எம்ஐ மிக்ஸ் ஃபோல்ட் விரைவில் உலகளாவிய அறிமுகும்: இதோ அம்சங்கள்!

|

மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் பிராண்டுகளில் சமீபத்திய பட்டியலில் சியோமி நிறுவனம் இணைந்துள்ளது. சியோமி நிறுவனம் தங்களது வாடிக்கையாளர்களை தக்கவைத்துக் கொள்ள பல்வேறு புதிய அம்சங்கள் கொண்ட ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. அதன்படி தற்போது சியோமி நிறுவனம் ஃபோல்ட் மாடல் ஸ்மார்ட்போன் தளத்தில் அடியெடுத்து வைத்துள்ளது.

எம்ஐ மிக்ஸ் ஃபோல்ட் விரைவில் உலகளாவிய அறிமுகும்: இதோ அம்சங்கள்!

எம்ஐ மிக்ஸ் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் விரைவில் உலகளவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் ஐஎம்இஐ தரவுத்தளங்களில் காணப்படுகிறது. யூ-வடிவ கீல் வடிவமைப்பைக் கொண்ட மடிக்கக்கூடிய இந்த ஸ்மார்ட்போன் தற்போது சீனாவில் கிடைக்கிறது.

டிப்ஸ்டர் முகுல் சர்மா வெளியிட்ட தகவல் குறித்து பார்க்கையில், இந்த ஸ்மார்ட்போன் உலகளவில் ஐஎம்இஐ தரவுத்தளத்தில் M2011J18G உடன் காணப்படுகிறது. இது இந்திய ஐஎம்இஐ தரவுத்தளத்திலும் பட்டியலிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இது விரைவில் நாட்டுக்கு வரும் என்பதை குறிக்கிறது.

சமீபத்திய தொழில்நுட்பத்துடன் சாதனங்களை அறிமுகம் செய்வதில் சியோமி நிறுவனம் மிகவும் புகழ்பெற்றது. சியோமி நிறுவனம் தற்போது புதிய உள்நோக்கி மடிப்பு சாதனத்தை கொண்டு வருகிறது. சியோமி நிறுவனம் ஒரு யூ-வடிவ மடிப்பு அமைப்புமுறையை உருவாக்கியுள்ளது. இது மற்று மடிப்பு சாதனங்களை விட 27% இலகுவானதாகும். இந்த ஸ்மார்ட்போன் இரண்டு வகைகளில் வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் கொரில்லா கிளாஸ் அமைப்போடு வருகிறது.

எம்ஐ மிக்ஸ் ஃபோல்ட் விரைவில் உலகளாவிய அறிமுகும்: இதோ அம்சங்கள்!

கொரில்லா கிளாஸ் பாதுகாப்புடன் வரும் இந்த ஸ்மார்ட்போன் நிலையான பீங்கான் அமைப்பு முறையை கொண்டுள்ளது. பீங்கான் கருப்பு நிற பின்புறத்தோடு லேசர் வேலைப்பாடுகளுடன் கூடிய கோல்ட் மிட் பிரேம் வடிவமைப்பைக் கொண்டுள்ளது. சியோமி எம்ஐ மிக்ஸ் மடிப்பு இரண்டு பதிப்புகளில் முன்னதாகவே சீனாவில் முன்கூட்டிய ஆர்டருக்கு பட்டியலிடப்பட்டுள்ளன. இந்த ஸ்மார்ட்போனின் 12ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி வடிவமைப்போடு கூடிய ஸ்மார்ட்போன் இந்திய விலை மதிப்பு தோராயமாக ரூ.1,12,000 ஆக இருக்கிறது. அதேபோல் 12ஜிபி ரேம் மற்றும் 512ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் விலை இந்திய மதிப்புப்படி தோராயமாக ரூ.1,23,000 ஆகவும் டாப் எண்ட் மாடலான 16ஜிபி ரேம் மற்றும் 512ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் விலை இந்திய மதிப்புப்படி ரூ,1,45,000 ஆக இருக்கிறது.

எம்ஐ மிக்ஸ் மடிப்பு ஸ்மார்ட்போனின் வெளிப்புற டிஸ்ப்ளே அளவு குறித்து பார்க்கையில், இது 6.52 இன்ச் மற்றும் 840x2520 பிக்சல் தீர்மானத்தோடு வரும் அமோலெட் பேனலாகும். இந்த ஸ்மார்ட்போன் 90 ஹெர்ட்ஸ் டிஸ்ப்ளே புதுப்பிப்பு வீதம் மற்றும் 180 ஹெர்ட்ஸ் டச் மாதிரி வடிவமைப்போடு எச்டிஆர் 10+ ஆதரவையும் கொண்டுள்ளது. இது டால்பி விஷன், உள் டிஸ்ப்ளே க்யூஎச்டி ப்ளஸ் தெளிவுத்திறனோடு வருகிறது.

எம்ஐ மிக்ஸ் ஃபோல்ட் விரைவில் உலகளாவிய அறிமுகும்: இதோ அம்சங்கள்!

சியோமி எம்ஐ மிக்ஸ் மடிப்பு ஸ்மார்ட்போன் 16ஜிபி உள்சேமிப்பு மற்றும் எல்பிடிடிஆர் 5 ரேம் மற்றும் 512ஜிபி உள்சேமிப்புடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 888 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனின் கேமரா அம்சங்களை பொறுத்தவரை, இது 108 எம்பி முதன்மை கேமரா, 12 எம்பி அல்ட்ரா வைட் சென்சார், 8 எம்பி டெலிஃபோட்டோ சென்சார் உடன் கூடிய டிரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. அதேபோல் முன்பக்கத்தில் 20 எம்பி செல்பி கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது.

ஸ்மார்ட்போனானது 5020 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இது இரண்டாக 2460 எம்ஏஎச் பேட்டரியாக பிரிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 67 வாட்ஸ் வயர் சார்ஜிங் ஆதரவை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனை 37 நிமிடங்களில் முழுமையாக சார்ஜ் செய்ய முடியும். இணைப்பு ஆதரவுகளை பொறுத்தவரை 5ஜி ட்யூன் செய்த குவாட் ஸ்பீக்கர் அமைப்பை கொண்டிருக்கிறது.

Best Mobiles in India

English summary
Xiaomi's First Foldable Mi Mix Fold Launching Soon in Globally

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X