சியோமி ரெட்மி வ்யை2 ஸ்மார்ட்போனுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பு.!
இந்த ஸ்மார்ட்போன் 3ஜிபி/4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.
சியோமி நிறுவனம் தொடர்ந்து தனது ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு விலைகுறைப்பை அறிவித்த வண்ணம் உள்ளது, மேலும் இன்று சியோமி ரெட்மி வ்யை2 ஸ்மார்ட்போன் மாடலுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பு அறிவித்துள்ளது.

மேலும் 3ஜிபி ரெம் கொண்ட சியோமி ரெட்மி வ்யை2 ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.10,499-ஆக இருந்தது, தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு ரூ.8,999-விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோன்று 4ஜிபி ரெம் கொண்ட சியோமி ரெட்மி வ்யை2 ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.13,999-ஆக இருந்தது, தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு ரூ.10,999-விலையில் விற்பனை செய்யப்படுகிறது. பின்பு இந்த ஸ்மார்ட்போனின் பல்வேறு சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

டிஸ்பிளே:
இக்கருவி 5.99-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 1080 பிக்சல் திர்மானம் மற்றும் 18:9 திரைவிகிதம் இவற்றுள் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இக்கருவி வெளிவரும்.

ஆண்ட்ராய்டு ஓரியோ:
ரெட்மி வ்யை2 ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 625 செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். மேலும் இயக்கத்திற்க்கு மிக அருமையாக இருக்கும் இந்த ரெட்மி வ்யை2 ஸ்மார்ட்போன்.

நினைவகம்:
இந்த ஸ்மார்ட்போன் 3ஜிபி/4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கேமரா:
இந்த ஸ்மார்ட்போனில் 12எம்பி + 5எம்பி டூயல் ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின்பு இதனுடைய செல்பீ கேமரா 16மெகாபிக்சல் எனக் கூறப்படுகிறது. மேலும் டூயல் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது. மேலும் பேஸ் அன்லாக் வசதியுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்.

இணைப்பு ஆதரவுகள்:
வைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட்இ, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது. ரெட்மீ வ்யை2 ஸ்மார்ட்போனில் 3080எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications