Home
Mobile

ஆப்பிள் நிறுவனத்தின் தூக்கத்தை கெடுக்கும் சியோமி பிளாக் ஷார்க்.!

பிளாக் ஷார்க் ஆனது கீக்பெஞ்ச் பட்டியலில் 'பிளாக்ஷார்க் எஸ்ஆர்ஆர்-ஏ0' என்கிற குறியீட்டு பெயரின்கீழ் காணப்பட்டுள்ளது.

By Muthuraj

மிகவும் எதிர்பார்க்கப்படும் சியோமி நிறுவனத்தின் மி மிக்ஸ் 2எஸ் ஆனது வரும் மார்ச் 27-ல் வெளியாகும் நிலைப்பாட்டில், சீன ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரான சியோமி இன்னும் மேலும் இரண்டு - ஸ்னாப்டிராகன் 845 கொண்டு இயங்கும் - சக்திவாய்ந்த ஸ்மார்ட்போன்களை வெளியிடும் என்பது போல் தெரிகிறது.

ஆப்பிள் நிறுவனத்தின் தூக்கத்தை கெடுக்கும் சியோமி பிளாக் ஷார்க்.!

அதில் ஒன்று மி 7 ஆகும், அதில் சந்தேகமே வேண்டாம். மற்றொன்று சியோமி நிறுவனத்தின் புதிய 'பிளாக்கில்ஷார்க்' ஆகும். இதுவொரு கேமிங் ஸ்மார்ட்போன் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதை சமீபத்திய அன்டுடு பட்டியல் உறுதிப்படுத்தியது மட்டுமின்றி, நம்பமுடியாத தரப்படுத்துதல் மதிப்பெண்களையும், அம்சங்களையும் வெளிப்படுத்தியுள்ளது.

'பிளாக்ஷார்க் எஸ்ஆர்ஆர்-ஏ0' என்கிற குறியீட்டு பெயரின்கீழ்.!

'பிளாக்ஷார்க் எஸ்ஆர்ஆர்-ஏ0' என்கிற குறியீட்டு பெயரின்கீழ்.!

அதனை தொடர்ந்து இப்பொழுது, கூறப்படும் பிளாக்ஷார்கே ஆனது கீக்பெஞ்ச் பட்டியலில் 'பிளாக்ஷார்க் எஸ்ஆர்ஆர்-ஏ0' என்கிற குறியீட்டு பெயரின்கீழ் காணப்பட்டுள்ளது. பெஞ்ச்மார்க் அறிக்கையின்படி, இக்கருவியானது அன்டுடு தரவுத்தளத்தில் காணப்பட்ட அம்சங்களுடன் ஒற்றுப்போகிறது.

ஸ்னாப்ட்ராகன் 845 சிப்செட் மற்றும் 8ஜிபி ரேம்.!

ஸ்னாப்ட்ராகன் 845 சிப்செட் மற்றும் 8ஜிபி ரேம்.!

அதாவது, மிக் மிக்ஸ் 2எஸ் மற்றும் மி 7 ஆகியவற்றில் இடம்பெறுவதை போன்றே, க்வால்காம் ஸ்னாப்ட்ராகன் 845 சிப்செட் மற்றும் 8ஜிபி ரேம் கொண்டுள்ளது. பெஞ்ச்மார்க் தரப்படுத்துதல் தளத்திலும், சியோமி பிளாக்ஷார்க் ஸ்மார்ட்போன் ஆனது சிறப்பான மதிப்பெண்களை பெற்றுள்ளது. அதாவது சிங்கிள் கோர் டெஸ்டில் 2452 புள்ளிகளையும், மல்டி-கோர் டெஸ்டில் 8452 புள்ளிகளையும் பெற்றுள்ளது.

சிறப்பான பகுதி என்னவென்றால்.?

சிறப்பான பகுதி என்னவென்றால்.?

