சியோமி நிறுவனத்தின் போன்களுக்கு விலை குறைப்பு.!
இந்நிலையில், சியோமி நிறுவனம் அனைவரையும் வியக்க வைக்கும் வகையில், தற்போது தனது ரெட்மி நிறுவனத்தின் போன்களான வ்யை 2 , ரெட்மி நோட் 5 புரோ எம்ஐ ஏ2 உள்ளிட்ட மாடல்களுக்கு அதிரடியாக விலையை குறைத்துள்ளது.
இந்தியாவில் சியோமி நிறுவனத்தின் போன்கள் விற்பனையில் முன்னணியில் இருக்கின்றது. இளைஞர்கள் மற்றும் நடுத்தர குடும்பத்தினர் மத்தியிலும் இந்த போன்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கின்றது.

குறைந்த விலையில் அதிக வசதிகளுடன் அழிய மாடல்களுடன் விதவிதமான புதிய போன்கைளயும் தற்போது விற்பனை செய்து கொண்டு வருகின்றது.
இந்நிலையில், சியோமி நிறுவனம் அனைவரையும் வியக்க வைக்கும் வகையில், தற்போது தனது ரெட்மி நிறுவனத்தின் போன்களான வ்யை 2 , ரெட்மி நோட் 5 புரோ எம்ஐ ஏ2 உள்ளிட்ட மாடல்களுக்கு அதிரடியாக விலையை குறைத்துள்ளது.

சியோமி நிறுவனம் சாதனை:
2018ம் ஆண்டு காலாண்டில் சியோமி நிறுவனம் 11.7 மில்லியன்களை ஸ்மார்ட் போன்களை இந்தியாவில் விற்பனை செய்துள்ளது. இந்நிலையில் சியோமி நிறுவனம் தனது போன்களுக்கு அதிரவைக்கும் வகையில் விலையை குறைத்துள்ளது.

சியோமி வ்யை 2:
4ஜிபி மற்றும் 64 ஜிபி மெமரி உடைய இந்த ஸ்மார்ட் போன் விலை ரூ ஆயிரம் விலை குறைக்கப்பட்டுள்ளது. இதனால் தற்போது 11,999க்கு விற்பனை செய்யப்படுகின்றது.

ரெட்மி நோட் 5 புரோ:
ரெட்மி நோட் 5 புரோ விலை 13,999 ஆகும். தற்போது, 12,999 ஆக விலை குறைக்கப்பட்டுள்ளது. இதேபோல் எம்ஐ ஏ2 விலையும் ரூ ஆயிரம் குறைக்கப்பட்டுள்ளது.

2 போன்களுக்கு விலை ஏற்றம்:
ரெட்மி 6 மற்றும் 6 ஏ ஆகிய போன்களுக்கு தற்போது மார்க்கெட்டில் ரூ, 500, 600 விலை ஏற்றம் செய்யப்பட்டுள்ளது. தற்போது ரெட்மி 6 ரூ.8499, 6 ஏவின் விலை ரூ.6599 விற்பனை செய்யப்படுகின்றது.
ஏற்கனவே ரெட்மியின் பவர் பேங்க், சியோமி டிவிகளுக்கும் விலை ஏற்றம் செய்யப்பட்டது குறிப்பிட தக்கது.


Click it and Unblock the Notifications