சியாமி ரெட்மீ வை1 - சியாமி ரெட்மீ நோட் 4: இரண்டில் எது சிறந்தது?

  கடந்த சில நாட்களுக்கு முன் இந்தியாவில் உள்ள ஸ்மார்ட்போன்களில் ஒரு புதிய சீரிஸாக, ரெட்மீ வை1-யை சியாமி நிறுவனம் வெளியிட்டது. ரூ.6,999 என்ற ஆரம்ப விலை நிர்ணயத்துடன் கூடிய ரெட்மீ வை1-ல், 2ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி நினைவகம் கொண்ட துவக்க வகை ரெட்மீ வை1 லைட் என்று அழைக்கப்படுகிறது. இதன் மற்ற வகைகள் ரூ.8,999 மற்றும் ரூ.10,999 என்று விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

  சியாமி ரெட்மீ வை1 - சியாமி ரெட்மீ நோட் 4: இரண்டில் எது சிறந்தது?

  இந்த விலை நிர்ணயத்தை கொண்டு, ஒரு விலைக் குறைந்த செல்ஃபீ கேமரா ஸ்மார்ட்போனாக ரெட்மீ வை1 அறிமுகம் செய்யப்பட்டு, மற்ற தயாரிப்பாளர்களின் விலைக் குறைந்த தயாரிப்புகளுடன் போட்டியிடுவது மட்டுமின்றி, சியாமியின் ஸ்மார்ட்போன்கள் சிறப்பாகவும் உள்ளன.

  நம் நாட்டில் ரூ.10 ஆயிரம் என்ற விலை நிர்ணயத்திற்கு உட்பட்டு, சிறந்து விற்பனையாகும் ஸ்மார்ட்போன்களில் சியாமியின் ரெட்மீ நோட் 4-யும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அதனுடன் ரெட்மீ வை1 போட்டியிடுவதற்கும் அதன் விற்பனையின் ஒரு பகுதியை தன்பால் கவர்ந்திழுக்கவும் ஏற்ற தகுதியுள்ளதாக உள்ளது.

  நீங்கள் ஒரு சியாமி ஸ்மார்ட்போன்களின் ரசிகராக இருப்பதோடு ஒரு விலைக் குறைந்த ஸ்மார்ட்போனை எதிர்நோக்கி இருக்கும் பட்சத்தில், ரெட்மீ வை1 மற்றும் ரெட்மீ நோட் 4 ஆகிய ஃபோன்களின் விவரங்களை ஒப்பிட்டு கீழே அளித்துள்ளோம். இதன்மூலம் இவ்விரு ஃபோன்களுக்கும் இடையிலான வேறுபாடுகளை நீங்கள் புரிந்து கொள்ள எதுவாக இருக்கும். எனவே கீழ்க்காணும் கட்டுரையைத் தொடர்ந்து படியுங்கள்.

  முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

  டிஸ்ப்ளே

  சியாமி வை1-ல், 1280 x 720 பிக்சல் ஹெச்டி பகுப்பாய்வு உடன் கூடிய ஒரு 5.5-இன்ச் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்ப்ளே காணப்படுகிறது. மற்றொருபுறம் ரெட்மீ நோட் 4-ல் ஒரு எஃப்ஹெச்டி 1920 x 1080 பிக்சல் பகுப்பாய்வு உடன் கூடிய 5.5-இன்ச் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்ப்ளே-யை கொண்டு, இந்தப் பிரிவிலேயே சற்று உன்னதமான இடத்தைப் பெற்றுள்ளது. இந்த அடிப்படையில், ரெட்மீ வை1-யை விட அதிக பிக்சலை கொண்ட ரெட்மீ நோட் 4-ல் ஒரு சிறந்த தரமான டிஸ்ப்ளே காணப்படுகிறது.

  ஹார்டுவேர்

  ரெட்மீ வை1-ன் உள்ளே ஒரு குவாட்-கோர் ஸ்னாப்டிராகன் 435 எஸ்ஓசி காணப்படுகிறது. இந்த செயலி உடன் 3ஜிபி அல்லது 4ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி அல்லது 64ஜிபி வழக்கமான நினைவக கொள்ளளவு காணப்படுகிறது. ஒரு மைக்ரோஎஸ்டி கார்டை பயன்படுத்தி, இந்த நினைவகத்தை 128ஜிபி ஆக விரிவுப்படுத்த முடியும். இதன் ஒப்பீடாக, ரெட்மீ நோட் 4-ல் அதிக சக்தி வாய்ந்த ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 625 எஸ்ஓசி உடன் 2ஜிபி/3ஜிபி/4ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி/64ஜிபி நினைவக கொள்ளளவு காணப்படுகிறது. இதை 128ஜிபி வரை மேலும் விரிவுப்படுத்த முடியும்.

  சாஃப்ட்வேர்

  சியாமியின் தயாரிப்பில் ரெட்மீ வை1 என்பது நவீன அறிமுகமாக உள்ளது. இதனால் எம்ஐயூஐ 9-யை அடிப்படையாக கொண்ட ஆன்ட்ராய்டு 7.0 நெவ்கட் பயன்படுத்தி இது இயங்குகிறது. அதே நேரத்தில் சற்று பழைய மாடலாக உள்ள ரெட்மீ நோட் 4, ஆன்ட்ராய்டு மார்ஷ்மாலோ ஓஎஸ் கொண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக, இந்தியா முழுவதும் எம்ஐயூஐ 9-ன் நிலையான புதுப்பிப்பு பரவ ஆரம்பித்துள்ள நிலையில், ரெட்மீ நோட் 4-லும் இந்த புதுப்பிப்பு கிடைக்கப் பெற ஆரம்பித்துள்ளது.

