இன்று: விற்பனைக்கு வரும் ரெட்மி வ்யை3 ஸ்மார்ட்போன்: விலை எவ்வளவு தெரியுமா?
ரெட்மி வ்யை3 ஸ்மார்ட்போனின் பின்புறம் 12எம்பி பிரைமரி கேமரா மற்றும் 5எம்பி வைடு-ஆங்கிள் லென்ஸ் இடம்பெற்றுள்ளது.
சியோமி நிறுவனத்தின் ரெட்மி வ்யை3 ஸ்மார்ட்போன் மாடல் இன்று மதியம் 12மணி விற்பனைக்கு வருகிறது, குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் அமேசான், மி.காம் போன்ற வலைதளங்களில் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த ஸ்மார்ட்போன் மாடல் 32எம்பி செல்பீ கேமராவைக் கொண்டுள்ளதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

டிஸ்பிளே :
ரெட்மி வ்யை3 ஸ்மார்ட்போன் மாடல் 6.26-இன்ச் முழு எச்டி டிஸ்பிளே வடிவமைப்புடன் வெளிவரும், பின்பு 720x1520 பிக்சல் திர்மானம் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு கொண்டுள்ளது.

சிப்செட்:
இந்த ரெட்மி ஸ்மார்ட்போன் மாடல் ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 632எஸ்ஒசி சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது, பின்பு ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவரும் என்பதால் இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

கேமரா
ரெட்மி வ்யை3 ஸ்மார்ட்போனின் பின்புறம் 12எம்பி பிரைமரி கேமரா மற்றும் 5எம்பி வைடு-ஆங்கிள் லென்ஸ் இடம்பெற்றுள்ளது. பின்பு 32எம்பி செல்பீ கேமரா எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு போன்ற அம்சங்கள் இந்த ஸ்மார்ட்போனில் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மெமரி
இந்த ஸ்மார்ட்போனில் 3ஜிபி/4ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி/64ஜிபி உள்ளடக்க மெமரி இடம்பெற்றுள்ளது, பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றுள் அடக்கம். மேலும் இன்-டிஸ்பிளே கைரேகை சென்சார் வசதி கொண்டுள்ளது ரெட்மி வ்யை3 ஸ்மார்ட்போன்.

பேட்டரி
ரெட்மி வ்யை3 சாதனத்தில் 4000எம்ஏஎச் பேட்டரி மற்றும் 25 வாட் சூப்பர் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு உள்ளது. மேலும் டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை,ப்ளூடூத், யு.எஸ்.பி. டைப்-சி போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

விலை:
3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரி கொண்ட ரெட்மி வ்யை3 ஸ்மார்ட்போனின் விலை ரூ.9,999-ஆக உள்ளது. 4ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரி கொண்ட ரெட்மி வ்யை3 ஸ்மார்ட்போனின் விலை ரூ.11,999-ஆக உள்ளது. குறிப்பாக நீலம், கருப்பு, சிவப்பு போன்ற நிறங்களில் இந்த ஸ்மார்ட்போன் கிடைக்கும்.


Click it and Unblock the Notifications