட 50-மெகாபிக்சல் LOFIC Omnivision 1050L ப்ரைமரி கேமரா
- 50-மெகாபிக்சல் Samsung JN5 அல்ட்ராவைடு கேமரா
- 3.2x முதல் 4.3x வரை தொடர்ச்சியான ஆப்டிகல் ஜூம் ஆதரவுடன் 200-மெகாபிக்சல் பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ கேமரா
- 8K ரெசல்யூஷன் கொண்ட வீடியோக்களை பதிவு செய்யும் திறன்
- 50-மெகாபிக்சல் OV50M செல்பீ கேமரா

- 90W வயர்டு மற்றும் 50W வயர்லெஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு
- 6,800mAh பேட்டரி
- 5G, 4G LTE, USB டைப்-சி போர்ட், NFC, Wi-Fi 7 மற்றும் ப்ளூடூத் 5.4
- தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான IP66 + IP68 + IP69 ரேட்டிங்
- 3D அல்ட்ராசோனிக் பிங்கர் பிரிண்ட் சென்சார்
- அளவீட்டில் 8.29 மிமீ
- எடையில் சுமார் 224 கிராம்

ஷாவ்மீ 17 அல்ட்ரா ஸ்மார்ட்போனின் விலை: 12 ஜிபி ரேம் + 512 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் கொண்ட ஷாவ்மீ 17 அல்ட்ரா ஸ்மார்ட்போனின் பேஸிக் ஆப்ஷன் ஆனது இந்திய ரூபாய் மதினின்படி தோராயமாக ரூ.90,000 க்கு அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.

இதே ஸ்மார்ட்போனின் 16 ஜிபி ரேம் + 512 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் இந்திய ரூபாய் மதிப்பின்படி தோராயமாக ரூ.96,000 க்கும், கடைசியாக உள்ள ஹை எண்ட் 16 ஜிபி ரேம் + 1 டிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் இந்திய ரூபாய் மதிப்பின்படி தோராயமாக ரூ.1,09,000 க்கும் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது

கடந்த செப்டம்பர் 2025 இல் அறிமுகமான ஷாவ்மீ 17 ஸ்மார்ட்போனின் விலை விவரங்கள்: சீனாவில் இது,இந்திய ரூபாய் மதிப்பின்படி தோராயமாக ரூ.56,000 என்கிற ஆரம்ப விலையில் அறிமுகப்படுத்தப்பட்டது, இதன் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷனின் விலை ஆகும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Xiaomi Seems Planning to Wait Xiaomi 17 Ultra Xiaomi 17 Reportedly to Launch in India in March 2026
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X