சந்தையில் கலக்க வரும் புதிய சியோமி ஸ்மார்ட் போன்கள்.!
குறைந்த விலையில் செல்போன்களை அதிக வசதியுடன் விற்பனை செய்வதால், இந்த நிறுவனத்தின் போன்களை அதிகளவில் பொது மக்கள் வாங்கி வருகின்றனர். சந்தையில் நிலவும் கடும் போட்டியை சமாளிக்க பல்வேறு நிறுவனங்களும் போட்ட
சியோமி நிறுவனத்தின் போன்கள் இந்திய சந்தையில் விற்பனையில் முதலிடத்தில் உள்ளது. இந்த நிறுவனத்தின் போன்களுக்கு இளைஞர்கள் மத்தயிலும், நடுத்தர குடும்பத்தினர் மத்தியிலும் பெரும் வரவேற்பு இருக்கின்றது.

குறைந்த விலையில் செல்போன்களை அதிக வசதியுடன் விற்பனை செய்வதால், இந்த நிறுவனத்தின் போன்களை அதிகளவில் பொது மக்கள் வாங்கி வருகின்றனர். சந்தையில் நிலவும் கடும் போட்டியை சமாளிக்க பல்வேறு நிறுவனங்களும் போட்டி போட்டுக் கொண்டு புதிய போன்களை அறிமுகப்படுத்தி வருகின்றன.
இந்நிலையில் சியோமி நிறுவனம் அடுத்தடுத்து மாடல்போன்களை சந்தையில் விற்பனை செய்வதிலும் அதிக ஆர்வம் காட்டி வருகின்றது.

சீனாவில் அறிமுகம்:
சியோமி நிறுவமன் எம்ஐ8, எம்ஐ8 எக்ஸப்ளோர் மற்றும் எம்ஐ8 எஸ்இ எடிஷன் ஸ்மார்ட்போன் மாடல்களை சீனாவில் மே மாத்தில் அறிமுகம் செய்தது.

டீசர் வெளியீடு :
இந்நிலையில், சீனாவில் செங்டுவில் புதிய ஸ்மார்ட்போன் வெளிடுதற்கான அழைப்புகளை சியோமி வெளியிட்டுள்ளது. புதிய ஸ்மார்ட்போன் செப்டம் 19ம் தேதி அறிமுகம் இருக்கின்றது. டீசரில் வெளியாகி இருக்கும் தகவல்களின் படி புதிய ஸ்மார்ட்போன் எம்ஐ8 யூத் எடிஷனாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

லீக்கான ஸ்மார்ட்போன்:
அழைப்பிதழில் செங்குத்தாக வைக்கப்பட்ட டூயல் பிரைமரி கேமரா கொண்ட ஸ்மார்ட்போனில் புகைப்படம் இடம்பெற்றிருக்கிறது. சில தினங்களுக்கு முன் எம்ஐ808டி2டிஇ மாடல் நம்பர் கொண்ட சியோமி சீனாவில் உள்ள ஒரு வலைதளத்தல் வெளியாகி இருந்தது.

சியோமி எம்ஐ8 யூத்தின் சிறப்பு:
திரை 6.25 இன் புல் ஹெச்டி 19:9 2.5 வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே ஆக்டோகோர் ஸ்னாப்டிராகன் 710, 10எம்எம் சிப்செட் அட்ரினோ 616 ஜிபியு, 4ஜி, 6ஜி, 8ஜி, ரேம்களில் முறையே 32 ஜிபியும், 64 ஜிபியும், 128 ஜிபியும் கிடைக்கின்றது.
ஆன்டராய்டு 8.1 ஓரியோவுடன் எம்ஐயுஐ ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட், கைரேகை சென்சார், உள்ளிட்ட பல்வேறு வசதிகள் இருக்கின்றன. இதில், 3250 எம்ஏஹெச் பேட்டரி, பாஸ்ட் சார்ஜிங் அம்சத்தையும் கொண்டுள்ளது.

கலர்கள்:
சியோமி எம்ஐ8 யூத் எடிஷன், ஸ்மார்ட்போன் பிளாக், ரோஸ் கோல், கேல்டு வைட், புளு, ரெட், கிரே, சில்வர், கிரீன், புளு-வைலட் கிரேடியன்ட், பர்ப்பிள்-கோல்டு கிரேடியன்ட் போன்ற நிறங்களில் அறிமுகம் வெளியாகும் என்று கூறப்படுகின்றது.


Click it and Unblock the Notifications