சீன தொலைபேசிகள் மற்றும் சாதனங்களுக்கான மென்பொருளை தரப்படுத்தமொறு கருவியான அன்டுடு பட்டியலின்படி, மொபைல் கேமிங்கில் மட்டுமே கவனம் செலுத்துகிறது என்பது அறியப்பட்டுள்ளது. எல்லாவற்றை விடவும் சிறப்பான பகுதி என்னவென்றால் இந்த பிளாக் ஷார்க் ஆனது அன்டுடு தரப்படுத்தல் பட்டியலில் மொத்தம் 2,70,680 மதிப்பெண்களை பெற்றுள்ளது.

எந்த ஸ்மார்ட்போனும் பெற்றதில்லை.!

எந்த ஸ்மார்ட்போனும் பெற்றதில்லை.!

இந்த அளவிலானவொரு மதிப்பெண்ணை இதுவரை எந்த ஸ்மார்ட்போனும் பெற்றதில்லை. இது தான் இருப்பதிலேயே மிக உயர்ந்த மதிப்பீடாகும். அம்சஙகளை பொறுத்தமட்டில் இக்கருவி, க்வால்காம் ஸ்னாப்டிராகன் 845 எஸ்ஓசி உடன் 8 ஜிபி ரேம் கொண்டி இயங்கும்.

காட்சி விகிதம்

காட்சி விகிதம்

ஆனால் உள்ளடக்க சேமிப்புத்திறன் ஆனது சராசரியான அளவில் அதாவது 32 ஜிபி உள்ளது. ஒரு அட்ரெனோ 630 ஜிபியூ சிப்செட் கொண்டுள்ள பிளாக் ஷார்க் ஆனது ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ கொண்டு இயங்கும். டிஸ்பிளேவை பொறுத்தமட்டில், 2160 x 1080 பிக்சல் தீர்மானம் கொண்ட 18: 9 என்கிற அளவிலான காட்சி விகிதம் கொண்டுள்ளது.

How to Find a domain easily for your business (TAMIL)
பிளாக்ஷிப் ஸ்மார்ட்போனாக மட்டுமின்றி

பிளாக்ஷிப் ஸ்மார்ட்போனாக மட்டுமின்றி

இந்த கசிவு உண்மையாக வாய்ப்பு இருந்தால், சியோமி நிறுவனத்திடம் இருந்து மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மி 7 ஆனது, ஒரு பிளாக்ஷிப் ஸ்மார்ட்போனாக மட்டுமின்றி ஒரு புதிய கேமிங் ஸ்மார்ட்போனாகவும் பார்க்க முடியும். விபோ தளத்தின்படி இந்த ஸ்மார்ட்போன் ஆனது பிரபல ரேஸர் நிறுவனத்தின் கருவிக்கு பதிலடி கொடுக்கும் ஒரு செயாலாகுமென்று குறிப்பிடுகிறது. ஆக மொத்தம் சிறந்த செயல்திறன் கொண்ட ஒரு சியோமி ஸ்மார்ட்போன் சந்தையை தாக்கவுள்ளது.

சியோமி மி 7 அல்லது மி மிக்ஸ் 2எஸ்

சியோமி மி 7 அல்லது மி மிக்ஸ் 2எஸ்

பிளாக்ஷார்க் எனக்கூறப்படும் இக்கருவியானது சியோமி மி 7 அல்லது மி மிக்ஸ் 2எஸ் ஸ்மார்ட்போனாக இருக்கவும் வாய்ப்புள்ளது. இருப்பினும் இப்போது வரை, எதுவும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை. மேலும் பல சியோமி ஸ்மார்ட்போன்கள் பற்றிய அப்டேட்ஸ்களுக்கு தமிழ் கிஸ்பாட் வலைத்தளத்துடன் இணைந்திருக்கவும்.

Best Mobiles in India

English summary
Xiaomi's upcoming 'Blackshark' gaming smartphone spotted with Snapdragon 845 SoC, 8GB RAM. Read more about this in Tamil GizBot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X