Home
Mobile

ஜூன் 7: ஸ்னாப்டிராகன் 625 சிப்செட் வசதியுடன் களமிறங்கும் ரெட்மீ எஸ்2.!

இந்த ஸ்மார்ட்போனில் 12எம்பி + 5எம்பி டூயல் ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் 4கே வீடியோ பதிவு செய்ய முடியும். இதனுடைய செல்பீ கேமரா 16மெகாபிக்சல் எனக் கூறப்படுகிறது.

By Prakash S

சியோமி நிறுவனம் தொடர்ந்து இந்தியாவில் புதிய ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்தவண்ணம் உள்ளது, அதன்படி வரும் ஜூன் 7-ம் தேதி புதிய ரெட்மீ எஸ்2 ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது, அதன்படி இந்த ஸ்மார்ட்போன் மாடல் சிறந்த தொழில்நுட்ப வசதியுடன் வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜூன் 7: ஸ்னாப்டிராகன் 625 சிப்செட் வசதியுடன் களமிறங்கும் ரெட்மீ எஸ்2.!

குறிப்பாக ரெட்மீ எஸ்2 ஸ்மார்ட்போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது, அதன்பின்பு செயற்கை நுண்ணறிவு சார்ந்த தொழில்நுட்ப வசதி இவற்றுள் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்திய சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

ரெட்மீ எஸ்2 ஸ்மார்ட்போன் பொதுவாக 5.99-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின் 1440 x 720பிக்சல் தீர்மானம்
கொண்டவையாக உள்ளது, மேலும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்புடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்.

ரெட்மீ எஸ்2 ஸ்மார்ட்போனில் 2ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 625 செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். மேலும் இயக்கத்திற்க்கு மிக அருமையாக இருக்கும் இந்த ரெட்மீ எஸ்2 ஸ்மார்ட்போன்.

இந்த ஸ்மார்ட்போன் 3ஜிபி/4ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி/64ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது. மேலும் ஆப் வசதிகளுக்கு தகுந்தபடி இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும்.

இந்த ஸ்மார்ட்போனில் 12எம்பி + 5எம்பி டூயல் ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் 4கே வீடியோ பதிவு செய்ய முடியும்.இதனுடைய செல்பீ கேமரா 16மெகாபிக்சல் எனக் கூறப்படுகிறது. மேலும் டூயல் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

ஜூன் 7: ஸ்னாப்டிராகன் 625 சிப்செட் வசதியுடன் களமிறங்கும் ரெட்மீ எஸ்2.!

வைபை 802.11, ப்ளூடூத் 4.2, 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி , என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.

ரெட்மீ எஸ்2 ஸ்மார்ட்போனில் 3080எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் பல்வேறு தகவல்கள் ஆன்லைனில் வெளிவந்த வண்ணம் உள்ளது.

Best Mobiles in India

English summary
Xiaomi schedules an event on June 7 in India, Redmi S2 expected ; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X