  கேமரா

  ரெட்மீ வை1 மற்றும் ரெட்மீ நோட் 4 ஆகியவை கேமரா திறனில் முக்கியமாக வேறுபடுகின்றன. சமீபகால சாதனத்தில் 13எம்பி முக்கிய கேமரா உடன் அதன் பின்புறத்தில் பிடிஏஎப், எல்இடி பிளாஷ் மற்றும் எஃப்/2.2 துளை ஆகியவை காணப்படுகின்றன. முன்பக்கத்தை பொறுத்த வரை, ஒரு 16எம்பி செல்ஃபீ கேமரா உடன் எல்இடி செல்ஃபீ லைட் காணப்படுகிறது.

  ரெட்மீ நோட் 4-லும் மேற்கூறியது போன்ற 13எம்பி சென்ஸர் பின்பக்க கேமரா உடன் பிடிஏஎஃப், எஃப்/2.0 துளை மற்றும் இரட்டை-டோன் எல்இடி பிளாஷ் ஆகியவை காணப்படுகின்றன. இதில் முக்கியமான வேறுபாடு என்னவென்றால், முன்பக்கத்தில் 5எம்பி கேமரா உடன் 85-கோணத்தில் பரந்த கோண பார்வை மற்றும் எஃப்/2.0 துளை ஆகியவை மட்டுமே காணப்படுகின்றன. இதன் உருவாக்கத்தில் செல்ஃபீ ஸ்மார்ட்போன் பிரிவில் பெரிய அளவில் கவனம் செலுத்தவில்லை என்பதால், ரெட்மீ வை1-யை போல முன்பக்கத்தில் செல்ஃபீ பிளாஷ் இதில் கிடையாது.

  நோக்கியா 6, 7 பிளஸ், 8 சிரோக்கோ-வின் இந்திய விலை நிர்ணயம் அறிவிப்பு.!

  பேட்டரி மற்றும் மற்ற அம்சங்கள்

  ரெட்மீ நோட் 4 உடன் ஒப்பிடும் போது, ரெட்மீ வை1-யை பின்னுக்கு தள்ளக்கூடிய ஒரே அம்சம் பேட்டரி திறன் ஆகும். அப்படி நாங்கள் கூற காரணம் என்னவென்றால், ரெட்மீ நோட் 4-ல் உள்ள விரைவு சார்ஜிங் செய்யும் திறன் கொண்ட 4100எம்ஏஹெச் பேட்டரி, சியாமியின் புதிய தயாரிப்பில் உள்ள 3080எம்ஏஹெச் பேட்டரியை விட சிறப்பாக உள்ளது.

  How To Increase the Speed of your Laptop (TAMIL)
  முடிவு

  முடிவு

  மேலே குறிப்பிட்டுள்ள வேறுபாடுகளில் இருந்து, செல்ஃபீ கேமராவில் உள்ள சிறப்பை தவிர, ரெட்மீ வை1 உடன் ஒப்பிடும் போது, பெரும்பாலான சிறப்பம்சங்களைக் கொண்ட ரெட்மீ நோட் 4 சிறப்பானது என்பது விளங்கும். ஒரு 16எம்பி செல்ஃபீ கேமரா மற்றும் பிளாஷ் கொண்ட ரெட்மீ வை1, ஒரு சிறந்த விலைக் குறைந்த செல்ஃபீ ஸ்மார்ட்போனாக உள்ளது. அதே நேரத்தில், ரெட்மீ நோட் 4 உடன் போட்டியிடும் அளவிற்கு, செயலி ஆற்றல், பேட்டரி திறன் மற்றும் டிஸ்ப்ளே தரம் போன்ற அம்சங்களில், அதற்கு திறன் இருப்பதாக தெரியவில்லை.

  மற்ற எந்தச் செயல்பாடுகளையும் விட, உங்களுக்கு சிறந்த செல்ஃபீ படங்களை எடுப்பதில் மட்டுமே அதிக ஆர்வம் இருந்தால், ரெட்மீ நோட் 4 உடன் ஒப்பீடில் விலைக் குறைவாக கிடைக்கும் ரெட்மீ வை1-யை தேர்ந்தெடுக்கலாம். மற்றொருபுறம், சிறந்த பேட்டரி நீடிப்பு மற்றும் பன்முக செயல்பாடுகளைக் கொண்டதாக இருக்கும் ஒரு ஸ்மார்ட்போனைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று நீங்கள் விரும்பினால், ரெட்மீ நோட் 4-யை நீங்கள் தேர்ந்தெடுக்கலாம்.

  முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

  Read more about:
  English summary
  Xiaomi Redmi Y1 and Redmi Note 4 are compared over here to know which one of these budget smartphones is better. The Redmi Y1 has a better selfie camera with a 16MP sensor and Selfie flash. On the other hand, the Redmi Note 4 has a 4100mAh battery that is more capacious.
  X

  இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot

  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Gizbot sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Gizbot website. However, you can change your cookie settings at any time. Learn more