ஏப்ரல் 25: 5.99-இன்ச் டிஸ்பிளேவுடன் வெளிவரும் சியோமி மி 6எக்ஸ்.!
சியோமி மி 6எக்ஸ் ஸ்மார்ட்போனில் 2910எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் வீடியோ கேம் மற்றும் ஆப் வசதகளுக்கு மிக அருமையாக இருக்கும் இந்த ஸ்மார்ட்போன் மாடல்.
சியோமி ஸ்மார்ட்போன் நிறுவனம் இந்த பல்வேறு ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது, அதன்படி Mi A2 எனப்படும் சியோமி மி 6எக்ஸ் ஸ்மார்ட்போன் மாடலை வரும் ஏப்ரல் 25-ம் தேதி அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது அந்நிறுவனம். மேலும் இந்த ஸ்மார்ட்போன் மாடல் பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டு வெளிவரும் என அந்நிறுவனம் சார்பாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சியோமி மி 6எக்ஸ் சாதனம் செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்களை கொண்டுள்ளது, தற்சமயம் சிவப்பு நிற பதிப்பு கொண்ட மி 6எக்ஸ் சாதனத்தின் புகைப்படம் ஆன்லைனில் வெளியிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இக்கருவி 5.99-இன்ச் முழு எச்டி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 2160×1080 பிக்சல் தீர்மானம் மற்றும் 18:9 என்ற திரைவிகிதம் அடிப்படையில் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக சியோமி மி 6எக்ஸ் ஸ்மார்ட்போன் மாடல் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி ஆதவைக் கொண்டு வெளிவரும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றுள் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சியோமி மி 6எக்ஸ் ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 630 செயலி இடம்பெற்றுள்ளதுஇ அதன்பின் ஆண்டராய்டு ஓரியோ 8.0 இயங்குதளத்தை
கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். மேலும் இயக்கத்திற்க்கு மிக அருமையாக இருக்கும் இந்த நோக்கியா 7 ஸ்மார்ட்போன்.
இந்த ஸ்மார்ட்போனில் 20எம்பி+ 8எம்பி டூயல் ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் 4கே வீடியோ பதிவு செய்ய முடியும்.இதனுடைய செல்பீ கேமரா 20மெகாபிக்சல் எனக் கூறப்படுகிறது. மேலும் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.
வைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, டூயல்-சிம், கைரேகை சென்சார் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.


சியோமி மி 6எக்ஸ் ஸ்மார்ட்போனில் 2910எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் வீடியோ கேம் மற்றும் ஆப் வசதகளுக்கு மிக அருமையாக இருக்கும் இந்த ஸ்மார்ட்போன் மாடல்.
சியோமி மி 6எக்ஸ் ஸ்மார்ட்போனின் விலை பொறுத்தவரை சற்று உயர்வாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது, அதன்பின்பு இந்திய மொபைல் சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்


Click it and Unblock the Notifications